செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 38

மறுநாள் காலை நாங்கள் பயணித்த ‘மன்னை’ விரைவு இரயில் 13-09-2016 அன்று அதிகாலை 5.10 க்கு மாம்பலம் இரயில் நிலையம் அடைந்ததும், நண்பர் சேதுராமன் எங்களிடம் விடைபெற்று இறங்கிக்கொண்டார். நாங்கள் எழும்பூர் இரயில் நிலையம் அடைந்தபோது காலை மணி 5.50.

புதன், 6 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 37

முத்துப்பேட்டை தர்காவிலிருந்து நேரே முத்துப்பேட்டை வடக்குக்காடு என்ற இடத்திலிருந்த சின்னப் பண்ணை திரு S.A.D.தட்சிணாமூர்த்தி அவர்களது வீட்டிற்கு சென்றோம். அவர் வேறு யாருமல்லர். நண்பர் நாகராஜனின் சம்பந்தி தான் அவர்.

சனி, 2 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 36

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்!


அந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் முத்துபேட்டைக்கு வரும் அனைத்து மக்களும் செல்லக்கூடிய இடமான, ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமான முத்துப்பேட்டை தர்கா ஆகும்.இதை ஜம்பவனோடை தர்கா எனவும் அழைக்கிறார்கள்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 35

அனைவரும் மதிய உணவு முடித்த பின் கூட்டம் தொடங்க இருக்கும்போது கோவையில் உள்ள நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், T.N பாலசுப்ரமணியனும் என்னிடம் வந்து ‘நடனம். இந்த முறை நாங்கள் கோவையில் சந்திப்பை நடத்தும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.’ என்று சொன்னார்கள்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 34

மதிய உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்பில் சைவம் மற்றும் அசைவம் உண்ணுபவர்களுக்கு தனித்தனி இடங்களில் வரிசையாய் மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. தஞ்சை நண்பர்கள் குழு சார்பாக நண்பர் நாகராஜன் அவருடைய மகன் திரு சாமிநாதன் மூலம் அங்கே சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்திருந்தார்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 33


ஓய்வுக் கொட்டகைக்கு சென்று காயலை பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், எங்களை அங்கு பாதுகாப்பாக அழைத்து வந்த எல்லா படகோட்டிகளையும் நாங்கள் பயணித்த படகில் அமரச்செய்து படம் எடுத்தேன்.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 32

முத்துப்பேட்டை காயலின் ஆழமே வெறும் 4 அடிக்குள் தான் இருக்கும் என்பதால் நாங்கள் பயணித்த அந்த ஜம்புவானோடையின் ஆழம் எவ்வளவு இருக்குமோ என படகில் பயணிக்கும்போது யோசித்துக்கொண்டு இருந்தேன்.ஆனால் ஓடையில் சிறிது தூரம் பயணம் செய்வதற்குள்ளேயே அங்கு மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்களைப் பார்த்ததும் எனக்கு அதனுடைய ஆழம் எவ்வளவு என்பது தெரிந்துவிட்டது.

புதன், 9 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 31

அண்ணாமலை நகரில் 2011 ஆம் ஆண்டு நடந்த எங்களின் சந்திப்பின் போது பிச்சாவரத்தில் 14-08-2011 நாங்கள் மேற்கொண்ட படகுப் பயணமும், அதுபற்றி பிரிந்தவர் கூடினால் ....???????? என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவும், இந்த காயல் பயணத்தின்போது கண்டல் தாவரங்களை (Mangroves), பார்த்த போது என் மனதில் நிழலாடின.

சனி, 29 ஜூலை, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 30

எங்களது படகு நகரத் தொடங்கியதும் ஓடையின் இரு பக்கங்களிலும் இருந்த அந்த அலையாத்தி தாவரங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் இருந்த நீர் பரப்பும், ஏதோ ஒரு புது உலகிற்குள் நுழைவதைப்போன்று உணர்ந்தேன்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 29

நாங்கள் காயல் பயணம் மேற்கொள்ள வேண்டிய தோணித்துறை (Boat Jetty). எங்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து, ஐந்து மணித்துளி நடைப்பயணத்தில் உள்ள கோரையாற்றின் கிளை வாய்க்காலான ஜம்புவானோடையில் இருந்தது. நண்பர் நாகராஜன் தலைமையில் எல்லோரும் கையில் தண்ணீர் பாட்டில்களுடன் படகில் ஏற தோணித்துறைக்கு காலை 10.30 மணிக்குப் புறப்பட்டோம்.

சனி, 8 ஜூலை, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 28

முத்துப்பேட்டை காயலை கண்டு களிக்க படகில் நாங்கள் பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமுன் காயல் என்றால் என்ன என்பது பற்றி தெரியாதவர்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லாமென நினைக்கிறேன்.

புதன், 28 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 27

எப்போதுமே குழுவாக பேருந்தில் பயணிக்கும்போது ஆரம்பத்தில் அனைவரிடமும் இருந்த உற்சாகம், கலகலப்பு நேரம் போகப்போக குறைந்து போய் திடீரென அமைதி குடிகொண்டுவிடும். பாதிபேர் உறங்கிவிடுவதுண்டு. மீதிபேர் அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் எங்களது பேருந்துபயணம் ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பு குறையாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தவர் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள்.

