செவ்வாய், 9 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 8




ஒரு நாள் மதியம் வங்கிக் கிளையில் அமர்ந்து காலையில்  
ஆய்வுக்கு சென்று வந்த பண்ணைகள் பற்றிய எனது 
அறிக்கையை தயார் செய்து கொண்டு இருந்தேன். அப்போது 
கிராமவாசி ஒருவர் தயங்கித் தயங்கி வங்கிக்குள் வந்தார்.

அவர் Counter அருகே வந்ததும் அவர் விவசாயி போல் 
தோற்றமளித்ததால் ‘என்ன வேண்டும்?” எனக் கூட கேட்காமல், வழக்கம்போல் அவரிடம்என்னைக்காட்டி அவரைப் போய்  
பாருங்கள் என என்னிடம் அனுப்பிவிட்டார்கள்.

அவர் நேரே என்னிடம் வந்ததும், அவரை வரவேற்று 
உட்கார சொல்லி,அவருக்கு ஏதாவது விவசாயக் கடன் 
தேவையா   எனக் கேட்டேன். அவர் அதெல்லாம் வேண்டாங்க. 
இதைப்பாருங்க. என்று தயங்கியபடி கையில் வைத்திருந்த 
பையிலிருந்து ஒரு கத்தை தாட்களை என்னிடம் நீட்டினார்.

அவைகளை வாங்கிப் பார்த்தபோது,அவைகள் பாரத ரிசர்வ் 
வங்கியால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட காலத்தில்
முதிர்வடையைக்கூடிய பத்திரங்கள்(Bonds). அந்த பத்திரங்கள் 
முதிர்ச்சி காலம் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
பத்திரங்களின் முதிர்வுத்தொகை மட்டும் ரூபாய் 15,000 க்கு 
மேல் இருக்கும்.

நான் அவரிடம், ‘இந்த பத்திரங்களை எங்களிடம் ஏன் 
தருகிறீர்கள்?இவைகள் முதிர்ச்சி அடைந்தவுடன் சென்னை 
ரிசர்வ் வங்கிக்கு அல்லவா அனுப்பி பணத்தை 
பெற்றிருக்கவேண்டும். இப்போது வந்து எங்களிடம்  
கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது?’ என்றேன்.

அதற்கு அவர் சார். இந்த பத்திரங்களை வருவாய்த்துறை 
ஆய்வாளரும்(Revenue Inspector), வட்டாட்சியரும் (Tashildar) 
சில ஆண்டுகளுக்கு முன்எங்கள் ஊருக்கு வந்து வாங்கச்
சொல்லி கட்டாயப்படுத்தியால் வாங்கும்படி ஆகிவிட்டது. 
இந்த பத்திரங்களை வாங்க சொன்னவர்கள் அது எப்போது
முதிர்ச்சி அடையும் என்றோ, பணத்தை எப்போது 
திரும்பப்பெற என்ன செய்யவேண்டும் என்றோ 
சொல்லவில்லை.நானும் இந்த பத்திரங்கள் வந்ததும் வாங்கி 
அப்படியே பெட்டியில் வைத்துவிட்டேன்.

இன்று தற்செயலாக இதைப் பார்த்ததும் என்ன செய்வது 
என்று தெரியாததால் ஏதாவதொரு வங்கியில் கேட்கலாமென்று நினைத்தபோது எனக்குத்தெரிந்த ஒருவர் உங்கள் வங்கியின் 
பெயரை சொன்னதால் இங்கு வந்தேன். எனக்கு உங்கள் 
வங்கியில் கணக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள்தான் இந்த 
பணத்தைப் பெற்று தரவேண்டும்’என்றார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசு அதிகாரிகளின் 
வற்புறுத்தலால் எங்கு முதலீடு செய்கிறோம் எனத்தெரியாமல் 
கட்டிவிட்டு அதை திரும்பப்பெற அலையும் அவரைப் பார்க்க
எனக்கு பரிதாபமாக இருந்தது.

இன்றைக்கும் அரசு, அது வெளியிடும் பத்திரங்களையும் 
தேசியசேமிப்பு பத்திரங்களையும் தனது வருவாய்த்துறையின் 
ஊழியர்கள் மூலம் விவசாயிகளையும் கிராம மக்களையும் வற்புறுத்தி/துன்புறுத்தி விற்பனை செய்கிறது என்பது தான் 
வேதனையான செய்தி.

(இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடக்கிற ஒன்றுதான்.
இது பற்றி நான் 15/11/2009 சிவபூஜையில் கரடிஎன்ற
தலைப்பில் ஒரு நிகழ்வு பற்றி எழுதும்போது குறிப்பிட்டு 
இருக்கிறேன்.)

அந்த பணி எங்களுடைய வங்கிப்பணி  அல்ல என்றாலும், 
அந்தவணிக நடவடிக்கை (Transaction) எந்த வகையிலும் எங்கள் 
வங்கிக்கு உபயோகம் இல்லை என்றாலும் அவருக்கு உதவ நான் எண்ணினேன் அது எனது (களஅலுவலர்) பணி இல்லை என்ற
போதிலும். நமது வங்கியை நாடி வந்துள்ளாரே அதற்காவது
 உதவவேண்டும் என நினைத்தேன்.

அவரிடம் சொன்னேன். நான் ஒரு கடிதம் எழுதி தருகிறேன். 
அதைநீங்கள் வெளியே சென்று தட்டச்சு செய்து சென்னை 
ரிசர்வ் வங்கிக்கு பதிவு அஞ்சல்மூலம் அனுப்புங்கள். அவர்கள் 
உங்களுக்கு அந்த முதிர்வடைந்த தொகையை வரைவு(கேட்பு)
காசோலை (Demand Draft)  மூலம் அனுப்புவார்கள். என்றேன்.

உடனே அவர்,’சார். நீங்களே இங்கேயே தட்டச்சு செய்து 
கொடுத்தால்நன்றாக இருக்கும்.நான் இன்றே அஞ்சலில் 
அனுப்பி விடுவேன்.என்றார்.

உதவி செய்ய முடிவெடுத்த பின், மாட்டேன் என 
சொல்லமுடியாததால்,ரிசர்வ் வங்கிக்கு, பத்திரம் 
முதிர்வடைந்தபோது ஒரு சில காரணங்களால் தொகையைத் 
திரும்பப்பெற இயலவில்லை என்றும். முதிர்வடைந்த 
தொகையை தருமாறு கேட்டு கடிதம் எழுதி எங்கள் வங்கியிலேயே
தட்டச்சு செய்து அவரிடம் கொடுத்து அதை அந்த பத்திரங்களோடு
இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப சொன்னேன். 

அதோடு அவரைப்பற்றி மறந்தேவிட்டேன். ஆனால் நான் 
செய்த அந்த சிறு உதவி, வங்கிக்கு ஒரு நல்ல 
வாடிக்கையாளரைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது 
எனக்குத் தெரியவில்லை.    






 தொடரும்


 

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. இன்றும் நடக்கும் உண்மை செய்தி...

    அடுத்த பகிர்வை அறிய ஆவல்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. காலத்தாற் செய்த உதவி மிகப் பெரியது என்றார் தாடிக்காரர். நீஙகள் செய்த உதவியினால் அவர் அடைந்த பயனை மறந்திராமல் வாடிக்கையாளரானார் என்பது மகிழ்ச்சியான விஷயம். எளிய கிராமத்து மக்களிடம் உள்ள நற்பண்புகள் இன்னும் மறையவில்லை. உங்களின் உதவும் உள்ளத்திற்கு மகிழ்வுடன் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  4. மிகச் சிறப்பான வாடிக்கையாளர் சேவை!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  5. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசு அதிகாரிகளின்
    வற்புறுத்தலால் எங்கு முதலீடு செய்கிறோம் எனத்தெரியாமல்
    கட்டிவிட்டு அதை திரும்பப்பெற அலையும் அவரைப் பார்க்க
    எனக்கு பரிதாபமாக இருந்தது.

    எவ்வளவு படித்திருந்தாலும் சரி படிக்காத மனிதர்களைப்போலவே இப்படி சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  7. To do one’s duties, we have to bribe now a days. But those days I believe people were not cultured to today’s standard. See, hear & speak no evil is good. But we have already crossed all the boundaries to the point of no return, due to technology. The individuals have to help themselves to live without guilt. Hats off to your helping mind.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் கூறியதுபோல் இப்போது ஒருவர் தன் கடமையை செய்வதற்கு, அரசு தரும் சம்பளம் அல்லாமல் கையூட்டும் கொடுக்க வேண்டி இருக்கிறது. பொது நலனை விட தனி மனிதனின் நலத்தைப் பேணுவதால் வந்த விளைவு இது! கடந்துபோன அந்த பொற்காலத்தை நம்மால் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படவேண்டியதுதான். என் செய்ய?

      நீக்கு
  8. அன்பின் நடன சபாபதி - பொதுவாக வங்கி ஊழியர்கள் இது மாதிரி உதவுவதில்லை - தங்களின் இரக்கக் குணம் தேவைப்படும் அவருக்குப் பயன் பட்டிருக்கிறது - நன்று நன்று - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு