மன்னர் சரபோஜி சிலையைப் பார்த்தபின் கலைக்கூடத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களைப் பார்க்க சென்றோம். உள்ளே சென்றபின்தான் தெரிந்தது காமிராவை கையோடு கொண்டுசெல்லாதது எவ்வளவு தவறு என்று. முன்பே எழுதியிருந்தபடி அரண்மனையைப் பார்த்துவிட்டு நேரே பெரிய கோவிலுக்கு செல்ல இருந்ததால் காமிராவை எடுத்துச் செல்லவில்லை.
ஏற்கனவே எடுத்த படங்கள் கைபேசியில் இடத்தை அடைத்துக்கொண்டு இருந்ததால் கலைக்கூடத்தில் இருந்த சிலைகளையும் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்களையும் எனது கைபேசியில் எடுக்க இயலவில்லை. நல்ல வேளையாக திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் சில படங்கள் எடுத்திருந்தார். அவைகளை இந்த பதிவில் இணைத்திருக்கிறேன்.
கலைக்கூடத்தை சுற்றிப் பார்த்தபோது ஓரிரு மணிகளில் கலைக்கூடம் முழுவதையும் பார்க்க இயலாதென்பதை புரிந்துகொண்டேன். கூர்ந்து கவனித்து இரசிப்பதற்கு அநேக சிலைகளும் படங்களும் இருந்ததால், வெறுமே ‘நுனிப்புல்’ மெய்வதுபோல் பார்த்து செல்வதில் பயனில்லை என்பதை அறிந்துகொண்டாலும் குழுவினரோடு சென்றிருந்ததாலும். மேலும் கோவிலுக்கு சென்றுவிட்டு ஓட்டலுக்கு திரும்பி போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததாலும் ஓட்டமும் நடையுமாக சுற்றிப்பார்த்தேன்..
இந்த கலைக்கூடம் 1951 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாம். இந்த கலைக் கூடத்தில் பெரிய அளவில் சேகரிக்கப்பட்ட சோழர்கள் காலத்தைச் சேர்ந்த ( 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ) மற்றும் நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்த ( 17 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை ) வெண்கலம் மற்று கருங்கல்லில் செய்யப்பட்ட கடவுளர் அழகிய சிலைகள் உள்ளன. மேலும் பல்லவர் காலத்திய சிற்பங்களும், தஞ்சை கண்ணாடி ஓவியங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
அக்கால உடைகளும், நகைகளும், சிகை அலங்காரமும் சில சிலைகளில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது அந்த கால சிற்பிகளின் கைத்திறனை பாராட்டாமல் இருக்கமுடியாது.
அடுத்து பழங்கால நாணயங்களின் தொகுப்பை பார்த்தோம். அவைகள் எல்லாம் கி.மு 300 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டவை என அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க அந்த காலத்தில் புதைக்கப்பட்டிருந்த. சில சிலைகளும், ஓவியங்களும் நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, தற்போது இந்த கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த நடராஜர் சிலைகளின் படங்கள் கீழே.
நாங்கள் சுற்றிப்பார்த்தவைகளை எனது கைப்பேசியில் எடுக்க இயலாமல் போனதால் இணையத்திலிருந்து எடுத்த காணொளியை கீழே தந்திருக்கிறேன். (நன்றி கூகிளாருக்கு)
நண்பர் முருகானந்தம் நேரமாகிவிட்டது ‘வாருங்கள்.போகலாம். தேநீர் அருந்திவிட்டு சரஸ்வதி மஹால் நூலகத்தை பார்வை நேரம் முடியும் முன்னர் பார்த்துவிட்டு கிளம்பவேண்டும்,’ என்று சொன்னதால் வெளியே வந்தோம்.
கோவிலுக்கு சென்றால் திரும்பும்போது உட்கார்ந்து வருவோமே அதுபோல் சில நண்பர்கள் கலைக் கூடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வந்தார்கள். அந்த படம் கீழே.
கலைக்கூடத்திற்கு வெளியே உள்ள திடல் அருகே இருந்த மரத்தடியில் தஞ்சை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தேநீரும் பிஸ்கட்டுகளும் எங்களுக்காக காத்திருந்தன.
தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்சியப்பன் முத்துகிருஷ்ணன் கோவிந்தசாமி ஆகியோரும், பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது நாங்கள் செய்த தவறுகளை, குறும்புகளை சொல்லி ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்து மகிழ்ந்து அந்த காலத்திற்கே சென்றுவிட்டோம்.
எல்லோரும் தேநீர் சாப்பிட்டதும் நண்பர் முருகானந்தமும் பாலுவும் எங்களை சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பார்க்க அழைத்து சென்றனர். நாங்கள் அனுமதி சீட்டைக்காட்டி உள்ளே நுழையும்போது நுழைவாயிலில், கோவை வேளாண் கல்லூரியில் நாங்கள் படித்து முடித்த அதே 1966 ஆம் ஆண்டு படித்து முடித்த நண்பர்களை சந்தித்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று சொல்லலாம்.
கோவையில் படித்த நண்பர்களில் பலர் எங்கள் வகுப்புத் தோழர்களுடன் தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர்கள் என்பதால், எங்கள் நண்பர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டி இருந்துவிட்டு வந்தார்கள்.
அதற்குள் மாலை மணி 5.30 ஆகிவிட்டது.மாலை 6 மணிக்கு மேல் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவசரமாகவும் ஆவலுடனும் நூலகத்தினுள் நுழைந்தோம்.
தொடரும்

விரிவான விடயம் சரளமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன் நண்பரே
பதிலளிநீக்குகாணொளி கண்டேன்
த.ம.
வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERJI அவர்களே!
நீக்குமிகவும் மகிழ்ச்சி அருமையான கலை கூடம்
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!
நீக்குகாணொளியில் முதுமக்கள் தாஇ எந்த சேதமும் இல்லாமல் அண்மையில் செய்தது போல் இருக்கிறதே
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! அகழ்வாய்வின்போது சில பொருட்கள் சேதமில்லாமல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல் இந்த முதுமக்கள் தாழியையும் சேதாரமில்லாமல் எடுத்து வெளியே புதிய பூச்சு கொடுத்திருக்கலாம்.
நீக்குமிகவும் நன்றி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!
நீக்கு//கோவிலுக்கு சென்றால் திரும்பும்போது உட்கார்ந்து வருவோமே அதுபோல் சில நண்பர்கள் கலைக் கூடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வந்தார்கள்.//
பதிலளிநீக்குஎல்லோரும் சீனியர் சிடிஸன்ஸ் ஆகையால் இதெல்லாம் மிகவும் சகஜம்தான். சுற்றிப்பார்க்கையில் எங்கேயேனும் நிம்மதியாக உட்கார மாட்டோமா என கை-கால்கள் கெஞ்சக்கூடும். :)
படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை. தொடரட்டும்.
வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன அவர்களே!
நீக்குமிகவும் அருமை...
பதிலளிநீக்குசிற்பங்கள் மிகவும் அருமை...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே!
நீக்குகாணொளி மூலம் நாங்களும் அங்கே சென்று பார்த்த உணர்வு.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வருகைக்கும், காணொளிமூலம் கலைக்கூடத்தை பார்வையிட்டமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! விரைவில் தங்களது தஞ்சை விஜயத்தையும், அதைத் தொடர்ந்து அழகிய படங்களுடன் கூடிய பதிவை எதிர்பார்க்கலாமா?
நீக்குஇந்தப் பகுதியே அவசர கதி தான். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பின்பு தனியே ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலை நேரம் மட்டும் என்று கலைக்கூடம்+ சரஸ்வதி மஹால் பார்க்க நேரம் ஒதுக்கியிருக்கலாம். இருந்தாலும் மொத்த அட்டவணைக்கான கால ஒதுக்க்கீட்டில் இவ்வளவு தான் முடிந்தது போலும்.
பதிலளிநீக்கு//தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்சியப்பன் முத்துகிருஷ்ணன் கோவிந்தசாமி ஆகியோரும், பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது நாங்கள் செய்த தவறுகளை, குறும்புகளை சொல்லி ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்து மகிழ்ந்து அந்த காலத்திற்கே சென்றுவிட்டோம்.//
அருமை! இதை என்னால் உணர முடிகிறது. ஜென்ம சாபல்யம் என்பார்களே, அதே போல பொன்விழா வருகையின் மொத்த பயன்பாடும் இப்படியான நண்பர்கள் சந்திப்பு சந்தோஷங்களிலியே அடங்கி விடுவதாக இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களுடைய வலைப்பக்கத்தில் புதிய பதிவுகள் இல்லாததாலும், தாங்கள் இந்த தொடரின் 18 ஆவது பகுதிக்கு வராததாலும் ஊரில் இல்லையோ என எண்ணிவிட்டேன். திரும்பவும் வந்து கருத்து இட்டமைக்கு நன்றி.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். உண்மையில் இந்த சந்திப்பை 3 நாட்களுக்குமேல் நடத்தத்தான் விரும்பினோம். ஆனால் பெரும்பான்மையோர் இரண்டு நாட்களே போதும் என்று விரும்பியதால் முதல் நாளில் மதியம் வரை அறிமுக நிகழ்ச்சியும் மாலையில் அரண்மனை, கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் பெரிய கோவிலுக்கு செல்லவும் முடிவு செய்யப்பட்டது. இரண்டாம் நாள் முழுதும் முத்துப்பேட்டைக்கு என ஒதுக்கிவிட்டதால் வேறு வழியின்றி முதல் நாளிலேயே எல்லாவற்றையும் திணிக்கும்படி ஆயிற்று.
இந்த சந்திப்புகளின் மூலம் பழைய நண்பர்களை சந்தித்து மாணவர் பருவ நிகழ்வுகளை அசை போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க சொற்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தொடர்ந்து வாசித்து வருகிறேன். கலைக்கூடத்தை உங்களுடன் சுற்றிப் பார்த்த நிறைவு ஏற்பட்டது. சரசுவதி மகால் நூலக அனுபவத்திற்குக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! சரஸ்வதி மகால் நூலகத்தை சுற்றிப்பார்க்க அதிக நேரம் இல்லாததால் வெறுமனே சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம். அதுபற்றி எழுதும்போது சொல்வேன்.
நீக்குதங்களுடன் கலைக் கூடத்தை
பதிலளிநீக்குநேரடியாகப் பார்த்த அனுபவம்
படிக்கக் கிடைத்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி திரு ரமணி.S அவர்களே!
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் எழுத்துத் தங்களோடு எங்களையும் கூட்டிச் செல்கிறது.
தில்லை நடராஜரின் திருப்படிமம் குறித்து, எழுதும் எண்ணம் இருக்கிறது. என்று இயலுமோ தெரியவில்லை.
தங்களின் பழைய பதிவுகளைப் பின்னோக்கிப் படிக்க வேண்டும்.
சற்று அவகாசம் கொடுங்கள்.
தொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விஜூ ஜோசப் அவர்களே! தில்லை நடராஜரின் திருபடிமம் பற்றி அவசியம் தாங்கள் எழுதவேண்டும். படிக்க காத்திருக்கிறேன்.
நீக்குநேரம் இருக்கும்போது எனது பழைய பதிவுகளைப் படித்து கருத்திட வேண்டுகிறேன்.
சிலசமயம் கேமராவை சில இடங்களுக்கு கேமராவை எடுத்துச் செல்வது சிரமமாகத்தான் இருக்கிறது. அதுபோன்ற இடங்களுக்கு செல்போன் கேமராதான் உதவுகிறது. சிறப்பான கேமரா உள்ளடக்கிய செல்போன் நல்லது என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்கு( விட்டுப்போன பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் 0
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்கு"தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்சியப்பன் முத்துகிருஷ்ணன் கோவிந்தசாமி ஆகியோரும், பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது நாங்கள் செய்த தவறுகளை, குறும்புகளை சொல்லி ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்து மகிழ்ந்து அந்த காலத்திற்கே சென்றுவிட்டோம்." இந்த மாதிரி சந்திப்புகளை ஏற்பாடு செய்வதே அதற்குத் தானே. சுற்றிப்பார்ப்பதை நம் குடும்பத்துடன் சாவகாசமாக பிறகு பார்த்துக்கொள்ளலாம். நண்பர்கள் எல்லாரும் ஒன்றாய்க்கூடி பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசி மகிழ்வதற்கு ஈடு இணை எதுவுமில்லை. சுவையான பொன்விழா சந்திப்பு தான்!
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே!
நீக்குகாணொளியையும் பார்த்து ரசித்தேன். பழைய தலைமுடி அல்ங்காரம் என்னை மிகவும் கவர்ந்தது. ஊமைக்கனவுகள் சகோதரர் எழுதப்போகும் நடராஜர் சிலை திருப்படிமம் பற்றியறிய நானும் ஆவலாக உள்ளேன். நன்றி சார்!
பதிலளிநீக்குமீள் வருகைக்கும், காணொளியை இரசித்தமைக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! திரு ஜோசப் விஜூ அவர்கள் எழுத இருக்கும் தில்லை நடராஜரின் திருபடிமம் பற்றிய பதிவுக்கு நானும் காத்திருக்கிறேன்.
நீக்கு