வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 33


ஓய்வுக் கொட்டகைக்கு சென்று காயலை பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், எங்களை அங்கு பாதுகாப்பாக அழைத்து வந்த எல்லா படகோட்டிகளையும் நாங்கள் பயணித்த படகில் அமரச்செய்து படம் எடுத்தேன்.




அப்போது அவர்களில் ஒருவர், ‘சார். நாளை இந்த படத்தை முகநூலில் (Facebook) போட்டுவிடுவீர்கள் அல்லவா?’ எனக் கேட்டபோது எந்த அளவுக்கு இந்த முகநூல் எல்லோரையும் சுண்டி இழுத்துக் கட்டிப் போட்டிருக்கிறது என அறிந்து ஆச்சரியப்பட்டேன்.


படகோட்டி நண்பர்கள்.


படகில் என்னோடு பயணித்த நண்பர்களையும் அப்போது படம் எடுத்தேன்.


நண்பர்கள் அழகப்பன் கோவிந்தசாமி மற்றும் திருமதி கோவிந்தசாமி


இடதுபுறத்தில் திருமதி திருநாவுக்கரசு வலதுபுறத்தில் என் துணைவியார்.


நண்பர்கள் T.N.பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு மற்றும் நண்பர் ஒருவரின் பெண் அவரது குழந்தையுடன்.

ஓய்வுக் கொட்டகைக்கு சென்ற நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் எல்லோரும் திரும்பி வந்தவுடன், படகுகள் அனைத்தும் முத்துப்பேட்டையை நோக்கி நகரத் தொடங்கின.


கரைக்கு திரும்பும்போது எடுத்த படம்

திரும்பும்போது அணி வகுத்து நிற்கும் அந்த கண்டல் தாவரங்களைப் பார்த்ததும், ஆழிப்பேரலையின் போது அவைகள் இல்லாமலிருந்திருந்தால் முத்துப்பேட்டையும் அதன் அருகில் இருந்த ஊர்களும் என்னவாயிருக்கும் என்று திரும்பவும் யோசித்தேன். நினைக்கவே பயமாயிருந்தது.

அவைகள் அரணாக இருந்து கொடுத்த/கொடுத்துக்கொண்டு இருக்கும் பாதுகாப்பை எண்ணாது, சிலர் விறகுக்காகவும் கால்நடைகளின் தீவனத்திற்காகவும் இந்தக் காடுகளை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியைக்கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது வனத்துறையினர் அலையாத்திக் காடுகளை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்றும் அதனால் அலையாத்திக்காடுகள் அழிக்கப்படுவது மிகவும் குறைந்துள்ளது என அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

கரையை நோக்கி எங்களது பயணம் தொடங்கும்போது மணி 12.30 க்கு மேல் ஆகிவிட்டதால், தலைக்கு மேலே கூரை (Canopy) இருந்தும் வெயிலின் உக்கிரத்தை உணர முடிந்தது. நல்ல வேளையாக கையிலே தண்ணீர் இருந்ததால் அதைக் குடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொண்டேன்.

நமக்கே இப்படி இருக்கிறதே கூரை இல்லா படகில் பயணிக்கும் நண்பர்களுக்கு எப்படி இருக்குமோ என யோசித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயணித்த படகு எங்களைக் கடந்து சென்றது. அதில் நண்பர் நாகராஜனுடன் மற்ற நண்பர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தலையில் துண்டு/கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு வெயிலைப்பற்றி கவலையின்றி பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.



வெயிலை மகிழ்ச்சியோடு எதிர்கொண்ட நண்பர்கள்

காயலைப் பார்க்க போகும் போது எப்போது அங்கு போய் சேருவோம் என்ற ஆர்வம் இருந்ததுபோல், திரும்பும்போது, எப்போது முத்துப்பேட்டை கரையை அடைவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம் பசி வயிற்றைக் கிள்ளியதுதான்.

நாங்கள் முத்துப்பேட்டை தோணித்துறையை அடைந்தபோது மதியம் மணி 2.


படகிலிருந்து இறங்கி நண்பர் நாகராஜனின் மகனின் நண்பருடைய தென்னந் தோப்பிற்கு (நாங்கள் தேநீர் அருந்திய இடம்) விரைந்தோம்.

தொடரும்

22 கருத்துகள்:

  1. அழகிய படங்கள் ரசிக்க கூடிய சூழலுடன் இருக்கிறது...
    தொடர்கிறேன் த.ம.பிறகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. சூழல் அருமையாக உள்ளது. தொடர்ந்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!

      நீக்கு
  4. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 18-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து :

    //காயலைப் பார்க்க போகும் போது எப்போது அங்கு போய் சேருவோம் என்ற ஆர்வம் இருந்ததுபோல், திரும்பும்போது, எப்போது முத்துப்பேட்டை கரையை அடைவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம் பசி வயிற்றைக் கிள்ளியதுதான்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பசி வந்தால் பத்தும் மறந்துபோகும் எனச் சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்.

    அருமையான புகைப்படங்களுடன் அற்புதமான பதிவு. படிக்கும் போது நாங்களும் உங்களுடன் காயலுக்கு வந்ததுபோல ஓர் பிரமையை ஏற்படுத்தியது. தொடரட்டும்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ

      நீக்கு
  6. முதல் படச் சூழல் ரசிக்க வைக்கிறது !
    நண்பர் T.N.பாலசுப்பிரமணியன்அவர்களை பார்த்த மாதிரியிருக்கே ,மதுரைக் காரரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், இரசித்தமைக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! நண்பர் T.N.பாலசுப்ரமணியன் அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். மதுரை பக்கம் பணி புரிந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

      நீக்கு
  7. படங்கள் கண்களை கவரும் வகையில் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  8. அழகான இடங்களை அழகாய் படம் பிடித்து பகிர்ந்ததுக்கு நன்றிப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! இதற்கு முந்தைய பதிவைப் படி(பார்)த்தீர்களா?

      நீக்கு
  9. படகோட்டிகளை கௌரவப் படுத்தியது நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!


      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  11. முத்துப்பேட்டை கரைக்குத் திரும்பிய படகைப் பார்த்த பொழுது (கடைசிப்படம்) அது சென்று மீண்ட கதையைச் சொல்கிற உணர்வைப் பெற்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு