அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !



2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.‘அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன்.’ என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், ‘அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன்.’ என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

புதன், 16 ஜூலை, 2014

iPad பயன்படுத்தினால் ஒவ்வாமை (Allergy) வருமா?



இன்றைக்கு iPad இல்லாதவர்களைக் காண்பது அரிது. இதுவரை 
மடிக்கணினி மூலம்  மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்த பலர், 
இப்போது iPad மூலம் தான் அனுப்புகிறார்கள். ஏன் பலர் வலைப்பதிவில் 
எழுதுவதும் இதன் மூலம் தான். கர்ணனும் கவச குண்டலங்களும் 
போல் எப்போதும் iPad உடன் இருப்பவர்களும் உண்டு.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

முதுமை வந்தால் மூளை மந்தமாகுமா?








வயதானவர்கள் மெதுவாக செயல் படுவதன் காரணம் அவர்கள் முதுமை அடைந்ததால் மூளை மழுங்கியுள்ளது என்றும் அதனால் அவர்களால் இளைஞர்கள் போல் விரைவாக ஒன்றை புரிந்துகொள்ள இயலாது என்றும் நம்மில் பலர் ஏன் எல்லோருமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம்.


செவ்வாய், 25 டிசம்பர், 2012

தோற்றத்தை வைத்து ஒருவரை எள்ளி நகையாடலாமா?



நம்மில் சிலர் ஒல்லியாய் இருப்பவர்களைப் பார்த்து, 
‘கொத்தவரைக்காய்’ உடம்பு என்று கேலியாக சொல்வதுண்டு. 
ஆனால் கொத்தவரைக்காயின் (கொத்தவரங்காயின்) அருமை 
பெருமை பற்றி தெரிந்தால் நாம் அவ்வாறு சொல்லமாட்டோம்.





Fabaceae  என்ற தாவர குடும்பத்தைச்சேர்ந்த Cyamopsis tetragonoloba என்ற 
தாவரப் பெயர் (Botanical Name) கொண்ட கொத்தவரைக்காய், ஒரு பயறுவகை (Legume) தாவரம். இதை இந்தியில் பசுவிற்கான 
தீவனம் என்ற பொருளில் குவார் (Guar) என்பார்கள்.

இந்தியாவில் இது வளர்வதற்கான தட்பவெட்ப நிலை 
காரணமாக இது அதிகமாக இராஜஸ்தான் மாநிலத்தில் 
பயிரிடப்படுகிறது என்பதும் உலகில் பயிரிடப்படும் 
கொத்தவரைக்காய் பயிர்களில் 80 சதம் 
இராஜஸ்தானில் பயிரிடப்படுகின்றன என்பது 
வியப்பூட்டும் செய்தி. 
 
கொத்தவரைக்காயைப் பற்றி நாம் 
வேண்டுமானால் சாதாரணமாக   
நினைக்கலாம். காரணம் நம்மைப் 
பொறுத்தவரையில் கொத்தவரைக்காய் 
என்பது சாம்பாருக்கு உபயோகிப்பதற்கும், 
உசிலி செய்வதற்கும், பொரியல் 
செய்வதற்கும், வத்தல் போடுவதற்கும் தான் 
இலாயக்கான காய்கறி வகை என நினைத்துக் 
கொண்டு இருப்பதால்.


ஆரம்பத்தில் இராஜஸ்தானில் இதை கால்நடைகளுக்கு 
தீவனமாகத்தான் உபயோகித்து வந்தனர். பின்னால் இதற்கு 
ஏற்பட்ட கிராக்கி காரணமாக இதனுடைய மதிப்பு எங்கோ 
போய்விட்டது.  

இன்றைய நிலையில் இராஜஸ்தானில் உள்ள வேளாண் 
பெருங்குடி மக்களுக்கு இது வாழ்வை உயர்த்த வந்துள்ள 
பணப்பயிர் (Cash Crop) என்று சொல்லலாம்.




கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm  எனப்படுகிற
முளைசூழ்தசையில் கிடைக்கும் பிசின் (Gum) ஐஸ் கிரீம்
செய்வதற்கும், தக்காளிசுவைச்சாறுக்கு (Ketchup) 
பிசுபிசுப்பை (Gloopiness) கொடுப்பதற்கும் பாலாடைக்கட்டியை 
(Cheese) நிலைப்படுத்தவும், இறைச்சியையும் பதப்படுத்தவும்,
காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும்  பற்பசை தயாரிக்கவும், உபயோகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறதாம்.

                                                     கொத்தவரைக்காய் பிசின்




சமீபகாலமாக இதன் பிசின் Shale எனப்படும் நிலத்தடியில் 
உள்ள மென் களிக்கல்லிலிருந்து எண்ணையையும் 
எரி வாயுவையும் Fracking என்கிற Hydraulic fracturing மூலம் 
எடுக்க உதவுகிறது என்பது மற்றொரு செய்தி. 

களிக்கல்லிலிருந்து, எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க துரப்பணம் இடும்போது இந்த பிசின்களை 
உபயோகிப்பதால் கருவிகளின் பாகுநிலை (Viscosity)யை 
அதிகரிப்பதால்,அவைகள் களிகல்லை விரிவாக்கி 
அதிலிருந்து அதிக  எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க உதவுகிறதாம். மேலும் உராய்வை தடுக்க 
உதவுவதால் எரிபொருள் மிச்சமாகிறதாம்’   

இதன் காரணமாக பல கோடி அமெரிக்க டாலர்களை 
ஈட்டி தரும் Shale Energy நிறுவனங்கள் இராஜஸ்தானில் 
பயிராகும் கொத்தவரைக்காய்களின் விதைகளுக்கு 
அதிக விலை கொடுத்து (அதாவது ஒரு கிலோ 
விதைக்கு 5.5 அமெரிக்க டாலர்கள் கொடுத்தவர்கள் 
தற்போது 25 அமெரிக்க டாலர்கள் கொடுத்து) வாங்கி 
செல்கின்றன. 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 33,800 மெட்ரிக் டன் கொத்தவரைக்காய் பிசின்களை அவைகள் இந்தியாவில் வாங்கியிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு அந்த 
நிறுவனங்களுக்கு தேவையான பிசின்கள் மட்டும் 
3 இலட்சம் டன்களாம். 

இந்த பயிருக்கு ஏற்பட்டுள்ள இந்த மவுசு காரணமாக 
இராஜஸ்தான் மாநில விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் 
உயர்ந்துவிட்டது என்பதும் அவர்களில் சிலர் தங்கம் 
வாங்க வெளி நாடு சென்று வரும் அளவிற்கு பணம் 
ஈட்டியிருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படுத்தும் 
செய்திகள். அதனால்தான் அவர்கள் கொத்தவரைக்காய் 
பயிரை ‘கருப்புத் தங்கம்’ என்று செல்லமாக 
அழைக்கிறார்கள். 

விவசாயிகள் கொத்தவரைக்காய் விதைகளின் விலை 
ஏற்றத்தை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் 
அதை வாங்கும் நிறுவனங்கள் இவைகளுக்கு பதில் 
மாற்றாக வேறு ஒன்றை தேடும் ஆராய்ச்சியில் 
உள்ளனராம். எது எப்படியோ அப்படியே விலை 
குறைந்தாலும் அதுவும் விவசாயிகளுக்கு வழக்கமாக 
கிடைக்கும் வருவாயை விட அதிகமாகத்தான் இருக்கும்.

எனவே இனி ஒல்லியானவர்களைப் பார்த்தால் 
‘கொத்தவரைக்காய்’ போல் இருக்கிறார்கள் என 
சொல்லாதீர்கள். ஏனெனில் ‘எந்த புற்றில் எந்த 
பாம்பு இருக்குமோ?’

பி.கு உருவத்தை வைத்து ஒருவரை எடை போடுவது 
பற்றி  எனக்குப் பிடித்த பாடல்கள் 5 என்ற பதிவில் 
ஏற்கனவே வேறொரு பொருளில் எழுதியிருக்கிறேன்.   

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நாள் நல் வாழ்த்துக்கள்!



படங்கள் தந்த கூகிளார்க்கு நன்றி.