வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

பிரியமுடன் விருது!



கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-02-2012) இரவு
திரு சென்னை பித்தன் அவர்கள் என்னைக் கூப்பிட்டு,
மதுமதி அவர்களுடைய வலைப்பதிவைப்
பார்த்தீர்களா?’ என்றார்.

அதற்கு நான் ‘இரண்டு நாட்களாக ஒரு முக்கிய
பணி காரணமாக வலைப்பக்கமே போகவில்லை.
என்ன விஷயம்?’ என்றதும்,அவர் ‘உங்களது பதிவுக்கு
திரு மதுமதி அவர்கள் Liebster விருது கொடுத்து
இருக்கிறார்.அவரது வலைப்பதிவை பாருங்கள்’
என்றார்.

Liebster விருது என்னவென்று தெரியாததால் எனக்கு
ஒன்றும் விளங்கவில்லை.எனது வலைப்பதிவிலும்
திரு மதுமதிஅவர்கள் தனது வலைப்பதிவில்
என்னைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதாக இடுகை இட்டு
இருந்தார்.

உடனே அவரது ‘தூரிகையின் தூறல்’ என்ற
வலைப்பதிவை பார்த்தபொது எனக்கு இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது. நண்பர் கவிஞர்
திரு மதுமதி அவர்கள் என்னையும் சேர்த்து
ஐவருக்கு Liebster விருதை வழங்கியிருந்தார்.

உடனே Liebster என்றால் என்ன பொருள் என்று
ஆவலோடு பார்த்தபோது,அதற்கு ஜெர்மன் மொழியில்
பிரியமான அல்லது விருப்பமான எனப் பொருளாம்.

அந்த விருதைப் பெறுபவர்கள் விருதைத் தந்தவருக்கு
நன்றி தெரிவித்து அவரது வலைப்பதிவுக்கு தங்கள்
பதிவில் இணைப்புத் தரவேண்டும் என்றும்,Liebster ன்
சின்னத்தை தங்களது வலைப்பதிவில் போடவேண்டும்
என்றும், தங்களுக்கு பிடித்த தாங்கள் பாராட்டுகின்ற,
வளர்ந்து வரும் மூன்று அல்லது ஐந்து
வலைப்பதிவாளர்களுக்கு அந்த விருதை தரவேண்டும்
என்றும் விருது தந்த விவரத்தை அந்த
வலைப் பதிவாளர்களின் வலைப்பதிவில் அது பற்றி
இடுகை இடவேண்டும் என்பது எழுதப்படாத விதி
என அறிந்தேன்.

இந்த விருது பெற எனது பதிவுக்கு தகுதி உள்ளதா
எனத்தெரியவில்லை.நான் எனக்கு ஏற்பட்ட
அனுபவங்களைத்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
புதிதாக எதுவும் படைக்கவில்லை.ஆனாலும் நண்பர்
திரு மதுமதி அவர்கள் என் பேரில் உள்ள அன்பால்,
எனது வலைப்பதின் மேல் உள்ள பிரியத்தால் இந்த
விருதை தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அவருக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்!

திரு மதுமதி அவர்களுக்கு சகோதரி ஸ்ரவாணி
விருதைத்தர, நண்பர் திரு மதுமதி அவர்கள்
என்னையும் சேர்த்து ஐவருக்கு விருது தந்திருக்கிறார்.

அவர் விருது கொடுத்த பதிவாளர்கள் விவரம் இதோ.
1.பல் சுவை நிகழ்வுகளை தன் வலையில் எழுதும் தோழர்
வீடு சுரேஷ்
http://www.artveedu.com

2.தன் அனுபவங்களை அழகாக விவரிக்கும்
நினைத்துப் பார்க்கிறேன் ஐயா வே.நடன சபாபதி
http://puthur-vns.blogspot.in

3.கவிதைகளால் கவரும் தென்றல் சசிகலா
http://veesuthendral.blogspot.in

4.அவசியமான செய்திகளைத் தரும் தோழர் சுவடுகள்
http://shuvadugal.blogspot.in

5.பல்சுவையைத் தரும் தோழர் அரசன்
http://karaiseraaalai.blogspot.in


விருதின் விதிகளின் படி,நான் விருது தரும் அந்த மூன்று
வலைப்பதிவாளர்கள்.

