செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 16




ரூபாய் இரண்டு இலட்சத்தை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தொலைபேசியில் வங்கித் தலைவர் குரலில் பேசியவர் 
சொன்னதின் பேரில் விதிகளுக்கு புறம்பாக பணத்தை கொடுத்த 
அலுவலர் தான் ஏமாந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் 
என்ன செய்வதென்று புரியாமல் விழித்திருக்கிறார்.


அவர் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து அந்த பணத்தை எடுத்து 
செல்ல பற்று சீட்டு தயார் செய்த அலுவலரும் அவசரப்பட்டு 
நாமும் மாட்டிக்கொண்டோமே என்று கவலைப்பட்டிருக்கிறார்.

வங்கிகளின் விதிப்படி அன்றைய கணக்கு முடித்து வரவு செலவு பார்க்கும்போது  கணக்கு புத்தகத்தின்படி வங்கிக்கு செலுத்தப்பட்ட தொகையும் விதிமுறைப்படி கொடுக்கப்பட்ட பணத்தையும் 
கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது  வரும் கையிருப்புத்
தொகையும் வங்கியில் உள்ள தொகையும் சரியாக (Tally) இருக்கவேண்டும்.   

அந்த இரண்டு இலட்சம் ரூபாய்களும் விதிகளுக்கு உட்பட்டு 
தராததால் நிச்சயம் அவை இருப்பில் குறைவதாகவே 
கணக்கிடப்பட்டு அதற்கு காரணமான அந்த இரு அலுவலர்கள் 
மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் 
இருவருமே பயந்திருக்கிறார்கள்.

அந்த வங்கியில் ரூபாய் பத்தாயிரமும் அதற்கு மேலும் கணக்கில் குறைந்தால் முதலில் பணி இடை நீக்கம் (Suspension) செய்துவிட்டு 
பின்னர் குற்ற அறிக்கை (Charge Sheet) தந்து மேல் நடவடிக்கை 
எடுப்பது வழக்கம். எல்லா வங்கியிலும் பணம் குறைந்தால் 
இது போன்ற நடவடிக்கை தான் எடுப்பார்கள்.

அவர்கள் இருவரும் உடனே அவர்கள்  சார்ந்திருந்த அலுவலர் 
சங்கத்தை தொடர்பு கொண்டபோது, உடனே அந்த பணத்தை 
கட்டுங்கள் அப்போதுதான் பணி இடை நீக்கம் இல்லாமல் 
தப்பிக்கலாம். என அறிவுறுத்தியிருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.

அந்த இரு அலுவலர்களும் உடனே தங்களோடு பணிபுரிந்த 
நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி அன்று 
மாலைக்குள் அந்த பணத்தைக் கட்டி பணி இடை நீக்கம் 
ஆகாமல் தப்பித்துக்கொண்டது வேறு கதை.

இந்த இடத்தில் ஒன்றை கவனிக்கவேண்டும். அவர்களை 
ஏமாற்றிய அந்த நபர் நமது அலுவலகங்களின் இருக்கும் 
நடைமுறையை அறிந்து சுலபமாக வெறும் வாயையும் 
புத்தியையும் மூலதனமாகக் கொண்டு சில மணித்துணிகளில் 
இரண்டு இலட்ச ரூபாய்களை சம்பாதித்துவிட்டார்.

ஆனால் வங்கியில் விழிப்போடு இருக்கவேண்டிய 
அலுவலர்கள் இருவரும் தங்களது மேல் அலுவலர் பேசுகிறார் 
என்றதும் சிறிது கூட யோசிக்காமல் பணத்தை கொடுத்து 
அதை இழந்துவிட்டார்கள்.

அதற்கு காரணம் நம் நாட்டு அலுவலகங்களில் பணிபுரிவோரில் பெரும்பான்மையோர் தமது மேலதிகாரிகளின் செல்லப்பிள்ளைகளாக 
(in their good books) இருந்தால்தான் சலுகைகளும் பதவி உயர்வு பெறமுடியும் என்று அலுவலக வேலை மட்டுமல்லாமல், தங்களது
மேல் அலுவலர்களின் தனிப்பட்ட வேலையையும் செய்து கொடுப்பது போன்ற நடைமுறையை அவர்கள் பின்பற்றியதுதான்.

இந்த பலகீனத்தை அறிந்ததால்தான்  அந்த நபர் வெகு 
சுலபமாக அநேகம் பேரை ஏமாற்றியிருக்கிறார். ஆனால் 
எனக்கு இன்றளவும் ஒரு ஐயம் மனதில் உண்டு. அது 
என்னவென்றால் அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கலாம்.
அவர் பல குரலில் பேசும் கலையை கற்றிருக்கலாம். அதனால் 
அவரால் ஒரு அரசியல் தலைவர் போலவோ அல்லது ஒரு
திரைப்பட நடிகர் போலவோ எளிதாக பேசமுடியும். ஏனெனில்
அவர்களின் பேச்சை அரசியல் கூட்டங்களிலோ அல்லது திரைப்படங்களிலோ கேட்டு அதுபோல் பேசி பழக வாய்ப்புண்டு. 
ஆனால் நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் தலைவர் 
குரலையோ அல்லது அரசு செயலரின் குரலையோ அவர் எங்கு கேட்டிருக்கமுடியும் என்பதே அது.


எது எப்படியோ உண்மையில் அவர் ஒரு பல குரல் மன்னன் 

என்பதிலோ அதி புத்திசாலி என்பதிலோ இரு வேறு கருத்துக்கள் 

இருக்க முடியாது. 

 

இதுபோன்று ஏமாற்றுப் பேர்வழி வங்கியாளர்களையோ அரசு 

ஊழியர்களையோ 90 களில் ஏமாற்றியது ஒன்றும் நமக்கு புதிதல்ல. 

ஏனெனில் இவர் இவ்வாறு செய்யு முன்பே, 1971 ஆம் ஆண்டு 

புது தில்லியில் வேறொருவர் இதைவிட மிகவும் துணிச்சலாக செய்த 

காரியம் பல நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

அது என்ன தெரியுமா?

 

தொடரும்

 



அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளித் திருநாள்  வாழ்த்துக்கள்!




17 கருத்துகள்:

  1. உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை காக்காய் பிடிப்பதற்கென்றே இருக்கும் சில மனிதர்களைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்.
    எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. // அதற்கு காரணம் நம் நாட்டு அலுவலகங்களில் பணிபுரிவோரில் பெரும்பான்மையோர் தமது மேலதிகாரிகளின் செல்லப்பிள்ளைகளாக
    (in their good books) இருந்தால்தான் சலுகைகளும் பதவி உயர்வு பெறமுடியும் //

    இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் சிலரை இங்கே பார்த்ததுண்டு!

    தொடர்கிறேன்...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் தொடர்வதற்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. Haste and eagerness to be in good books of superior officers trap the employees. One must discharge assigned duties with thoughtfulness and due compliance to rules.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N கோவிந்தராஜன் அவர்களே! தங்கள் கருத்தொடு உடன்படுகின்றேன்.
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. விழிப்போடு இராமல் கோட்டைவிட்டது ஊழியர்களின் தவறுதான்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    நான் பிறப்பதற்கு முன்பு நடந்த செயலா, கண்டிப்பாக படிக்கிறேன். தொழில் நுட்பம் அவ்வளவாக வளராத காலத்திலும் இம்மாதிரியான செயல்கள் நடந்தேறியிருக்கிறதா, ஆச்சிரியமாக தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அப்போது தொழில் நுட்பம் வளராவிட்டாலும் மக்களின் மதி நுட்பம் வளர்ந்திருந்தது என்பது உண்மை! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. //அந்த இரு அலுவலர்களும் உடனே தங்களோடு பணிபுரிந்த

    நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி அன்று

    மாலைக்குள் அந்த பணத்தைக் கட்டி பணி இடை நீக்கம்

    ஆகாமல் தப்பித்துக்கொண்டது வேறு கதை.//


    சரி, நாள் முழுக்க அலுவலக வேலை பார்க்காமல் 2 லட்சம் புரட்ட செலவு பண்ண நேரத்துக்கு சம்பளம் வாங்கிக்கொண்டார்களா? அது எந்தக் கணக்கில் சேரும்? ஒரே பகலில் இரண்டு லட்சம் புரட்டக்கூடியவர்கள் என்றால், பெரிய இடம்தான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த அலுவலர்கள் இருவரும் தங்களோடு பணிபுரியும் நண்பர்களிடம் கைமாற்றாக கடன் வாங்கித்தான் அந்த தொகையை செலுத்தியிருக்கிறார்கள். கூட பணிபுரியும் இருபது நண்பர்கள் ஆளுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் இரண்டு இலட்சம் ரூபாய்கள் கட்ட முடியாதா என்ன? பின்னர் அவர்கள் உறுப்பினராக உள்ள அலுவவலர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில் கடன் பெற்று நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் அல்லர். மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தான். அவர்கள் செய்த தவறுக்கு பல மாதங்கள் உழைத்து சங்கத்தில் வாங்கிய கடனை அடைத்திருக்கிறார்கள்.அவ்வளவுதான்.

      நீக்கு
    2. இந்த நிகழ்ச்சி 90-களில் நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். தாங்கள் கூறுவதைப்பார்த்தால் 2000- ஆண்டுக்குப் பின் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் விதிமுறைகளை வளைத்துவிட்டு பிரச்சனைக்குள்ளானால் இதை ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

      நீக்கு
  8. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே!

    பதிலளிநீக்கு