செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 13

நண்பர் சரவணன் கவிதை வாசித்து முடித்ததும் அறிமுக நிகழ்ச்சி மேலும் தொடர்ந்தபோது, புது தில்லியில் வசிக்கும் நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேல் அறிமுகம் செய்யப்பட்டு, அவருக்கு நண்பர் செல்லப்பா பொன்னாடை போர்த்தினார்.





நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேலுக்கு பொன்னாடை போர்த்தும் நண்பர் செல்லப்பா


பிறகு நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேல் பேசும்போது, தான் திருமதி C.K.கரியாலி (இ.ஆ.ப) அவர்களுடன் சேர்ந்து Amma model of Development in Tamil Nadu என்ற நூலை எழுதியிருப்பதாக சொல்லி அந்த நூலின் ஒரு படியை (Copy) எல்லோருக்கும் காண்பித்தார்.


நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேல் தான் எழுதிய நூலுடன்


நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேல் இதுவரை 10நூல்கள் எழுதியுள்ளார் என்பதும் அவைகளில் இரண்டு திருமதி கரியாலி அவர்களுடன் சேர்ந்து எழுதியது என்பதும் தற்போது 11 ஆவது நூலை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பதும்எங்களுக்குத் தெரியாத தகவல்கள்.


அடுத்து அறிமுகம் செய்யப்பட்ட நண்பர் அந்தோணி ராஜுக்கு பொன்னாடை போர்த்துமுன் அவரைப்பற்றி பேசுகிறார் நண்பர் நாகராஜன்.

B Batch நண்பர்கள் அறிமுகம் முடிந்ததும் அவர்களையெல்லாம் அறிமுகம் செய்த நண்பர் நாச்சியப்பனை நண்பர் முருகானந்தம் அறிமுகம் செய்தார். அப்போது அவர் நண்பர் நாச்சியப்பன் இந்த சந்திப்புக்குக்காக வாங்கிய அனைத்து பரிசுப் பொருட்களையும் மிக நியாயமான விலையில் பெற உதவியதையும், மேலும் இந்த விழா நடைபெற தஞ்சை நண்பர்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.


நண்பர் நாச்சியப்பனை அறிமுகம் செய்கிறார் நண்பர் முருகானந்தம்


நண்பர் நாச்சியப்பனுக்கு பொன்னாடை போர்த்துகிறார் நண்பர் பிச்சைதுரை அருகில் திருமதி நாச்சியப்பன்.


பெரியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து சிறப்பிக்கிறோமே அவர்களோடு வந்திருக்கிற குழந்தைகளுக்கு ஏதாவது பரிசுகள் தந்து அவர்களையும் மகிழ்விக்க வேண்டாமா என்ற எண்ணம் தஞ்சை நண்பர்களுக்கு வந்தது போலும். அதனால் வந்திருந்த குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.


வந்திருந்த குழந்தை ஒன்றிற்கு நண்பர் பாலு பரிசு வழங்கியபோது


நண்பர் ஜெயராமனின் பெயர்த்திக்கு நண்பர் பாலு பரிசு வழங்கியபோது


பரிசை வாங்கிய குழந்தை அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே தனது இருப்பிடத்திற்கு எடுத்து சென்றபோது


இந்த சந்திப்பில் தஞ்சை நண்பர்கள் அல்லாமல் தஞ்சை நண்பர்களின் சொந்தங்களும் தங்கள் வீட்டு நிகழ்ச்சி போல் எண்ணிக் கொண்டு ஓடியாடி வேலை செய்ததை பார்க்கமுடிந்தது.