1.நாம் பேச நினைப்பதையெல்லாம் தான் பேசி, தினம்
பல்சுவை விருந்து படைக்கும் திரு சென்னை பித்தன்
அவர்கள்.

2.நாட்டு நடப்பை சமூக கண்ணோட்டத்தோடு தரும்
திரு க.வாசுதேவன் அவர்கள்.

3.தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய
தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.

விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள்
பதிவில் ஏற்றி தங்களுக்கு பிடித்த மூன்று அல்லது
ஐந்து வலைப்பதிவுகளுக்கு விருதைத் தர
வேண்டுகிறேன்.

எனது வலைப்பதிவுக்கு விருது தந்தமைக்காக
நண்பர் கவிஞர் திரு மதுமதி அவர்களுக்கு மீண்டும்
எனது நெஞ்சார்ந்த நன்றி!

17 கருத்துகள்:

  1. விருதுக்கு நன்றி சபாபதி அவர்களே!விருதுகள் எப்போதுமே மகிழ்ச்சியுடன் கவலையையும் கொண்டு வந்து விடுகின்றன.விருதில் மகிழ்ச்சி. இன்னும் சிறப்பாக எழுத வேண்டுமே என்ற கவலை!
    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. விருதுகள் தருவதே மேலும் மேலும் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகத்தான்.நீங்கள் அப்படி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. பதிவுலகத்தில் நடை பழகும் பாலகனாகிய எனக்கு விருது கொடுத்து கௌரவித்தமைக்கு நன்றி . விரைவில் நடை பயின்று ஓடுவதற்கு முயற்சிக்க தந்த ஊக்க மருந்தாக இதை கருதி மிக விரைவில் தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அந்த தில்லை அம்பலத்தான் அருள் வேண்டுகிறேன் . வாசு

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி ஐயா..தங்களையும் தங்கள் வலைப்பூவையும் எனக்குப் பிடிக்கும் உண்மைதான்.உங்களது இறந்த கால அனுபவங்களை இனிமையாக சொல்லும் விதம் பிடிக்கும்.நீங்கள் ஏன் சிறுகதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதுவதில்லை. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.முயற்சிக்கலாமே.

    பதிலளிநீக்கு
  5. சென்னைப் பித்தன் அவர்கள் சொன்ன வார்த்தைகளை அப்படியே நானும் வழிமொழிகிறேன். (என்னைச் சொல்ல விடாமல் என் மனதிலுள்ளதை பிரதிபலித்து விட்டார்.)

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! உங்களால் முடியும் என எனக்குத் தெரியும்.விரைவில் உச்சத்தை தொட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி திரு மதுமதி அவர்களே! பாராட்டுக்கு நன்றி.

    எனது அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் ஒரு எழுத்தாளர். ஒருவேளை அவர் எழுதுவதைப் பார்த்து எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் என ஆசை வந்திருக்கலாம்.

    நான் கதை எழுத முயற்சித்தது
    பற்றி விரிவாக நினைவோட்டம்
    46, 47, & 48 தொடர்களில் விரிவாக எழுதியிருக்கிறேன்.தங்களது யோசனைப்படி நடக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
    திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி சகோதரரே. தங்களிடமிருந்து விருதைப் பெற்றதற்கு மகிழ்வடைகிறேன்.
    இது இந்த வலைச் சேவையால் நான் பெறும் இரண்டாவது பரிசு.
    முதலாவதாக முனைவர் இரா.குணசீலன் அவர்கள் தந்தது.(சிந்தனைச் சிற்பி விருது.)
    மீண்டும் நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  11. தங்களது வலைச்சேவை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..
    http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  13. வலைச்சரத்தில்,‘அனுபவங்களை அனுபவிக்கலாம்’ என்ற தலைப்பின் கீழ் எனது பதிவைப்பற்றி எழுதி என்னை பெருமைப் படுத்தியதற்கு நன்றி
    திரு மதுமதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கு versatile blogger விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கு நன்றி
    திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  16. Versatile Blogger விருதை தந்தமைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு