அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் எப்பொழுதுமே
மெதுவாகத்தான் செயல்படும் என்பது எல்லோரும் சொல்வது.
அது உண்மையும் கூட. மேலும் அவர்களிடம்
உதவி நாடி
சென்றால் நமக்கு பலன் கிடைக்காது என்று தெரிந்தும் நாம்
வேறு வழியின்றி பல
நேரங்களில் அவைகளையே சார்ந்து இருக்கவேண்டியிருக்கிறது என்பது தான் வேதனை.
நேற்று எனக்கு ஏற்பட்ட
அனுபவத்தைப்
பார்க்கும் பொழுது கூடியவரையில் அரசு நிறுவனங்களை
நாடாமல் இருப்பதே மேல்
என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
எனது மாமா மகன், அவரது கைப்பேசி இம்மாதம்
மூன்றாம் தேதியிலிருந்து
இணைப்பு கிடைக்காததால்
பயனற்று இருப்பதாகவும் பலமுறை புகார் செய்தும்
ஒன்றும் நடக்கவில்லை
என்றும் சொன்னார். ‘முடிந்தால்
நீயும் புகார் செய்து பார்.’ என்றார்.
உடனே நேற்று மாலை BSNL ன் Help Line எண்ணான
94440 24365 க்கு எனது தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டேன்.
வழக்கம்போல் முன்பே பதிவு செய்யப்பட்ட
குரல் ஒலித்தது. தமிழில் பேச எண் 1 ஐயும்
ஆங்கிலமானால் எண் 2 ஐயும், இந்தியில் பதில்
வேண்டுமென்றால் எண்
3 ஐயும் அழுத்துமாறு
சொல்லப்பட்டது.
நான் தமிழில் பேச எண் 1 ஐ தேர்ந்தெடுத்தேன். அங்கும்
ஒவ்வொரு
சேவைக்கும் ஒவ்வொரு எண் தரப்பட்டது.
எனது உறவினரின் கைப்பேசி மாத இறுதியில் கட்டணம்
கட்டும் சேவை (Post Paid Connection) ஆதலால் அதற்காக
உள்ள 2 ஆம் எண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.
அங்கும் ஒவ்வொரு சேவையைப்பற்றி
அறிய வெவ்வேறு
எண் கொடுக்கப்பட்டது. கைப்பேசி 20 நாட்களாக வேலை
செய்யவில்லை என விவரமாக
சொல்லவேண்டி இருந்ததால்,
சேவை மய்ய அதிகாரியை தொடர்பு கொள்ளும் எண்ணான
9 ஐ தொடர்பு கொண்டேன்.
சிறிது நேரம் காக்க
வைத்த பின் ஒருவர் தொடர்பில் வந்து
பேசினார். ‘என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக
கூப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான் பழுதடைந்த கைப்பேசி
எண்ணை சொல்லி, ‘அது 3 ஆம் தேதியிலிருந்து செயலிழந்து
இருக்கிறது
அது குறித்து பலமுறை புகார் செய்தும் எந்த
நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே
கடிதம்
மூலம் புகார் செய்ய விரும்புகிறேன்.
யாருக்கு கடிதம் எழுதவேண்டும்? என்றேன்.
அதற்கு அவர் ‘ஒழுங்காக மாதக் கட்டணத்தை செலுத்தினீர்களா?’
என்றார். நான் ‘மாதக்கட்டணம் Electronic Clearing Service மூலம் செலுத்துவதால்
அந்த கேள்விக்கே இடமில்லை.’ என்றேன்.
உடனே அடுத்த கேள்வி கேட்டார்
பாருங்கள். அதைக்
கேட்டதும் எனக்கு ‘சுருக்’கென கோபம் வந்தது.
‘எப்போதிலிருந்து உங்கள் Land Line வேலை செய்யவில்லை?’
என்பதுதான்
அந்த கேள்வி. நான் ஆரம்பிக்கும் போதே
கைப்பேசி எண்ணை சொல்லி,
அது வேலை செய்யவில்லை
என்றுதான் சொன்னேன். அப்படி இருந்தும் அந்த கேள்வியைக்
கேட்டதும் எனக்கு கோபம் வராமல் என்ன செய்யும்.
அதைக் காட்டிக்கொள்ளாமல்
‘என்னங்க, நான்
ஆரம்பிக்கும்போதே Mobile Phone வேலை செய்யவில்லை
என்றுதானே சொன்னேன். நீங்கள் என்னவென்றால் நான்
சொன்னதை கவனிக்காமல் Landline பற்றி கேட்கிறீர்களே?’
என்றேன்.
அதற்கு அவர் நீங்கள் Landline லிருந்து தானே
பேசுகிறீர்களே
அதனால் கேட்டேன்.’ என்றார். (என்ன Logic பாருங்கள்!)
அப்போதுதான் கோபத்தோடு சொன்னேன். Mobile Phone
சரியில்லை என்றால் Landline மூலம் சொல்லக்கூடாதா?
என்ன
இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில்அளிக்கிறீர்கள்? வாடிக்கையாளர்கள்
என்றால் உங்களுக்கென்ன
கிள்ளுக்கீரையா? எங்களுக்கு உதவத்தானே நீங்கள்
இருக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் நீங்கள்
இல்லை.
அதை புரிந்துகொள்ளுங்கள். சரி இனி உங்களோடு பேசி
பயன் இல்லை. உங்கள் பெயர் என்ன
என்று தெரிந்து
கொள்ளலாமா?’ என்றேன். அவ்வளவுதான்.அவர்
இணைப்பைத் துண்டித்துவிட்டார்!
இதுதான் அந்த சேவை
மய்யம் செய்யும் ‘சேவை’
எனப் புரிந்துகொண்டேன். எனக்கு ஏற்பட்ட ஐயம் இதுதான்.
இவ்வாறு ‘நல்ல’ சேவையைக் கொடுத்தால்
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே
வேறு நிறுவனங்களை
தேடி சென்றுவிடுவார்கள் என்பதுதான் அவர்களின்
எண்ணமா? அல்லது அவர்களால் அந்த சேவையை
செய்ய முடியவில்லையா?
காரணம் எதுவாயினும்
இப்போதாவது BSNL விழித்துக்
கொள்ளாவிட்டால் தனியார் காட்டில்
மழைதான். ஏனென்றால்
இப்போது அதே எண்ணோடு வேறு தொலைத்தொடர்பு
நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும்
வசதி இருப்பதால்
அநேகம் பேர் மாற வாய்ப்புண்டு.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?