புதன், 16 ஜூலை, 2014

iPad பயன்படுத்தினால் ஒவ்வாமை (Allergy) வருமா?



இன்றைக்கு iPad இல்லாதவர்களைக் காண்பது அரிது. இதுவரை 
மடிக்கணினி மூலம்  மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்த பலர், 
இப்போது iPad மூலம் தான் அனுப்புகிறார்கள். ஏன் பலர் வலைப்பதிவில் 
எழுதுவதும் இதன் மூலம் தான். கர்ணனும் கவச குண்டலங்களும் 
போல் எப்போதும் iPad உடன் இருப்பவர்களும் உண்டு.


மாறிவரும் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியிருக்கிறது என மகிழ்ச்சி கொள்ளும் நேரத்தில் இன்றைய  
Busines Line நாளிதழில் வந்த தகவல் ஒன்று மனதில் ஒரு அச்சத்தை 
உண்டாக்குகிறது. இது வெறும் பீதியா இல்லையா என்பதை 
அறிவியலாளர்கள் தான் சொல்லவேண்டும்.

தோலில் தடிப்பு (Rash) ஏற்படுகிறதா? உங்கள் iPad ஐ பாருங்கள். அதில் 
உள்ள வன்வெள்ளி (Nickel) உங்களின் தோல் தடிப்பிற்கு காரணமாக 
இருக்கக்கூடும் என்கிறது அந்த தகவல். காரணம் பொதுவாக 
ஒவ்வாமையை (Allergy) தூண்டும் உலோகம் Nickel என்பதால் தான் 
இந்த எச்சரிக்கை.

அண்மைக் காலமாக மருத்துவ ஆய்விதழ்களில் வரும் அறிக்கைகள்  
Nickel ஒவ்வாமை, மடிக்கணினி, கைபேசி உள்ளிட்ட மின்னணு 
சாதனங்களால் வருகிறதென்று தெரிவிக்கின்றன.

ஆனால் சமீபத்தில் Pediatrics’ என்ற மருத்துவ ஆய்விதழ், 
அமெரிக்காவில் உள்ள San Diego மருத்துவமனையில் 11 வயது 
சிறுவனுக்கு தோலில் ஏற்பட்ட அரிப்பெடுக்கும் தடிப்பைக் 
குணப்படுத்தியபோது, அந்த ஒவ்வாமை Apple iPad உபயோகித்ததால் தான் 
வந்ததென்று கண்டறிந்திருப்பதாக தெரிவிப்பது ஒவ்வாமை பற்றிய 
அறிக்கையின் முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Nickel ஆல் வரும் தோல் தடிப்பு என்ற ஒவ்வாமை உயிருக்கு 
அச்சுறுத்தல் இல்லையென்றாலும், அது மிகவும் அசௌகரியத்தைக் 
கொடுக்கும் என்றும், அதை குணப்படுத்த இயக்க ஊக்கிகள் (Steroids) 
மற்றும் நுண்ணுயிர் ஒடுக்கிகள் (Antibiotics) போன்றவைகளை 
உபயோகிக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த சிறுவனை குணப்படுத்திய  
Rady Children Hospital இல் பணிபுரியும் தோலியல் நிபுணர் (Dermatologist) 
Dr Sharon Jacob தெரிவிக்கிறார். இவர்தான் அந்த மருத்துவ ஆய்விதழில் 
வந்த கட்டுரையின் இணை எழுத்தாளர்.

அந்த சிறுவனுக்கு தோலில் உடல் முழுதும் வந்த தடிப்பு வழக்கமான 
சிகிச்சையால் குணப்படுத்த முடியவில்லையென்றும், தோலை 
பரிசோதனை செய்ததில் அது Nickel Allergy என்றும் அவனது 
குடும்பத்தில் 2010 ஆம் ஆண்டு வாங்கிய iPad ஆல் அது வந்ததென்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த சிறுவன் தினமும் அந்த iPad ஐ பயன்படுத்தியிருக்கிறான் என்றும் 
அதனால் ஏற்பட்ட அந்த தொல்லையால் பல நாட்கள் பள்ளி 
செல்லமுடியவில்லை என்றும் Dr Jacob தெரிவிக்கிறார்.

மருத்துவர்கள் அந்த  iPad ஐ பரிசோதித்ததில் அதன் மேல் 
பூசப்பட்டிருந்த வண்ணப்பூச்சில் (Coating) காணப்பட்ட 
வேதிப்பொருள்(Chemical)   Nickel இல் உள்ள வேதிப்பொருள் 
எனத் தெரிந்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் Apple இன் 
எல்லா iPad வடிவமைப்புகளிலும் மற்ற அதனுடைய 
சாதனங்களிலும் Nickel இருக்கிறதா எனத் தெரியவில்லை 
என்கிறார் Dr Jacob.

ஆனால் Apple நிறுவனத்தின் சார்புரிமைத் தகவலர் (Spokesman) 
இது பற்றி சொல்லும்போது,  அவர்களது தயாரிப்புகள் உயர்தர 
மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறதென்றும் நகைகள் 
தயாரிப்பில் எந்த தர அளவு வரையறுக்கப்பட்டுள்ளதோ 
அதே தரத்தில் தங்களது தயாரிப்புகள் தயாரிப்பதாகவும்
சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் மருத்துவர்கள் குறிப்பிடும் 
 Nickel வேதிப்பொருள் பற்றி கருத்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.