வியாழன், 22 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 26

ஓட்டலில் உள்ள உணவகத்தில் காலை சிற்றுண்டி எடுத்தூண் (Buffet) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இடம் குறைவாக இருந்ததால் வரிசையில் நின்று தேவையானதை எடுத்து சாப்பிட நின்றுகொண்டிருக்கும்போது, அடுத்த சந்திப்பை எங்கு வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி எங்களில் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.

வெள்ளி, 16 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 25

மறு நாள் (12-09-2016) காலையில் 5 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, முத்துப்பேட்டைக்கு செல்ல தயாரானோம். காலை 7 மணிக்கே கீழே உள்ள உணவகத்து வரவேண்டும் என நண்பர் பாலு சொல்லியிருந்ததால், முதல் நாள் காஃபிக்கு காத்திருந்ததைப்போல், காத்திருக்காமல் கிளம்பிவிட்டோம். மறக்காமல் எனது நிழற்படக் கருவியையும் எடுத்துக்கொண்டேன்.

திங்கள், 5 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24


கடைசி போட்டி என்னவாயிருக்கும் அது பற்றி நண்பர் நாச்சியப்பன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் நாங்கள் காத்திருந்தபோது, போட்டியில் கலந்துகொண்டிருக்கும் தம்பதியர்களைப் பார்த்து ‘எல்லோரும் புடவை கொண்டுவந்திருக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டதும், நாங்கள் ‘ஆமாம்.’ என்று ஒரே குரலில் சொன்னோம்.

ஞாயிறு, 28 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 23


நாங்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே குழுமியிருந்ததைக் கண்டேன். மேடையின் வலப்புறம் போட்டியில் பங்கேற்கும் வகுப்புத் தோழர்கள் தங்கள் துணைவியார்களுடன் அமர்ந்திருக்க, விழாவில் இடப்புறம் நண்பர்களோடு வந்திருந்த உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

வியாழன், 18 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 22


தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தது மகிழ்ச்சியைத் தந்தாலும் இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செல்லுகிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.


வியாழன், 11 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 21

முதலில் பெரிய கோவிலுக்கு சென்ற பேருந்து நண்பர்களை விட்டுவிட்டு, திரும்ப எங்களை அழைத்துச் செல்ல வந்தபோது மணி 6.30 க்குமேல் ஆகிவிட்டது தஞ்சை அரண்மனையில் காத்திருந்த நாங்கள் பேருந்தில் ஏறி கோவிலுக்கு செல்லும்போது மணி 6.45 ஆகிவிட்டது.

திங்கள், 8 மே, 2017

‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ நூல் அறிமுகம்

கல்வியாளரும் எழுத்தாளருமான என் அண்ணன் சபாநாயகம் அவர்களுடைய ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ என்ற நூலுக்கு தமிழக அரசு, அவரது மறைவுக்குப் பின் பரிசு அளித்திருப்பதாக ‘எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி’ என்ற தலைப்பில்
29-04-2017 அன்று வெளியிட்டிருந்த எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சனி, 29 ஏப்ரல், 2017

எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி

கல்வியாளரும் எழுத்தாளருமான என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் இயற்கை எய்தி 10 திங்கள் ஆகிவிட்டன என்பதை இன்னும் எங்களால் நம்ப இயலவில்லை. இன்னும் அவர் எங்களோடு இருப்பது போலவே நாங்கள் உணர்கிறோம்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

குமுதமும் விகடனும் – சிறுகதைத் தொகுப்பு 1 – நூல் ஆய்வு

மூத்த வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 30-03-2017 அன்று ‘மின்னல் வேகத்தில் மின்னூல்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த பதிவில் மின்னூல்கள் (e-books) பற்றி குறிப்பிட்டு, அவருடைய 10 படைப்புகள் குறுகிய காலத்தில் மின்னூல்களாக வெளிவந்திருப்பதாக எழுதியிருந்தார். சகோதரி திருமதி கலையரசி அவர்களுடைய படைப்புகளும் மின்னூல் வடிவில் வந்திருப்பதாக எழுதியிருந்தார்.

புதன், 19 ஏப்ரல், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 20

மாலை 6 மணிக்குள் பார்வை நேரம் முடிந்துவிடுவதால் அவசரம் அவசரமாக சரஸ்வதி மகால் நூலகத்திற்குள் நுழைந்தோம். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் அங்கே வேறு விதமாக இருந்தது. நாங்க சென்ற பொழுது அங்கே ஒரு பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்ததால் எங்களால் முழுதும் பார்க்க இயலவில்லை.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 19

மன்னர் சரபோஜி சிலையைப் பார்த்தபின் கலைக்கூடத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களைப் பார்க்க சென்றோம். உள்ளே சென்றபின்தான் தெரிந்தது காமிராவை கையோடு கொண்டுசெல்லாதது எவ்வளவு தவறு என்று. முன்பே எழுதியிருந்தபடி அரண்மனையைப் பார்த்துவிட்டு நேரே பெரிய கோவிலுக்கு செல்ல இருந்ததால் காமிராவை எடுத்துச் செல்லவில்லை.

