வெள்ளி, 27 ஜனவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 9

‘நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்றபோது திடீரென பாடல் தடைப்பட்டு புரியாத சில ஒலிகளை வெளியிட்டு பின்னர் பாடலைத் தொடங்கியது. வாழ்த்துப் பாடல் முடிந்தபோது அது முழுப் பாடலாக இல்லாமல் சுருக்கிய (Abiridged) பாடல் போல் ஆகிவிட்டது.


சனி, 14 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்து


உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் பெருங்குடியை உள்ளகத்தில் வாழ்த்தி

வருகின்ற நாட்களில் வானம் பொழிந்து

வையத்தில் உள்ளோர் வளமுடன் வாழவும்

எல்லோர் மனதிலும் இன்பம் நிலைக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்


பதிவுலக நண்பார்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை பஃறொடைவெண்பா வடிவில் எழுதியுள்ளேன்.


வாழ்த்துகளுடன்

வே.நடனசபாபதி






வியாழன், 12 ஜனவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 8

சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு வரும் போது வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு நண்பர்கள் கொடுத்த பையுடன் அரங்கினுள் நுழைந்து அமர்ந்தேன். என் அருகில் முதன் முதல் தமிழக அரசுப் பணியில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் (அப்போதைய தஞ்சை மாவட்டம்) வேளாண்மை விரிவாக்க அலுவலகராக 1966 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5 ஆம் நாள் பணியில் நான் சேர்ந்தபோது என்னோடு அப்போது அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நண்பர் வீராசாமி வந்து அமர்ந்தார். நானும் நண்பர் வீரசாமியும் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் பின் ஒருவராய் வந்து அமரத் தொடங்கினர்.