திங்கள், 3 ஜூன், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 50



என்னிடம் வலுக் கட்டாயமாக அந்த விவசாயி கொடுத்த ஆவணங்களை அவர் திருப்திக்காக பார்ப்போமே என்ற எண்ணத்தோடு பிரித்தபொது உள்ளிருந்து ஒரு நூறு ரூபாய் தாள் ஒன்று எனது மேசை மேல் விழுந்தது.

ஏதோ தவறி அந்த நோட்டை ஆவங்களோடு வைத்திருக்கிறார் என எண்ணி, என்னங்க. இவ்வளவு  அஜாக்கிரதையாய் இத்தோடு பணத்தை வைத்திருக்கிறீர்கள். என்று கூறி அதை எடுத்துக் கொடுத்தேன். அவர் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு, அதை வாங்கி கொண்டார்.


ஆவணங்களை படித்து முடித்துவிட்டு அவரிடம் கொடுத்துவிட்டு, நான் சொன்னதுபோல் மற்ற ஆவணங்களை எடுத்துக்கொண்டு வந்து கள அலுவலரைப் பாருங்கள். என கூறி அவரை அனுப்பிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து எனது அறைக்கு வந்த கள அலுவலரிடம் அந்த விவசாயி கேட்ட கடன் பற்றி சொல்லிவிட்டு, அவர் அஜாக்கிரதையாய் பணம் வைத்திருந்ததையும் குறிப்பிட்டேன்.

உடனே அதற்கு அவர்,’சார். அவர் ஒன்றும் அதை அஜாக்கிரதையாய் வைக்கவில்லை. அவர் அந்த நூறு ரூபாய் தாளை அதில் வைத்து கொடுத்ததின் மூலம் நீங்கள் அவருக்கு கடன் தந்தால், உங்களை கவனித்துக் கொள்வதாக மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். உங்களுக்குத்தான் அதை எதற்காக அங்கே வைத்திருந்தார் எனப் தெரியவில்லை என நினைக்கிறேன். என்றார்.

எனக்கு அதைக் கேட்டதும் பயங்கர கோபம் வந்துவிட்டது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர்? நாமெல்லாம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு தான் கடன் தருகிறோம் என்றா? எனக்கு அவரது இந்த எண்ணம் தெரியாமல் போய்விட்டதே. தெரிந்திருந்தால் அவர் சும்மா விட்டிருக்கமாட்டேன். வரட்டும் அவர். பார்த்துக்கொள்கிறேன். என்றேன்.

அதற்கு அவர். சார். அவரை கோபித்துப் பயனில்லை. அவர் நாட்டு நடப்பின்படி நடந்துகொண்டிருக்கிறார். அரசு அலுவலகங்களில் விண்ணப்பம் தரும்போது அதன் உள்ளே பணம் வைத்து தருவது சிலரது வழக்கம். அப்படி வைக்க வில்லை என்றால், கையூட்டு வாங்குவோர் அந்த விண்ணப்பதில் உள்ளதை படித்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

அதில் பணம் வைத்து தருவது என்பது, தங்களது காரியம் முடிய பணம் தரத் தயார் என்பதை அறிவிக்கும் ஒரு சைகை. அதுபோல் இங்கும் பணம் வைத்துக் கொடுத்தால் நீங்கள் அதை எடுத்துக்கொண்டு அவரது கடனை பரிசீலித்து ஒப்பளிப்பு செய்வீர்கள் என நினைத்திருப்பார் போல. என்றார். 
 
அதற்கு நான் 'அவர் இங்கு மற்ற ஆவணங்களோடு உங்களைப் பார்க்க வரும்போது, இங்கு அழைத்து வாருங்கள். என்றேன்.

ஒரு வாரம் கழித்து அவர் நான் சொல்லியிருந்த ஆவணங்களோடு வந்தபோது, கள அலுவலர் நான் சொல்லியபடி அவரை உள்ளே அழைத்துவந்தார்.

உள்ளே வந்த அவரை உட்கார சொல்லிவிட்டு, போன வாரம் வந்தபோது பணத்தை உள்ளே வைத்து ஆவணங்களை கொடுத்தீர்களே அது மறதியாலா? அல்லது வேண்டுமென்றேவா?’என நேரடியாகவே அவரிடம் கேட்டேன்.

அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தபோது, நீங்கள் எதற்காக அப்படி செய்தீர்கள் என எனக்கு அப்போது தெரியவில்லை.தெரிந்திருந்தால் உங்களை சும்மா விட்டிருக்கமாட்டேன். ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். வங்கியில் உங்களைப்போன்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யத்தான் வங்கிகள் என்னைப் போன்றவர்களை பணியில் அமர்த்தியுள்ளார்கள். அதற்காக எங்களுக்கு போதுமான சம்பளத்தையும் தருகிறார்கள்.
  
அதோடு வங்கியில் செய்கின்ற எங்களுக்கு வேலைக்கேற்ற சம்பளம் கிடைக்கும்போது, உங்களிடம் மேற்கொண்டு பணம் பெறவேண்டிய அவசியம் இல்லை. மேலும் நீங்கள் வாங்கும் கடனுக்கு வங்கிக்கு கட்டுவதால் மேற்கொண்டு யாருக்கும் எதுவும் தரத்தேவையில்லை.

