வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 13



சேலம் மத்திய சிறையிலிருந்த அந்த ஏமாற்றுப்பேர்வழியை நீதிமன்றம் 

உள்ள ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் அழைத்து சென்றபோது, 

சேலத்தில்  நான்கு ரோடு எனப்படும் நான்கு சாலைகள் சந்திக்கும் 

இடம் வந்ததும், அந்த நபர் தன்னை அழைத்துப் போக வந்த 

காவலர்களிடம்  ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

 

 

சார். இந்த ஊரில் எனது உறவினர் ஒருவர் உள்ளார். அவரிடம் 

தொலைபேசியில் சிறிது நேரம் பேச அனுமதி கொடுத்தால் நன்றி 

உடையவனாக இருப்பேன். அவரிடம் கைச்செலவிற்கு பணம் 

கேட்டால் கொண்டு வந்து கொடுப்பார். அப்போது உங்களையும் கவனித்துக்கொள்கிறேன். என்றிருக்கிறார்.

 

அவர்களும் நீதிமன்றம் அழைத்துசெல்லும் நபரின் இது போன்ற 

வேண்டுகோளை அனுமதிப்பது சரியா என யோசிக்காமல் உடனே 

பெரிய மனதோடு அவரை அருகில் உள்ள பொதுத் தொலைபேசியில் 

பேச அனுமதித்துவிட்டு வெளியே நின்றிக்கிறார்கள். 

 

அந்த வாய்ப்பு போதாதா நமது கதாநாயகருக்கு. வழக்கம்போல் 

தொலைபேசியில் ஒருவரை கூப்பிட்டார். அவர் வேறு யாருமல்ல. 

கேரளாவை தலமையிடமாகக் கொண்டு இந்தியா முழுதும் கிளைகளை 

உடைய ஒரு தனியார் வங்கியின் மேலாளரை. அந்த மேலாளர் 

கேரளாவை சேர்ந்தவர். 

 

அவரிடம் இந்த ஜகஜாலக் கில்லாடி மலையாளத்தில் அந்த வங்கியின் 

தலைவர் (Chairman) பேசுவது போல் பேசியிருக்கிறார். ஆனால் 

இம்முறை உரையாடலை சிறிது மாற்றிவிட்டார். தனது மைத்துனர் 

கொச்சி திரும்பும்போது சேலம் பேருந்து நிலையம் அருகே தனது 

உடைமைகளை தொலைத்து விட்டதாகவும் காவலர்களிடம்  புகார் செய்திருப்பதாகவும், அதுபற்றி அவர்கள் விசாரித்துக்கொண்டு 

இருப்பதாகவும் அது கிடைக்க நாள் ஆகும் என்பதால் ஊருக்கு திரும்ப 

உடனே பணம் தேவை என்றும் எனவே நான்கு சாலை சந்திப்பில் 

பொதுத் தொலைபேசிக்கு அருகே காவலர்களுடன் நிற்கும் தனது 

மைத்துனரிடம் உடனே ரூபாய் 5000 கொடுத்து உதவும்படியும்  அந்த 

பணத்தை தான் அன்றே அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 

 

வேண்டுகோள் விடுப்பது வங்கியின் தலைவர் ஆயிற்றே. அதை 

நிறைவேற்றாமல் இருக்கமுடியுமா ஒரு கிளையின் மேலாளரால்! 

சாதாரணமாக ஒரு கிளை மேலாளர் வங்கியின் தலைவரிடம் 

நேரடியாக பேசுவது என்பது நடக்கமுடியாத ஒன்று. 

 

அதுவும் வங்கியின் தலைவரே தன்னை அழைத்து பேசியது 

மேலாளருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அவருக்கு இந்த 

வகையிலாவது உதவி செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று 

நினைத்துக்கொண்டு சார்.இப்போதே கொண்டு கொடுத்துவிட்டு 

தேவையான உதவிகளை செய்துவிட்டு வந்து உங்களிடம் 

தெரிவிக்கிறேன். என்றிருக்கிறார் பவ்யமாக. 

 

காலை 10 மணிக்குமேல் தலைமை அலுவலகத்தில் வங்கித் 

தலைவருடைய தனி செயலாளர்  போன்று இந்த செய்தியை சொல்லி 

உதவும்படி கேட்டுக்கொள்ள மற்ற அலுவலர்கள் எவ்வளோவோ பேர் 

இருக்க, வங்கித் தலைவர் நேரடியாக கூப்பிட்டு சொல்வாரா என்ன 

என்று கூட அந்த நேரத்தில் யோசிக்கவில்லை அந்த மேலாளர்.

 

கிளையில் உள்ள எவரிடமும் அது பற்றி சொல்லவில்லை. அவருடைய   

எண்ணமெல்லாம் விரைவாக பணத்தை எடுத்துக்கொண்டு போய் 

தலைவரின் மைத்துனரிடம் கொடுத்துவிட்டு வங்கித் தலைவரைக் 

கூப்பிட்டு அவர் இட்ட கட்டளையை தான் நிறைவேற்றிவிட்டதாக 

சொல்லி பாராட்டு பெறவேண்டும்  என்பதே. 

 

உடனே தன் கணக்கிலிருந்து பணத்தை  எடுத்துக்கொண்டு  மோட்டார் 

சைக்கிளில் விரைந்து நாலு சாலை சந்திப்பிற்கு விரைந்தார் அந்த 

வங்கியின் கிளை மேலாளர். அதற்குள் அந்த நபர் தொலைபேசி 

கூண்டைவிட்டு வெளியே வந்து காவலர்கள் அருகே நின்றிருக்கிறார்.

 

பணத்தை கொண்டு சென்ற கிளை மேலாளர் அந்த குறிப்பிட்ட இடம் 

வந்ததும் காவலர்கள் அருகே நின்றிருந்த  வங்கித் தலைவரின் 

மைத்துனரை கண்டுகொண்டு அருகே சென்று மலையாளத்தில் விசாரித்திருக்கிருக்கிறார். அவர்கள் இருவரும் மலையாளத்தில் 

பேசிக்கொண்டதால் அருகில் இருந்த காவலர்களுக்கு அவர்கள் 

பேசியது எதுவும் புரியவில்லை.

 

அந்த நபரும் தொலைபேசியில் சொன்னதையே சொல்லி நன்றி 

தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு போனதும் உடனே அனுப்பிவைப்பதாக சொல்லியிருக்கிறார். வேறு ஏதேனும் உதவி 

தேவையா?’ எனக் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. 

வங்கி தலைமை அலுவலகத்திலிருந்தே காவல் நிலையத்தில் 

பேசிவிட்டதால் அவர்கள் பார்த்து கொள்வதாக சொல்லிவிட்டார்கள். 

எனவே நீங்கள் சிரமப்படவேண்டாம். என சொன்னதும் அந்த கிளை 

மேலாளர் திரும்பிவிட்டார். 

 

அப்போது கூட அருகே நின்றிருந்த காவலர்களிடம் எதுவும் 

விசாரிக்கவேண்டும் எனத் தோன்றவில்லை அந்த மேலாளருக்கு. 

அவர் திரும்பியதும் அந்த ஏமாற்றுப் பேர்வழி தனக்கு உதவி செய்த 

காவலர்களுக்கு பதில் மரியாதை செய்திருக்கிறார். பிறகு நீதிமன்றம் 

இருந்த ஊருக்கு அந்த காவலர்கள் அவரை அழைத்து சென்றிருக்கிறார்கள்.

 

பணத்தைக் கொடுத்துவிட்டு வங்கி கிளைக்குத் திரும்பிய உடனே 

மேலாளர் செய்த முதல் வேலை தலைமையகத்தை பேசியில் 

தொடர்பு கொண்டதுதான். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பது 

அனைவருக்கும் தெரிந்ததுதான்.  

 

தொடரும்

 

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. இது மாதிரியான திருடர்கள் இன்றும் இருப்பதை பத்திரிகைச் செய்திகள் சொல்லுகின்றன.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  3. எத்தனை எளிதாக மக்கள் ஏமாறுகிறார்கள்....! படித்தவர் படிக்காதவர் அதிகாரிகள் பொது மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டிய பதிவுகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  4. உண்மையிலேயே ‘ஜகஜாலக் கில்லாடி’ தான் கவனிப்பு என்ற வார்த்தையால் காவலரையும் கவுத்தி விட்டானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  5. இந்த ஆள் தண்டனையின்றி தப்பித்திருந்தாலும் அது ஆச்சரியமில்லை. எப்படியாவது காரியத்தை சாதித்துக்கொள்வது இன்றைக்கு சாமர்த்தியமாகிவிட்டது. கொடுமைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்த நபர் சிறிய தண்டனை பெற்று வெளியே வந்துவிட்டதாக கேள்வி.

      நீக்கு
  6. விக்கிரமாதித்தன் கதையில் வரும் திருடனை மிஞ்சிவிட்டான் இந்த ஆள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  7. ஆகா துப்பறியும்தொடர் கதை தான்.
    அடுத்தது என்ன.....
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு
  8. பலே ஆளாகத் தான் இருந்திருக்கிறார் அவர்! :)

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு