வெள்ளி, 9 மார்ச், 2012

பல்திறப் புலமை விருதும் நானும்!

கவிஞர் மதுமதி அவர்கள் எனக்கு Liebster விருது
கொடுத்த ஒரு வாரத்திற்குள் 17-02-2012 அன்று
நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள்
வலைப்பதிவில் ஜாம்பவான்களான நான்கு
பதிவர்களோடு என்னையும் சேர்த்து ஐவருக்கு
“Versatile blogger award” என்ற விருதை வழங்கி
கௌரவப்படுத்தியிருந்தார். அவருக்கு
முதற்கண் எனது மனமார்ந்த நன்றி!




விருது கிடைத்த உடனேயே இது பற்றி எழுதாது
மௌனம் காத்ததன் காரணம் உண்மையிலேயே
நான் இந்த விருது பெறத்தகுதி உடையவனா என
யோசித்துக்கொண்டு இருந்ததால் தான்.

நான் 2009 சனவரியில் இருந்து தான் வலைப் பதிவில்
எனது அனுபவங்களை வெவ்வேறு தலைப்புகளில்
எழுதிக்கொண்டு இருக்கிறேன். மூத்த பதிவர்கள்
மற்றும் புதியாய் வந்துள்ள பதிவர்களைப்
பார்க்கும்போது,நான் ஒன்றும் பெரிதாய்
சாதிக்கவில்லை என்பது எனது தாழ்மையான
கருத்து.

இருப்பினும் எனது தகுதியைவிட,விருது தந்து
கௌரவித்துள்ள நண்பர் திரு சென்னை பித்தன்
அவர்களின் தகுதியையும்,நோக்கத்தையும்
பார்க்கும்போது இந்த விருதை அவரிடமிருந்து
பெறுவதில் உண்மையிலேயே நான்
பெருமைப்படுகிறேன்.

இந்த விருதைப் பெறுவோர் தங்களுக்குப் பிடித்த
ஏழு விஷயங்களைப் பதிவிட்டது மட்டுமல்லாமல்
இந்த விருதை மேலும் ஐந்து பேருக்கு வழங்க
வேண்டுமாம்.

முதலில் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைக்
குறிப்பிட விரும்புகிறேன்.

நேரம் தவறாமை
நண்பர்களுடன் கலந்துரையாடல்
பழைய(60 களில் வந்த)திரைப்பட பாடல்கள்
கல்கியின் சரித்திர நாவல்கள்
கேலிச்சித்திரங்கள் (கார்ட்டூன்கள்)
அரசியல் செய்திகள்
பிறர்க்கு உதவுதல்

வலைப்பதிவில் எழுதுவோர் அனைவருமே
பல்துறை அறிவும், திறமையும் வாய்ந்தவர்களாக
இருப்பதால்,"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்ற எண்ணத்தில் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே
(இவ்விருதை பெற்றவர்கள் நீங்கலாக) இந்த
பல்திறப் புலமை வாய்ந்த பதிவர் விருதை
(Versatile blogger award”) அளிக்கிறேன்.

8 கருத்துகள்:

  1. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா..
    "வலைப்பதிவில் எழுதுவோர் அனைவருமே
    பல்துறை அறிவும், திறமையும் வாய்ந்தவர்களாக
    இருப்பதால்,"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
    என்ற எண்ணத்தில் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே
    (இவ்விருதை பெற்றவர்கள் நீங்கலாக) இந்த
    பல்திறப் புலமை வாய்ந்த பதிவர் விருதை
    (Versatile blogger award”) அளிக்கிறேன்"

    சிறப்பான அறிவிப்பு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
    திரு மதுமதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க! நீங்கள் கூறியிருப்பது உண்மையே.பதிவு எழுதும் அனைவருமே திறமைசாலிகள்தான்.சிலர் அதிகம் எழுதுகிறார்கள்;சிலர் குறைவாக எழுதுகிறார்கள். அவ்வளவே. எனவே தாங்கள் அளித்திருக்கும் முறை பொருத்தமானதே.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. பதிவர்கள் அனைவரையும் பாராட்டும் தங்கள் கருத்து அருமை .

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
    பதிவர்கள் அனைவரையும் பாராட்டும் தங்கள் கருத்து அருமை .

    God bless you.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு