வியாழன், 21 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 24

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு திரும்ப கிளைக்கு வந்தபோது
கிளையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பான்மையோர்
வங்கிக் கிளை இருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த ஒரு
சைக்கிள் கடையருகே நின்றுகொண்டு இருந்தனர்.

(அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தான் எங்கள் கிளை இருந்தது)

ஒருவேளை ஊழியார் சங்கம் நடத்தும் இடைவேளை நேர
போராட்டமோ என நினைத்து, நண்பர் மாத்யூசிடம் ஏன் இவர்கள் மேலே செல்லாமல் கீழே நிற்கிறார்கள்? ஏதேனும் போராட்டமா? ஆனால் மௌனமாக நின்றுகொண்டு இருக்கிறார்களே? என்று கேட்டதற்கு அவர் சொன்னார். மாடிக்கு செல்லும் கதவுகள் உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறது. உணவுஇடைவேளையின்போது கிளையில் இருக்க யாருக்கும் அனுமதியில்லை.மதியம் 3 மணிக்குத்தான் கிளையின்கதவுகள் திறக்கப்படும். அதுவரை எல்லோரும் கீழே காத்திருக்கவேண்டியதுதான். என்று.
மேலே யார் இருக்கிறார்கள்?’ எனக் கேட்டதற்கு, மேலாளருடன்,ஒரு உதவி மேலாளர், ஒரு சிறப்பு உதவியாளர், ஒரு சுருக்கெழுத்தர், ஒரு எழுத்தர், மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் உணவு இடைவேளையின்போது அங்கே இருக்க அனுமதி. மற்றவர்கள் எல்லாம். மதியம்3 மணிக்குத்தான் கிளைக்குள் செல்ல முடியும். என்றார் நண்பர் மாத்யூஸ்.
ஏன்.அப்படி?’ என்றதற்கு அதைக் கேட்க இங்கு யாருக்கும் தைரியம் இல்லை.பயிற்சியில் இருப்பதால் நாமும் எதுவும் பேசமுடியாது.என்றார்.
ஒரு நாட்டுமையாக்கப்பட்ட வங்கியில், உணவு இடைவேளையின்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் இருக்க அனுமதிப்பது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் பட்டது எனக்கு.
நான் அந்த கிளக்குள் காலையில் நுழைந்தபோது இந்த மேலாளர் வித்தியாசமானவர்தான் என நினத்தது சரிதான் போலும் என நினைத்துக்கொண்டேன்.
நான் மேலும் விசாரிக்கத் தொடங்கியபோது மூடப்பட்டிருந்த அந்த 'வாசல்திறக்கப்பட்டதால், நண்பர் அது பற்றி மாலையில் பேசலாம் என்று கூறிவிட்டு மேலே செல்லத் தொடங்கினார்.நானும் அவர் பின் தொடர்ந்து கிளைக்குள் நுழைந்தேன்.
காலையில் எல்லோரும் வேலையில் மும்முரமாக இருந்ததால் உடன் பணியாற்றிய ஊழியர்களிடம் என்னால் பேச முடியவில்லை. மதியம் வாடிக்கையாளர் நேரம் இல்லையாதலால்,அப்போதாவது பேசலாம் என நினைத்தால் யாருமே என் பக்கம் திரும்பவில்லை.என் அருகில் இருந்த ஒருவர் (அவர் கர்நாடகாவை சேர்ந்தவர்) என்னைப்பற்றி விசாரித்தார். மற்றபடி வங்கிக் கிளையில் ஒரு அசாதாரணம் நிலவியதையும்,அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருப்பது போலவும் உணர்ந்தேன்.
மாலையில் 5.30 மணிக்கு வங்கியில் அலுவலக நேரம் முடிந்ததும், அறைக்கு திரும்பினேன். வங்கியில் என்ன நடக்கிறது மற்றும் அந்த மேலாளர் எப்படிப் பட்டவர் எனத்தெரிந்துகொள்ள ஆவல் இருந்ததால், அதைப்பற்றி அறிய அதே விடுதியிலேயே தங்கியிருந்த திரு மாத்யூஸ் அவர்கள் அறைக்கு செல்ல கிளம்பியபோது அவரே எனது அறைக்கு கிளையில் எழுத்தர்களாக பணிபுரியும் மூன்று நண்பர்களோடு வந்தார்.
என் வயதையொத்த அவர்களில் இருவர் அந்த ஊரை சேர்ந்தவர்கள்தான். ஒருவர் மட்டும் அருகில் இருந்த ஊரை சேர்ந்தவர். ஆனால் கிளை இருந்த ஊரில் சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அவர்கள் மூவரையும் அறிமுகப்படுத்திவிட்டு நீங்கள் உங்கள் சந்தேகங்களை இவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.” என்றார்.
நான் மதியம் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அதைப்பற்றி விசாரித்தபோது அவர்கள் மூவரும் நன்றாக பேசினார்களே தவிர நான் புதியவன் என்பதால் என்னிடம் நான் கேட்டதற்கு பதில்சொல்லாமல். நீங்கள் தான் இங்கு மூன்று மாத காலம் இருக்கப்போகிறீர்களே. எல்லாம் தங்களுக்குத் தானே தெரிய வரும். என்று பூடகமாக சொன்னார்கள்.
வற்புறுத்தி கேட்டதில், அவர்கள் சொன்னதை கேட்டதும் மகிழ்ச்சியாக தேசிய விதைக்கழகத்தில் சுதந்திரமாக பணியாற்றதை விட்டுவிட்டு, வங்கியில் சேர்ந்தது தவறோஎன்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது.

தொடரும்

14 கருத்துகள்:

  1. தொடக்கமே இப்படி என்றால் பயம் இருக்கத்தானே செய்யும்.ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  2. ஐயா வந்துவிட்டேன்..எப்படி இருக்கிறீர்கள்..தங்கள் தளத்திற்கு வரவேண்டும் என அவ்வப்போது 'நினைத்துப் பார்க்கிறேன்'..தொடர்ந்து வரமுடியவில்லை.இனி தொடருகிறேன்..வங்கியில் சேர்ந்தது தவறோ என நினைக்கும்படி என்ன நேர்ந்தது..ஆவலாக உள்ளேன்..

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உண்மைதான். ஆரம்பத்தில் இருந்த பயம் நாட்கள் செல்ல செல்ல தானே ஓடிவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், தொடர்வதற்கும், விசாரிப்புக்கும் நன்றி கவிஞர் மதுமதி அவர்களே! எனது தளத்திற்கு வரவேண்டும் என நீங்கள் நினைப்பதே வந்தது போலத்தான்.

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரே பூடகமாக உள்ளது!. மிக ஆவல் மேலிடுகிறது....அடுத்தது என்ன என்று. அப்பப்பா! எத்தனை விதமான மனுசர்கள்!.தொடருங்கள் வருவேன். பாராட்டுகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
    தங்கள் கருத்து சரிதான்.

    பதிலளிநீக்கு
  9. இனிய வார இறுதி அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! தங்களுக்கும் இந்த வார இறுதி இனியதாய் அமையட்டும்!

    பதிலளிநீக்கு
  11. இந்த வங்கிக்கிளையில் நடப்பதெல்லாம் ஒரே மர்மமாக உள்ளது.

    யாருமே மனம் விட்டு ஓபனாகப் பேசவும் மாட்டார்கள் போலிருக்குது.

    மேலும் படித்தால்தான் உண்மைகள் சில தெரியவரும் போலிருக்குது. பார்ப்போம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உண்மைதான். அங்கு நடந்தவையெல்லாம் மர்மம் போலத்தான் அப்போது எனக்குத் தெரிந்தது.

      நீக்கு