வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 18



அநேக திரைப்பட இயக்குனர்களின் வெளிப்புறப் படப்பிடிப்பில் தவறாமல் இடம் பெறும் Cini falls என அழைக்கப்படும் அருவியைக் காண, தொங்கு பாலம் தாண்டி இறங்கினோம்.


அங்கே இருந்த மரத்தின் கீழே சிலர் முறுக்கு, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களை விற்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் வருகையை நோக்கி காத்திருப்பதைக் கண்டோம். அவர்களைத் தாண்டி திரும்பி நடந்ததும், சிறிது தூரத்தில் அக்கரையில் பேரிரைச்சலோடு பல இடங்களில் சிறிது பெரிதுமான அருவிகள் எங்களை வரவேற்க காத்திருந்தன. அவைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்த அதே நேரத்தில்  பயமாகவும் இருந்ததென்னவோ உண்மை. 
  
ஏதோ அவைகளுக்குள் யார் முந்திச்சென்று தரையைத்தொடுவது எனப் போட்டி  இருப்பதுபோலவும் அதனால்தான்  அவைகள் வேகமாக நீரை கொட்டுவதுபோலவும்  எனக்குத் தோன்றியது!

அருவிகளை அருகே சென்று பார்க்க உள்ள வழி நடக்க ஏதுவாக இருக்கும் என நினைத்த எங்களுக்கு சமதளமாக இல்லாத கரடு முரடான வெட்டுப் பாறைகள் தான் காட்சியளித்தன.

அருவிகளை அருகில் சென்று பார்க்க செல்லும் வழியை, தரையில் (பாறையில்) அம்புக்குறியிட்டு Cini falls என எழுதி பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அருவிகள் விழும் இடங்களுக்கு வெகு அருகில் சென்று பார்த்து இரசித்து படம் எடுக்கலாம் என நினைத்து முன்னால் அடி எடுத்து வைத்தேன். அந்த பாறைகள் சம தரையாக இல்லாததால் கீழே விழும் நிலைக்கு வந்து சமாளித்துக்கொண்டேன்.

செருப்பு போடாமல் நடந்தால்தான் அந்த கரடு முரடான பாறைகளில் காலை ஊன்றி நடக்க முடியும். ஆனால் அப்போது பகல் 12 மணி ஆனதால் வெயிலின் வெப்பத்தால் வெறுங்காலோடு நடக்க முடியவில்லை.

அந்த பாறையில் கீழே விழுந்தால் குறைந்தது ஆறேழு இடங்களில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்படும் என்பது நிச்சயம். இருப்பினும் முடிந்தவரை கரையின் விளிம்பு வரை சென்று அருவியை படமெடுக்க எண்ணி கையில் புகைப்படக் கருவியுடன் மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து சென்றேன்.

(நான் எப்படி கவனமாக நடந்தேன் என்பதை என்னால் இதற்குமேல் எழுத்தில் கொண்டு வர இயலவில்லை. ஒவ்வொருவரும் நேரில் சென்று அதை அனுபவித்தால் (கஷ்டப்பட்டால்) மட்டுமே புரிந்துகொள்ள முடியும். 

நான் போவதைப் பார்த்து என் துணைவியாரும் கூட வந்தார். எங்களோடு நண்பர்கள் கோவிந்தசாமி அவருடைய துணைவியார். ஜெயராமன் ஆகியோரும் வந்தனர். சிறிது தூரம் சென்றதும் திருமதி கோவிந்தசாமியும் தொடராமல் நின்றுவிட்டார்.

மற்றவர்கள் எல்லாம் வெயில் அதிகம் இருந்ததாலும், வெட்டுப் பாறையில் நடக்க கடினமாக இருந்ததாலும் சிறிது தூரத்திலேயே அருகில் உள்ள மரத்தடியில் நின்றுவிட்டனர்.

பாறைகளின் மேல் நடந்து சிறிது தூரம் சென்றபின் நான் எடுத்த புகைப்படம் கீழே




கரையின் விளிம்பு நோக்கி செல்லும்போது எடுத்த புகைப்படங்கள்  கீழே.








தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சற்று அருகில் நின்று எடுத்த புகைப்படங்கள் கீழே.






இன்னும் சற்று அருகில் சென்றால் அருவியின் அழகை சிறப்பாக படம் எடுத்திருக்கலாம். ஆனால் இந்த படங்களை உங்களுக்கு காட்ட நான் இருக்கவேண்டுமே(!) என்பதால் அந்த ஆபத்தைத் தவிர்த்துவிட்டேன்.

மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

தொடரும்

16 கருத்துகள்:

  1. ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான் என்பதை சில வரிகளிலேயே உணர முடிகிறது ஐயா... படங்கள் மிகவும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நான் இன்னும் வெகு அருகில் சென்று படம் பிடித்திருந்தால், தங்களின் பாராட்டுக்கு உரியவனாய் இருந்திருப்பேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. //ஏதோ அவைகளுக்குள் யார் முந்திச்சென்று தரையைத்தொடுவது எனப் போட்டி இருப்பதுபோலவும் அதனால்தான் அவைகள் வேகமாக நீரை கொட்டுவதுபோலவும் எனக்குத் தோன்றியது!//
    என்ன அழகான கற்பனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  4. சிரமப்பட்டு எடுத்த, இறுதியில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் அருமையாக உள்ளன. யூ ட்யூப்-ல் காணொளிகள் உள்ளன. அதைப் பார்த்தால் ஹொகெனக்கல் பெயர்ப்பொருத்தத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அருவி கொட்டும் அழகை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்றால் பரிசலில் சென்றிருக்கவேண்டும். ஆனால் அப்போது மேலிருந்து விழும் அருவியை படம் எடுக்க இயலாது.

      நீக்கு
  5. உங்களுக்கு தைரியம் அதிகம் தான்
    படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! இன்னும் வெகு அருகில் சென்று படம் எடுத்திருந்தால் என் தைரியத்தை பாராட்டலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லையே!

      நீக்கு
  6. ஏதோ அவைகளுக்குள் யார் முந்திச்சென்று தரையைத்தொடுவது எனப் போட்டி இருப்பதுபோலவும் அதனால்தான் அவைகள் வேகமாக நீரை கொட்டுவதுபோலவும் எனக்குத் தோன்றியது!//

    அருமையான வர்னணை. நிகழ்வை நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வழக்கம்போலவே படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! ஏதோ என்னால் முடிந்த அளவு வர்ணித்திருக்கிறேன்.

      நீக்கு
  7. நல்லவேளை! ஒரு அளவோடு நின்று விட்டீர்கள்! படம் எடுக்கும் ஆர்வக்கோளாறில் இதுமாதிரியான புது இடங்களில் நம்மைச் சுற்றி உள்ள ஆபத்துக்களை நாம் உணர்வதில்லை. அங்குள்ள உள்ளூர்வாசிகளும் கடைக்காரர்களும் சொல்ல மாட்டார்கள்! அருவிகளை அழகாக கேமரா பிரேமுக்குள் அடக்கி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அழகிலும் ஆபத்து உண்டு என்பதை அறிந்ததால் நான் அருகில் சென்று படம் எடுக்கவில்லை.

      நீக்கு
  8. அருமையான படங்கள். சில சமயங்களில் படம் எடுக்க எப்படியெல்லாம் அவஸ்தைப் பட வேண்டியிருக்கிறது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு