திங்கள், 9 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 2

சென்ற பதிவில்,வங்கியாளர்களைப் பற்றிய ஒரு Rhyme
ஒன்றை பதிவேற்றி இருந்தேன்.நண்பர் திரு ADAM
அவர்கள் அது ஜோக் அல்ல என்று பின்னூட்டம்
இட்டிருந்தார்.

அவருக்கும்,அவரது கருத்தை ஆதரிக்கும்
நண்பர்களுக்கும் இலண்டனிலிருந்து வரும்
'The Guardian' சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

“What’s the problem with Banker Jokes? Bankers
don’t think they’re funny, normal people
don’t think they’re Jokes.”

எனவே நான் பதிவேற்றுவது நகைச்சுவையாக சிலருக்கு
தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதில் கிண்டல்
இருப்பதை நிச்சயம் அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்
என நம்புகிறேன்.

இனி !

ஒரு மனிதன் நீண்ட நாட்கள் கடவுளை நினைத்து
ஊண் உறக்கமின்றி தவம் இருந்தான்.அவனது தவத்தை
மெச்சி கடவுள் அவன் முன் தோன்றி,‘பக்தா! உன்
தவத்தை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்.’ என்றார்.

அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! இப் பிறவியில்
நான் பார்த்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.
மன நிறைவும் கிடைக்கவில்லை.எனவே அடுத்த
பிறவியிலாவது நான் விரும்பும் வேலை கிடைக்க
வரம் தரவேண்டுகிறேன்.’ என்றான்
.
கடவுளும் ‘சரி அப்படியே ஆகட்டும்.நீ என்ன
வேலையில் சேர விரும்புகிறாய் ?’என்றார்.

‘ஈசனே! நான் அடுத்த பிறவியில் ஒன்று
திரைப்பட நடிகனாக வேண்டும் அல்லது
இந்திய அரசுப் பணியில் (I.A.S.) சேரவேண்டும் அல்லது வங்கி மேலாளராக வேண்டும்.’என்றான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வுலகில்
எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூன்றை
மட்டும் ஏன் இவன் தேர்ந்தெடுத்திருக்கிறான்
என எண்ணி, ’ஏனப்பா, நடிகனாக வேண்டும்
என்கிறாய்?’ என்றார்.

‘ஐயனே! திரைப்பட நடிகனானால் வயதானாலும்
கூட நடித்துக்கொண்டு இருக்கலாம். எப்போதும்
இளைஞனாக நடிப்பதால் தன்னைவிட பல மடங்கு
வயதில் குறைந்த குமரிகளோடு ‘டூயட்’ பாடி
காதல் செய்ய இயலும். தயாரிப்பாளர் செலவில்
உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்கமுடியும்.

ஒரே ஆளாக இருந்து அநேகம் பேரை ஒரே சமயத்தில்
துவம்சம் செய்ய முடியும். சீறி வரும் ‘புல்லெட்’டை
கூட பல்லால் கடித்து பிடித்து திரும்ப வந்த இடத்திற்கே
அனுப்பமுடியும்.

நடிப்புக்காக தரும் பணத்தை கறுப்பு பணமாக
வாங்கிக்கொண்டு வருமான வரித்துறையையும்
அரசையும் ஏமாற்ற முடியும். அப்பாவி/ஏமாளி
இரசிகனை உசுப்பேற்றி மன்றம் வைக்க ஆதரவு
கொடுத்து பின்னால் அதை அரசியல் கட்சியாக மாற்றி
பதவியில் அமர முடியும்.மொத்தத்தில் படிக்காமலேயே
எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும்.’ என்றான்.

‘சரி.ஏன் I.A.S. ஆக வேண்டும் என்கிறாய்?’ என்றார் கடவுள்.

I.A.S. ஆனால் தொழில் நுட்ப படிப்பு
படிக்க வில்லை என்றாலும் கூட,ஓராண்டு முசோரியில்
தரும் பயிற்சிக்கு பிறகு ‘எல்லாம் தெரிந்தவராக’
ஆகிவிடலாம். பணிக்காலத்தில் Electronics Corporation
தலைவராகவும் ஆகலாம். Atomic Energy Commission
தலைவராகவும் ஆகலாம். The Indian Council of
Agricultural Research (ICAR)
தலைவராகவும்
ஆகலாம் அல்லது Hindustan Aeronautics Limited (HAL)
தலைவராகவும் ஆகலாம். மொத்தத்தில் நினைத்த
துறைக்கு தலைவராக ஆகலாம்.

‘ஊதிய கமிஷன்’ சம்பளம் நிர்ணயிக்கும்போது
தங்களுக்கு எல்லோரை விடவும் அதிகம் வருமாறு
பார்த்து கொள்ளலாம். பணியின் போது அரசு செலவில்
வெளி நாட்டில் சென்று படித்தும் வரலாம்.

பணி நிறைவுக்கு பின் ‘World Bank அல்லது
'Asian Development Bank’ போன்றவைகளில்
கொழுத்த சம்பளத்தில் அமர்ந்துவிடலாம்.
அதனால் தான் I.A.S. ஆக விரும்புகிறேன்’
என்றான்.

‘அது சரி.ஏன் வங்கி மேலாளராக ஆக
வேண்டுமென்கிறாய்?’ என்றார் கடவுள்.

‘இறைவா, வங்கி மேலாளராக ஆனால்,
தொழில் நுட்பம் தெரியாவிட்டாலும் கூட,
தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் கடன்
அனுமதி வழங்கமுடியும். காரணம் இல்லாமலேயே
கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும்.
பெரிய முதலாளிகளுக்கு கடனைக்கொடுத்துவிட்டு
அவைகளை வாராக்கடன் என அறிவித்து அதற்கான
‘பலனை’ அனுபவிக்க முடியும்.

மொத்தத்தில் ஒரு அரசனைப்போல் வாழமுடியும்.’
என்றான்.

அவனுடைய பதிலைக்கேட்ட கடவுள்
‘மறைந்தே’ போனார்!!



நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

5 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி திரு குடந்தை அன்புமணி அவர்களே! தங்களது முயற்சிக்கு எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கடவுளுக்கு வந்த சோதனை!
    நன்று!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. நல்ல வேளை.. வங்கி மேலாளராக பணியாற்றும் போதே I.A.S படிப்பு படித்து அதன் பலனையும் அனுபவித்து பிறகு அதன் மூலம் கிடைத்த அதிகார பலத்தை கொண்டு நடிகன் ஆக வேண்டும் என்ற வரன் கேட்காமல் விட்டாரே . நிற்க மறைந்த கடவுள் தானே இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன் ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    நன்றாகச் சொன்னீர்கள். அதனால்தான் ‘ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே’ என்றார் தாயுமானவர்.

    பதிலளிநீக்கு