வியாழன், 14 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்து

உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி

கொரானா நுணங்கி கொடுமை ஒழிந்து 

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்கவும்

இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்

துன்மையும் துன்பமும் விட்டு விலகவும்

நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று

நலமுடன் வாழ இறைவனை வேண்டி

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில் 

வாழ்கவென வாழ்த்துவேன் நான் 


அன்பன் 


வே,நடனசபாபதி 


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!