வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்துஉழுதொழில் செய்து உலகத்தை உய்விக்கும

உழவர் பெருமக்களை உள்ளன்புடன் வாழ்த்தி

ஓமிக்ரான் தொற்றும் கொரானா நுணங்கியும்

முன்வரும் நாட்களில் முற்றும் ஒழியவும்

துன்பங்கள் யாவும் தொலைந்து போகவும்

இனிவரும் காலம் இனிதாய் இருக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்

 

 

அன்பன்

வே.நடனசபாபதிவலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!