வெள்ளி, 8 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 35என்னை சிக்கலில் மாட்டிவிட்ட வாடிக்கையாளர் அந்த நிகழ்வுக்குப் பிறகு வங்கிக்கு வரவேயில்லையில்லை என சொல்லியிருந்தேன் அல்லவா? ஆனால் அவர் எப்படி திரும்பவும் என்னை தொடர்புகொண்டார்.நேரடியாக அல்ல.

அவரது நிறுவனம் இலாபகரமாக நடக்காததால் ஒட்டுப்பலகைகள் தயாரிப்பை நிறுத்திவிட்டார். எந்த வித வருமானமும் இல்லாததால் வங்கிக்கு கட்டவேண்டிய தவணைத்தொகையையும் கட்டவில்லை.

அவரது கணக்கு வாராக் கடன்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், கடனை அடைக்க சொல்லி வங்கியிலிருந்து கேட்பு அறிவிக்கை (Demand Notice) அனுப்பியதும், நிறுவனத்தை விற்று கடனை அடைப்பதாக பதில் எழுதியிருந்தார். 

அந்த சொத்துக்கள் யாவும் எங்கள் வங்கிக்கு அடமானமாக வைத்திருந்ததால் அவைகளை விற்றால்தான் கடனை அடைக்க முடியும் என்ற நிலை.எனவே அதை விற்பனை செய்வதற்கு வாங்குவோரைத் தேடிக்கொண்டிருந்தார்.  

அப்போது வங்கியில் ரிசர்வ் வங்கியின் வழி காட்டல் படி ஒரே தவணையில் கடனை அடைக்கும் (One Time settlement) திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன்படி எந்த வாடிக்கையாளர் தொழிலில்  நஷ்டம் அடைந்து நிலுவையில் உள்ள பணத்தை கட்டமுடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போது வங்கியை அணுகி தன்னால் கட்டக்கூடிய பணத்தை கட்ட ஒப்புக்கொண்டால் வங்கி அதை ஏற்றுக்கொள்ளலாம்.

அப்போது வங்கி அபராத வட்டியையோ அல்லது வட்டியையோ தள்ளுபடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டு கணக்கை முடிக்கலாம்.ஆனால் இது கணக்கிற்கு கணக்கு மாறுபடலாம். இதன் மூலம் வங்கியில் உள்ள நாள் பட்ட வாராக் கடன்களை  கழித்துவிட (To get rid of) முடியும்  ஆனால் வாடிக்கையாளரின் சொத்தின் மதிப்பு நிலுவையில் உள்ள கடன் மதிப்பிற்கு சரிசமமாக (அதாவது 100 விழுக்காடு) இருக்குமானால் வங்கி One Time settlement க்கு ஒப்புக்கொள்ளாது.

(இதற்கு மேல் இந்த திட்டம் பற்றி இங்கு விரிவாக பேசவேண்டாம் என நினைக்கிறேன்)

எங்கள் கிளையில் நான் அங்கு சென்று பணியில் சேருவதற்கு பல ஆண்டுகள் முன்பு, முதன்மை மேலாளராக இருந்தவர் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றபின், அந்த வாடிக்கையாளரின்  தந்தை பெயரில் இருந்த அறக்கட்டளை நடத்தி வந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக  சேர்ந்துவிட்டார். 

அவரின் யோசனைப்படி அந்த வாடிக்கையாளர் அவரது உதவியாளர் மூலம் One Time settlement க்கு தயாராக இருப்பதாக கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரது சொத்தின் மதிப்பு அன்றைய நிலையில் எவ்வளவு எனத் தெரியாததால், வங்கியின் மதிப்பீட்டாளரை (Valuer) அவரது சொத்தின் மதிப்பை ஆய்ந்து அறிக்கை தரச் சொன்னேன். 