வியாழன், 30 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 18

தஞ்சை அரண்மனையில் உள்ள அரசவை மண்டபத்தில் (King’s Royal Court) அமைந்துள்ள தஞ்சாவூர் கலைக்கூடம் என அழைக்கப்படும் இராஜராஜ சோழ கலைக்கூடத்தைப் பார்க்க அனைவரும் நண்பர் முருகானந்தம் வழிகாட்ட உள்ளே சென்றோம்.

திங்கள், 20 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 17

தஞ்சை அரண்மனையில் தர்பார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு, ‘கூடகோபுரம்’ என அழைக்கப்படும் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த கோபுரத்தை (Arsenal Tower) பார்க்க விரைந்தோம்.

திங்கள், 13 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 16

தஞ்சை அரண்மனையை அடைந்ததும் நாங்கள் உள்ளே நுழையுமுன் நண்பர் முருகானந்தம் சொன்னார். ‘நண்பர்களே! நமக்கு இடதுபுறம் உள்ள வளாகத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் வாரிசுகள் வசிக்கிறார்கள்; அங்கே செல்ல நமக்கு அனுமதியில்லை.

ஞாயிறு, 5 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 15

மதியம் 3 மணிக்கு வெளியே செல்ல ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதால் விரைவில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று சற்று ஓய்வு எடுத்து வரலாம் என நினைத்தவர்கள் முதல் பந்தியில் சாப்பிட அமர்ந்தார்கள். நான் இரண்டாம் பந்தியில் சாப்பிடலாம் என நினைத்து காத்திருந்தேன்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 14

எங்களுடைய முந்தைய சந்திப்புகள் பற்றி பேச வந்த நண்பர் பாலு, அதுபற்றி பேச மிகவும் தகுதியானவர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் ஏனெனில் எங்களுடைய சந்திப்பு முதன்முதல் நடக்க காரணமானவர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 13

நண்பர் சரவணன் கவிதை வாசித்து முடித்ததும் அறிமுக நிகழ்ச்சி மேலும் தொடர்ந்தபோது, புது தில்லியில் வசிக்கும் நண்பர் சுரேந்திரகுமார் வெற்றிவேல் அறிமுகம் செய்யப்பட்டு, அவருக்கு நண்பர் செல்லப்பா பொன்னாடை போர்த்தினார்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 12

நண்பர் கோவிந்தசாமி நண்பர் சரவணனுக்கு பொன்னாடை போர்த்திய பிறகு நண்பர் சரவணன் பணிபுரியும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 11

A Batch நண்பர்களின் அறிமுகம் முடிந்ததும் B Batch நண்பர்களை அறிமுகம் செய்ய வந்த நண்பர் நாச்சியப்பன் முதலாவதாக நண்பர் முத்துக்கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி, அவரையும் அவருடைய துணைவியாரையும் மேடைக்கு அழைத்தார்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 10

படித்து முடித்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதல் 2007 ஆம் ஆண்டு புதுவையில் நாங்கள் சந்தித்தபோது அனைவருடைய தோற்றமும் மாறியிருந்ததால் அநேகம் பேருக்கு நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. அதனால் எங்களுக்கு அப்போது அறிமுகம் தேவையாய் இருந்தது.


வெள்ளி, 27 ஜனவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 9

‘நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்றபோது திடீரென பாடல் தடைப்பட்டு புரியாத சில ஒலிகளை வெளியிட்டு பின்னர் பாடலைத் தொடங்கியது. வாழ்த்துப் பாடல் முடிந்தபோது அது முழுப் பாடலாக இல்லாமல் சுருக்கிய (Abiridged) பாடல் போல் ஆகிவிட்டது.


சனி, 14 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்து


உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் பெருங்குடியை உள்ளகத்தில் வாழ்த்தி

வருகின்ற நாட்களில் வானம் பொழிந்து

வையத்தில் உள்ளோர் வளமுடன் வாழவும்

எல்லோர் மனதிலும் இன்பம் நிலைக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்


பதிவுலக நண்பார்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை பஃறொடைவெண்பா வடிவில் எழுதியுள்ளேன்.


வாழ்த்துகளுடன்

வே.நடனசபாபதி






வியாழன், 12 ஜனவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 8

சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு வரும் போது வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு நண்பர்கள் கொடுத்த பையுடன் அரங்கினுள் நுழைந்து அமர்ந்தேன். என் அருகில் முதன் முதல் தமிழக அரசுப் பணியில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் (அப்போதைய தஞ்சை மாவட்டம்) வேளாண்மை விரிவாக்க அலுவலகராக 1966 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5 ஆம் நாள் பணியில் நான் சேர்ந்தபோது என்னோடு அப்போது அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நண்பர் வீராசாமி வந்து அமர்ந்தார். நானும் நண்பர் வீரசாமியும் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் பின் ஒருவராய் வந்து அமரத் தொடங்கினர்.