எது எப்படியோ வெறும் வாயை மெல்லுவோருக்கு அவல் கிடைத்தது 
போல்ஆகியிருக்கும் Apple நிறுவனத்தோடு போட்டியிடும் மற்ற 
நிறுவனங்களுக்கு.  

இருப்பினும் நாம் இப்போது கவலைப்படத் தேவையில்லை.இந்த 
ஆய்வின் முடிவு முடிந்த முடிவல்லவே. ஒவ்வொன்றுக்கும் 
இரண்டாம் கருத்து உண்டே. அதுவரை நாம் பொறுத்திருப்போம்.  


பின் குறிப்பு: பல இடங்களில் தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலம் 
தருவதை தவிர்க்க முடியவில்லை. ஆங்கில சொற்களுக்கு இணையான
தமிழிலும் உண்டு என்பதால் இரண்டையும் குறிப்பிட்டிருக்கிறேன்

16 கருத்துகள்:

  1. ஐபேட் மட்டுமல்ல அனைத்துமே மனித ஜீவராசிகளுக்கு கேடுவிளைவிக்கத்தான் செய்கிறது என்ன செய்ய இனி மக்கள் பின்னோக்கிய வாழ்க்கைக்கு போவார்களா நிச்சயம் மாட்டார்கள் வெந்ததை திண்ணுப்புட்டு விதி வந்தா சாவு னு சொல்வதுபோல ஆகிவிட்டது இதனைக்குறித்து அன்றைய மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவிடப்போகிறேன் பார்க்கவும்.
    குறிப்பு ஐயா கொஞ்சநாளா,தங்களை நம்ம ஏரியாக்பக்கம் காணமுடியலையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! இன்றைய உலகில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றத்தை தடுக்க இயலாது. அதில் உள்ள நல்லவைகளை ஏற்பதே சிறந்தது.

      நீக்கு
  2. இருக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. அதனால் தான் இந்த ஆய்வின் முடிவு முடிந்த முடிவு அல்ல என குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் ஒருவருக்கு வரும் ஒவ்வாமை இன்னொருவருக்கும் வரும் என்றும் சொல்லமுடியாது. எனினும் கவனம் தேவை என்பதே என் கருத்து.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    நானும் பயன்படுத்துகிறேன் 2வருடங்கள் தங்களின் தகவலின் படி நானும் ஒருதடவை பார்க்கிறேன்.. தகவலுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! கண்டிப்பாக சிலருக்கு தீமை விளையலாம். ஆனால் அது எல்லோருக்கும் ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் தான் சொல்லவேண்டும்.

      நீக்கு
  5. இதைப்போன்ற கெமிக்கல்களால் தனி மனிதனுக்கு வரும் பாதிப்புகள் குறைவுதான். ஆனால், இயற்கைக்கு வரும் பாதிப்புகள் மிக அதிகம். பழைய செல்போன்களும், கணினிகளும் இந்தியா போன்ற ஏழை நாடுகளில்தான் மண்ணில் புதைகின்றன. வேண்டுமென்றே வடிவமைக்கும்பொழுது, பொருட்கள் இத்தனை வருடம்தான் உழைக்கவேண்டும் என்று வடிவமைக்கப்படுகின்றன. ஏழை நாடுகளில் வளரும் வரும் தலைமுறையினர்கள்தான் அதிகம் பாதிக்கப்படப்போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! இந்த பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஒருவருக்கு வரும் ஒவ்வாமை இன்னொருவருக்கு வராமல் போகலாம். ஆனால் நீங்கள் கூறியதுபோல் இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற வேதிப்பொருட்களால் பாதிப்புகள் ஏற்படலாம். அவைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இயற்கை வளத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசுகள் தான் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

      நீக்கு
  6. This is probably the price one has to pay to reap the benefits of technological advancement. The Father of the nation once said that " development would also bring in its wake seeds of destruction" or some thing to that effect. This is not the first time a product has been criticized. The controversy that surrounded Anacin/Cadbury chocolate/ coco-cola is still fresh in memory . As you have rightly pointed out there are always two sides to a coin and may be sometime later some one would come out with findings quite contradictory to the present findings. This appears to be an exceptional case . Not many appear to have been affected . May be in the case of the boy affected there could be other contributory factors . Well despite all the scare created the sales of i pad have touched astronomical levels. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! தொழில் நுட்பம் தரும் நற்பயன்களை துய்த்து மகிழும்போது அதனால் வரும் கேடுகளையும் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் எதிர்மறையான கருத்துரை வருவது உண்டு. இருப்பினும் எது உண்மை என்று அறியும் வரை கவலைப்படத் தேவையில்லை.

      நீக்கு
  7. எதுவுமே அளவுமீறிப் போகும்போது ஆபத்து விளைவிப்பது உண்மையே. எச்சரிக்கையாய் இருக்கத் தூண்டும் பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா. நிக்கலுக்கு வன்வெள்ளி, ஆன்ட்டிபயாட்டிக்ஸ்க்கு நுண்ணுயிர் ஒடுக்கிகள் போன்ற வார்த்தைகளின் உபயோகம் மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி கீதா மதிவாணன் அவர்களே!

      நீக்கு
  8. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே அறிவியல் ஆய்வு குறித்த தகவல்களுக்கு மிக்க பாராட்டுக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு King Raj அவர்களே!

      நீக்கு