அந்த மதிப்பீட்டாளர் மாநில அரசில் பொதுப்பணித்துறையில் துணை முதன்மை பொறியாளராக இருந்தவர். மிகவும் நேர்மையானவர் அவர் என்னைப் பார்க்க வந்தபோது, சார். இன்றைய சந்தை நிலவரப்படி அந்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள்.என்றேன்,

ஆனால் அவர் அந்த சொத்தை மதிப்பீடு செய்ய சென்றபோது அந்த வாடிக்கையாளர் சொன்னாராம், தயை செய்து மதிப்பைக் குறைவாகத் தாருங்கள்.அப்போதுதான் எனக்கு வங்கியில் சலுகை கிடைக்கும். என்று. அதற்கு அந்த மதிப்பீட்டாளர் சொல்லியிருக்கிறார். வங்கியில் சந்தை நிலவரப்படி மதிப்பிடுங்கள் என்கிறார்கள். ஆனால் நீங்களோ குறைத்து மதிப்பிடுங்கள் என்கிறீர்களே.நான் உண்மையான மதிப்பைத்தான் தருவேன். என உறுதியாக கூறியிருக்கிறார்.

அந்த சொத்துக்களின் மதிப்பு அறிக்கையைப் பார்த்துவிட்டு அவரது  One Time settlement கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.

அதற்குப் பிறகு ஒரு நாள் காலை எனது அறைக்கு, நான் எதிர்பாராத ஒருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல. பெங்களூருவில் எங்கள் வங்கியில் வேலை பார்த்துவரும் எனது நண்பர் தான். அவர் எதற்காக வந்திருக்கிறார் எனக் கேட்டதும் அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.


தொடரும்

22 கருத்துகள்:

 1. //முதன்மை பொறியாளராக இருந்தவர். மிகவும் நேர்மையானவர் //

  Looks like you receive help somewhere from the top. If not, you would not have had few good ones at the work.

  பதிலளிநீக்கு

 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்களின் கணிப்பு சரியே.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் அனுபவப்பகிர்வுகள் ஆச்சரியம் தருகின்றன..பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 4. எல்லாம் இழந்த போதிலும் சிலருக்கு குறுக்கு வழி புத்தி மட்டும் போவதில்லை. வந்தவர் பதிலை அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 5. hypertension மருந்து அளவை அதிகரித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! Hypertension மருந்து அளவை அடுத்த பதிவிற்குப் பிறகு குறைத்துவிடலாம் அல்லது நிறுத்திவிடலாம்!

   நீக்கு
 6. மேலும் ஆவல் கூடுகிறது... காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி S.Suresh அவர்களே!

   நீக்கு
 8. அவர் உங்களை விடுவதாக இல்லை போலும்!காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அவரும் என்னை விடுவதாக இல்லை. நானும் அவரை விடுவதாக இல்லை.

   நீக்கு
 9. நீங்க குறிபிட்டுள்ள லிங்கில் சென்று அந்தசகோதரர் சொன்னபடி செய்ததில்தான் உங்க ப்ளாக் வர முடிந்தது ..இனி தொடர்ந்து வருவேன் .துள்ளி குதிக்கும் ப்ராப்ளம் இனியில்லை

  பதிலளிநீக்கு
 10. அப்பாடா ஓரு படியாக கருத்திட வந்து விட்டேன். நண்பர் என்ன பதில் சொல்லியிருப்பார்!!!! குடைகிறது.....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே! பொறுத்திருங்கள் என்ன நடந்தது என அறிய!

   நீக்கு
 11. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி...வே,நடனசபாபதி அய்யா...

  உங்கள் மோதிரக்கையில் குட்டுப்பட்ட சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

  உங்கள் வங்கிப்பதிவுகள் சிறுவயதில் என் தந்தையாருடன் கை பிடித்து வங்கி சென்ற சனிக்கிழமைகளை அடிக்கடி நினைவூட்டும்...

  மறுபடியும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரெவரி அவர்களே!

   நீக்கு
 12. சிறிய இடைவெளிக்குப் பிறகு...... வங்கியில் யதார்தமாக அன்றாடம் நாம் காணும் சிக்கல்களை மிக அழகாக மற்றவர்களுக்கு தீர்வுடன் தாங்கள் தந்து இருப்பது பலருக்கும் உபயோகமாக இருக்கும். இன்று ஒரே சமயத்தில் மூன்று பதிவுகளை படித்து முடித்தேன். மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

   நீக்கு