அரங்க வாயிலில் வருகிறவர்களை தஞ்சை நண்பர்களின் துணைவியார்கள் வரவேற்கும் பணியை மேற்கொண்டிருந்தார்கள் என்றால் மற்ற உதவிகளை தஞ்சை நண்பர்களின் உறவினர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

நண்பர் பாலுவின் பெயரன் நடராஜனைப்பற்றி இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். புகைப்பட கலைஞர் எங்களை குழுவாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது அங்கும் இங்கும் ஓடி அனைவரிடமிருந்தும் கைப்பேசியை வாங்கி சுறுசுறுப்பாக எங்களை கைப்பேசியில் படம் எடுத்து கொடுத்து உதவியவர் அவர்.


நண்பர் நாச்சியப்பன் செல்வன் நடராஜனை அறிமுகம் செய்து பேசியபோது


செல்வன் நடராஜனுக்கு நண்பர் நாச்சியப்பன் பரிசு வழங்கியபோது

அறிமுக நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்போது இடையே பிஸ்கட்களும் காஃபி மற்றும் தேநீரும் வழங்கப்பட்டன. பின்னர் சுவையான புதினா சாறும் (Mint Juice) வழங்கப்பட்டது.

அறிமுக நிகழ்ச்சியும், பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் முடிவடைந்த பின், இதற்குமுன் நடைபெற்ற சந்திப்புகள் பற்றி பேச மேடைக்கு வந்தார் நண்பர் பாலு.


தொடரும்
















18 கருத்துகள்:

  1. வந்திருந்த குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்துள்ளதுதான் மிகச் சிறப்பானதோர் செயலாகப் பார்க்க முடிகிறது.

    புகைப்பட கலைஞர் உங்களையெல்லாம் குழுவாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது அங்கும் இங்கும் ஓடி அனைவரிடமிருந்தும் கைப்பேசியை வாங்கி சுறுசுறுப்பாக உங்களை கைப்பேசியில் படம் எடுத்து கொடுத்து உதவியவரான செல்வன். நடராஜன் உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியவர்.

    இதுதான் வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளித்திருக்கும்.

    விறுவிறுப்பான இந்தத் தொடர் மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  2. ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்த விதம் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. இந்தப் பகுதியை வாசித்து முடித்ததும் ஏனோ திரு. நாச்சியப்பன் அவர்கள் மனசில் நிற்கிறார். ஏன் என்று மனசுக்குத் தெரிகிறது. தெரிந்ததைச் சொல்லத் தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர் நாச்சியப்பன் தங்களின் பின்னூட்டத்தை கண்டு நிச்சயம் மகிழ்ச்சி அடைவார். அவர் சார்பில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  5. குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்தது நல்ல விஷயமே . நல்ல தொகுப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி அபயா அருணா அவர்களே!

      நீக்கு
  6. அறிமுகங்கள் பற்றியறிந்தேன். தஞ்சை நண்பர்களின் உறவினர்களும் வீட்டு நிகழ்ச்சி போல் ஓடியாடி வேலை செய்தது பெரிய விஷயமே. இத்தனை பேரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், இது போல விழாக்கள் ஏற்பாடு செய்வது கடினமே. தொடருங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். ஊர் கூடி தேர் இழுத்தால்தானே அது எளிதாக நகரும். தஞ்சை நண்பர்களின் உறவினர்கள் அனைவரும் பணிகளை பகிர்ந்துகொண்டு செயலாற்றியதால் விழா வெற்றிகரமாக நடந்தேறியது.

      நீக்கு
  7. தொடர்ந்து நிகழ்வுகளை வாசித்து வருகிறேன்.குழந்தைகள் கதாநாயகர்களாகிவிட்டார்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களே! உண்மைதான். அன்று நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகள் தான் கதாநாயகார்கள்.

      நீக்கு
  8. மேலே, மூத்த வலைப்பதிவர் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்ட “வந்திருந்த குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்துள்ளதுதான் மிகச் சிறப்பானதோர் செயலாகப் பார்க்க முடிகிறது” என்ற கருத்து என்னுள்ளும் ஓடியது. பேரப்பிள்ளைகள் தலைமுறைக்கும் இந்த விழா தொடருவதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. சந்தோளமான நிகழ்வுகளின் தொகுப்பு
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு