இணைய தள அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்!
தமிழ்மணத்தில் வரும் வலைப்பதிவுகளைப்பார்க்கும்போது நாமும்
ஒரு பதிவைத்தொடங்கலாமே என்ற எண்ணம் கடந்த ஓர்
ஆண்டுகாலமாக இருந்தாலும் எப்படித்தொடங்குவது எனத்
தெரியாததால் தொடங்கவில்லை.
நண்பர் திரு. மஸ்தூக்கா அவர்களின் அதிரை வலைப்பதிவில்
சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி என்ற
தொடரைப்படித்ததும் இதோ ஆரம்பித்துவிட்டேன். மருத்துவம்
படிக்க ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால் வேளாண்மை
அறிவியல் படித்து மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண்
துறைகளில் பணி ஆற்றி பின் வங்கியில் சேர்ந்து 35 ஆண்டு
காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.
எனது நினைவலைகளில் வருபவைகளை எழுத இருக்கிறேன்.
மூத்த வலைப்பதிவாளர்கள் ஊக்கம் தர வேண்டுகின்றேன்.
இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க கிரியா ஊக்கியாக
இருந்த நண்பர் திரு.மஸ்தூக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள் பல.
வே.நடனசபாபதி

நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்' தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
பதிலளிநீக்குதாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அன்புடன்
மஸ்தூக்கா
வாழ்த்துக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உண்டு.
பதிலளிநீக்குஅன்புடன்
வே.நடனசபாபதி
வாருங்கள் அய்யா!தங்கள் வரவு நல்வரவு ஆகுக.இணையத்தை இனிய தமிழால் நிரப்புங்கள்.வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க எத்துணையோ உள.எழுதுங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
(please remove word verification)
அய்யா,வாங்க,வாங்க.நீங்க நம்ம வர்க்கமா?வங்கிப் பணியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் இருக்குமே.எழுதுங்கள்.அனுபவம்,கலை இலக்கியம் என்று கலக்குங்கள்.
பதிலளிநீக்குநல் வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றி திரு மதுரை சொக்கன் அவர்களே! தங்களைப்போன்ற மூத்த பதிவாளர்கள் கொடுக்கும் ஊக்கம் எனக்கு புது தெம்பைக்கொடுக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
பதிலளிநீக்குநன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தாங்களும் என்னைப்போல் வங்கியாளர் என எண்ணும்போது மகிழ்ச்சி. வங்கியில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள உங்களைப்போன்ற நண்பர்கள் உண்டு என்பதை அறிய இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி பல.
பதிலளிநீக்குஇன்று தான் அறிமுகம் படித்தேன் வாழ்த்துகள் தொடருங்கள் எனது வலையில் என் அறிமுகம் வாசியுங்கள் சகோதரா! வலை முகவரி எழுதுகிறேன்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வருகைக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!. தங்கள் அறிமுகம் கண்டேன். எனது கருத்தை,தங்களின் வலைப்பதிவில் இட்டுள்ளேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் .
பதிலளிநீக்குபின்னோக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்றெனக்குப்படுகிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ஆனால் நான் பாதி கிணறு தாண்டியதாகத்தான் உணர்கிறேன்,
பதிலளிநீக்கு