புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து


பொங்கல் விழாவாம் தமிழர் திருநாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளினால்
பொங்கட்டும் பால்போல பாசமும் நேசமும் 
தங்கட்டும் எங்கும் அமைதியும் நல்லுறவும் 
நீங்கட்டும் நாட்டில் துயரமும் துன்மையுமென 
அன்புடன் வாழ்த்தும் வழுத்து

அன்பன் 
வே.நடனசபாபதி 

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தொடரும் சந்திப்பு 18


நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தபோது  போட்டியில் சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிர் மட்டும் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஒருவேளை அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்றால் எங்களுக்கு  பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், சரியான  பதிலை சொல்வோருக்கு ரூபாய் 100 பரிசாகத் தரப்படும் என அவர் அறிவித்தார் என சொல்லியிருந்தேன்.