உங்களது கோரிக்கை நியாயமாகவும், வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால், உங்களுக்கு தேவையான கடன் நிச்சயம் கிடைக்கும். ஆனால் உங்களைப்போன்ற சிலர் காரியம் சீக்கிரம் நடக்கவேண்டுமென்பதற்காக எங்களைப் போன்றவர்களுக்கு பணத்தைக் கொடுத்து ஆசை காட்டி கெடுத்துவிடுகிறீர்கள். தயை செய்து இனியாவது இப்படி செய்து ஒழுங்காக வேலை செய்பவர்களையும், தவறான பாதைக்கு செல்ல வழி செய்து விடாதீர்கள்.என்றேன்.

அவர் தயக்கத்தோடு, சார். பணம் கொடுத்தால் சீக்கிரம் கடன் கிடைக்கும் என நினைத்துஅவ்வாறு செய்தேன். அப்படியென்றால் எனக்கு கடன் கிடைக்காதா?’ என்றார்.

நான் மன்னிக்கவும். உங்கள் பேரில் புகார் செய்து, உங்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் விடுகிறேனே. அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.உங்களுக்கு கடன் தர என்னால் இயலாது. நீங்கள் என்னைப் போன்றவர்களை பணத்தைக் காட்டி இழுக்க நினைத்தற்கு இதுவே நான் தரும் தண்டனை. நீங்கள் போய் வாருங்கள். என்றேன்.

அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார். அவருக்கு கடன் தராது பற்றி எனக்கு வருத்தம் ஏற்படவில்லை என்பது உண்மை.

தொடரும்

24 கருத்துகள்:

  1. இப்படி ஒவ்வொருவரும் நேர்மையாக இருந்து விட்டால்... - மனம் ஏங்குகிறது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. வழக்கமாக தங்கள் பதிவுகள் முடிவில் அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்போடு இருக்கும். தங்க எண்ணிக்கை பெறும் இப்பதிவு ஒரு முடிவொடு இருந்து வாடிக்கையாளர்(?) எதிர்பார்ப்பை நிறைவேறாமல் போனதை அறிய முடிந்தது. தங்களின் சினத்திற்கும் அதுதான் வடிகால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்களே! இந்த வாடிக்கையாளர் பற்றி இதோடு முடிந்தாலும், இன்னும் இது போன்ற சில நிகழ்வுகளை பதிவு செய்ய இருக்கிறேன். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  3. தகுந்த முறையில் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளீர்கள். தங்கள் நேர்மைக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  4. நேர்மையாய் இருககும் சிலரையும் சபலிஸ்டுகளாக்கி பாதை மாற வைப்பது இப்படியாக நீட்டப்படும் பண நோட்டுகள்தான்! அந்த சபலத்திற்கு இடம் தராமல் இருந்த நீங்க ரொம்ப கிரேட் ஸார்! வியக்கிறேன் தங்களை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  5. I agree with what you have done. There are good and bad ones in all the places. How to differentiate? I dare not to go any office either Govt or private in India. If you just ask anyone who are dealing with govt offices, every one will have stories to tell. It is like mango is sweet, bitter guard is bitter and developing countries officials are corrupt kind of mentality. You cannot blame him hundred percent. I only pity him, for having dialed a wrong number. Hope and wish it will change for the good.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இன்றைய கால கட்டத்தில் கையூட்டு வாங்காமல் இருந்துவிடலாம். ஆனால் கொடுக்காமல் இருக்கமுடியாது என்பதுதான் உண்மையான நிலை. என் செய்ய! அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!

      நீக்கு
  6. தங்கள் நேர்மைக்கு வணக்கம்!

    பதிலளிநீக்கு
  7. அவருக்கு கடன் தராது பற்றி எனக்கு வருத்தம் ஏற்படவில்லை என்பது உண்மை

    நினைத்துப்பார்க்கும் பொன்னான மனதுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  8. //அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!//

    I believe this is applicable in king’s ruling, not in democracy. In democracy, it is the opposite. No one is interested to enter in politics. Then, how can we expect and deserve a good govt? So, what we get is what we deserve.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் அரசன் என்று இங்கே குறிப்பிட்டது இப்போது நாட்டை வழி நடத்தி(!)க்கொண்டு இருப்பவர்களை. அரசியலுக்கு வருபவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தோடு வந்து தவறான வழியில் நடக்கும்போது, அதைப் பார்க்கும் மக்களும் அவ்வாறே செல்வார்கள் என்பதே எனது கருத்து.

      நீக்கு
  9. அவர் நினைத்ததற்கு மாறாக நடந்து விட்டது!இடம் தெரியாம செய்து விட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  10. இந்த மாதிரி ஆசாமிகள் இன்னும் இரண்டு மூன்று வங்கிகளிலும் சொல்லி வைத்து இருப்பார்கள். எல்லா இடத்திலும் ஒரே ஆவணத்தைக் (DOCUMENTS) காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! ஒரே சொத்தை வைத்துக்கொண்டு எப்படி வங்கியை ஏமாற்றி கடன் பெறுகிறார்கள் என்பதை பிறிதோர் பதிவில் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  11. அருமையான நடவடிக்கை வங்கியாலனாக மகிழ்கிறேன் .பதிவை வலைசரத்தில் இன்று பரிந்துரைக்கிறேன் அன்பரே பார்க்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் மனமார்ந்த நன்றி திரு பிரேம்.சி அவர்களே!

      நீக்கு
  12. பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு அருள் அவர்களே!

      நீக்கு