புதன், 23 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14


எங்களில் ஒரு மாணவரை துப்பாக்கி சூட்டில் இழந்துவிட்டு செய்வதறியாது திகைத்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தபோது, ‘மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க எல்லோரும் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தின் முன் கூடி முடிவெடுப்போம் வாருங்கள்.’ என்று கூறிவிட்டு சென்ற மாணவரை தொடர்ந்து, நாங்கள் எல்லோரும் சோகத்தோடும், கோபத்தோடும் ஓட்டமும் நடையுமாக திரும்பவும் வந்த வழியே சென்று நூலக கட்டிடத்தின் முன் கூடினோம்.

புதன், 9 டிசம்பர், 2015

சென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.

சென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, தங்க இடம் இடம் இன்றி, மழையில் மொட்டை மாடியிலும் இன்ன பிற இடங்களிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா முழுதும் உள்ள நல்ல உள்ளங்கள் சாதி இனம் மொழி கடந்து உதவ முன் வந்திருக்கும்போது, இந்தி வெறியர் ஒருவர் எந்த அளவுக்கு இனவெறியோடு இந்த அழிவை விரும்புகிறார் என்பதை கீழே தந்துள்ளேன்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13


எங்களது பல்கலைக்கழக வரலாற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், முகம் தெரியா நண்பர்கள் வெளியிட்ட துண்டறிக்கையை படித்துவிட்டு 27-01-1965 நாளன்று கூடிய கூட்டம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளாமல் தாங்களே முடிவெடுத்து தன்னிச்சையாக அந்த கண்டனப் போராட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதால் அதை ஒரு மௌனப் புரட்சி என்றே சொல்வேன்.

புதன், 25 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.12



1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் நடக்க இருக்கும் கண்டனப் போராட்டம் போல் எங்கள் பல்கலைக் கழக மாணவர்களும் நடத்தபோகிறாமோ இல்லையா என்று தெரியாமல் அன்றிரவு உறங்க சென்றோம்.

வியாழன், 12 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11

எங்களது விடுதியில் நாள் தோறும் காலையும் மாலையும் திருச்சி வானொலியின் மாநிலச் செய்திகளை பொது ஒலிபெருக்கி மூலம் கேட்க வசதி செய்திருப்பார்கள். தமிழகம் முழுதும் மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு போராட்டம் பற்றி செய்தி நிச்சயம் மாநிலச் செய்திகளில் இருக்கும் என்பதால், அன்று மாலை அதாவது 1965 ஆண்டு 25 ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு எல்லோரும் ஆவலுடன் அந்த செய்திக்காக காத்திருந்தோம்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.10

1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகியாக நாங்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டக் குரல் முழங்கி அமைதியான முறையில் ஊர்வலத்தை சிதம்பரத்தில் நடத்திவிட்டு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் கூடினோம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.9


1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26 ஆம் நாளன்று, தென்னக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை முதன்மை அலுவலக மொழியாக கொண்டு வர, மய்ய அரசு முயற்சியைத் தொடங்கியவுடன் தி.மு.க முதலில் சனவரி 26 ஆம் நாளை துக்க நாளாக கொண்டாட இருப்பதாக அறிவித்து பின்னர் அதை சனவரி 25 ஆம் நாளுக்கு மாற்றிக்கொண்டது..

புதன், 14 அக்டோபர், 2015

சென்னை பித்தனின் ‘சாக்லேட் பெண்கள்’ கதைக்கான முடிவு.


அடையார் அஜீத் என்று வலையுலகில் அறியப்பட்டவரும், சமீபத்தில் ‘தமிழ் இந்து’ நாளிதழால் ‘பதிவர்களில் கபாலி’ என்று பட்டம் சூட்டப்பட்டவரும், பிரபல வலைப்பதிவருமான சென்னை பித்தன் அவர்கள் அவரது ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற வலைப்பதிவில் ஒரு சிறுகதை தொடரை எழுதியிருந்தார்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8


அரசியல் அமைப்பின் பகுதி XVII இல் குறிப்பிட்டுள்ளபடி இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாள் (1965 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள் ) நெருங்கிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி போராட்ட சூழலும் உருவாகிவிட்டது. .

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.7



1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் அண்ணா அவர்கள், தான் முன்பே எச்சரித்திருந்தபடி நடத்திய போராட்டத்தின் போது, ‘இந்தியாவின் ஒரு பகுதியில் தாய்மொழியாக உள்ள இந்தியை நாடு முழுவதற்கும் அலுவலக மொழியாக ஆக்குவது கொடுங்கோன்மை செயல் ஆகும் (Tyranny) என்றும் அந்த செயல் இந்தி பேசும் பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையும், மேம்பட்ட நிலையையும் கொடுக்கும் என்றும், இந்தி அலுவலக மொழியாக ஆகுமானால் நம்மை இந்தி மொழி பேசுவோர் ஆளவும், நாம் கீழ்நிலை குடிமகன்களாகவும் (Third rated citizens) நடத்தப்படுவோம். ‘என்று முழங்கினார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.6


இந்தி மொழியை திணிப்பதற்கு பெருகி வரும் எதிர்ப்பை கண்ட பிரதமர் திரு ஜவஹர் லால் நேரு அவர்கள் இந்தி மொழி பேசாதவர்களின் கவலையை போக்க உறுதிமொழி ஒன்றை கொடுத்தார் .

புதன், 9 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5


ஆங்கிலத்தை இந்தியுடன் அலுவலக மொழியாக தேர்ந்தெடுத்தை இந்தி ஆதரவாளர்கள் விரும்பாததால் அந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ஜனசங்க கட்சியின் நிறுவனரான திரு ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அது ஏற்கப்படவில்லை.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.4

விடுதலை பெற்று அமைய இருக்கின்ற இந்திய குடியரசுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று வட இந்திய உறுப்பினர்களும், ஆங்கிலம் இருக்கவேண்டும் என்று தென்னிந்திய உறுப்பினர்களும் கருத்தை முன் வைத்ததால் எந்த மொழியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்வது என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.3


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு மய்ய மற்றும் மாநில அரசுகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அப்போது மய்ய அரசு இந்தியை இந்தி பேசாத மக்களின் மீது திணிக்க எல்லா முயற்சியையும் மேற்கொண்டது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2



இந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1


இந்த தலைப்பில் பதிவிட பல நாட்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். அதற்குள் வேறு தலைப்புகளில் தகவல்களை எழுத ஆரம்பித்துவிட்டபடியால் இதைப்பற்றி எழுதுவதை தள்ளிபோட்டுக் கொண்டிருந்தேன்.

திங்கள், 20 ஜூலை, 2015

இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?



‘கிடப்பதெல்லாம் கிடக்க கிழவனை தூக்கி மணையில் வை’ என சொல்வதுபோல் நாட்டில் தீர்க்கவேண்டிய சிக்கல்கள் எத்தனையோ இருக்க, இப்போது இந்த கேள்வி முக்கியமா என நினைப்போருக்கு தினத் தந்தி நாளிதழில் வந்த ஒரு செய்தி தான் என்னை இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

பெருமை முயற்சி தரும்!



நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் 08-07-2015 அன்று அவரது வலைத்தளத்தில் தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 32



சென்ற பதிவின் முடிவில் ‘தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாமாம்’ என்பதை ஒரு நாளிதழில் படித்ததாக ‘என்று எழுதியிருந்தேன். பதிவைப்படித்த நண்பர்கள் பலர் அது என்ன மூன்று வகை? என அறிந்துகொள்ள விரும்புவதாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 31




தேக்குமர திட்டத்தில் சேராமல் தப்பித்த நான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு திட்டத்தை சந்தைப்படுத்தும் முகவரை அண்டை மாநிலத்தில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அப்போது நான் மாற்றல் ஆகி கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊரில் எங்கள் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

செவ்வாய், 16 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 30



வரமாட்டார் என நினைத்திருந்த அந்த முகவர் சரியாக மாலை 5 மணிக்கு திரும்பவும் வந்தார்! வந்தவர் விடாக்கண்டர் போலும் என எண்ணிக்கொண்டு அவரை உட்கார சொன்னேன். பிறகு ‘சொல்லுங்கள் காலையில் நீங்கள் சொல்ல நினைத்த திட்டம் பற்றி.’ என்றேன்.

வெள்ளி, 5 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 29


முன்பெல்லாம் பொது மக்கள் இரண்டு பேரைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஒருவர் வங்கி மேலாளர். மற்றவர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு முன் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற கடும்போட்டி இருக்கும். அதனால் வங்கி மேலாளர்கள் யாரை எங்கு கண்டாலும் ‘நீங்கள் ஏன் எங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கக் கூடாது?’ என நச்சரிப்பார்கள்.

வெள்ளி, 15 மே, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 28


மோசடி நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை வெகு எளிதாக சுருட்ட முடிவதன் காரணம் மக்களின் நினைவாற்றல் குறைவும், குறைந்த நாட்களில் அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் தான் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஞாயிறு, 10 மே, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 27





இந்த தொடர் பதிவின் 22 ஆம் பதிவில் பொன்ஃஜி திட்டம் பற்றி சொல்லும்போது அதுபோன்ற இன்னொரு திட்டமான கூம்பக (Pyramid) திட்டம் பற்றி பின்னர் பார்க்கலாம் என சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

புதன், 22 ஏப்ரல், 2015

கசக்கும் உண்மை!



வெண்பாவும் நானும் என்ற தலைப்பில் பிப்ரவரி 15 ஆம் நாளன்று எழுதிய பதிவில் இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலி வெண்பா ஆகியவைகளை எழுதிப் பார்க்கப் போவதாக எழுதியிருந்தேன்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

கடவுளின் நாடும் கடையடைப்பும்!


வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவரின் மகளின் திருமணம் ஏப்ரல் 8 ஆம் நாள் (அதாவது நேற்று முன் தினம் ) கோழிக்கோட்டில் நடக்க இருந்ததால் அங்கு செல்லவேண்டியிருந்தது. நண்பர் முன்பே திருமண நாளை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், இரயிலில் போகவும் திரும்பி வரவும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன்.

திங்கள், 30 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 26




நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.

புதன், 11 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 25




பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.

சனி, 28 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 24



மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றுபவர்கள் செய்வது சரியென்பது போலவும், தவறு பொது மக்களிடம் தான் இருக்கிறது என்பதுபோலவும் சென்ற பதிவில் நான் எழுதியிருப்பதாக சிலர் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெண்பாவும் நானும்



இந்த ஆண்டு பொங்கலன்று எனது பொங்கல் வாழ்த்தை வெண்பா வடிவில் வெளியிடவேண்டுமென்று என்று எண்ணினேன். ஆனாலும் பள்ளி இறுதி ஆண்டில் கற்ற (?) வெண்பா எழுதும் இலக்கணம் மறந்து போனதால் யாராவது வெண்பா எழுதுவது பற்றி பதிவில் எழுதி உதவமாட்டார்களா என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23



சென்ற பதிவில் ‘பிரமிட் திட்டம்’ என்றால் என்று அறியுமுன் சில திட்டங்கள் எப்படி பொன்ஃஜி திட்டங்கள் ஆயின என்பதை சொல்வதாக எழுதியிருந்தேன். உண்மையில் சிலர் (இங்கே நான் மிகச் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன்) தங்களது நிறுவனம் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அந்த திட்டத்தை ஆரம்பிப்பதில்லை.

புதன், 28 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 22



இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் 1920 களில், வெளி நாட்டில் International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்து மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகைகளை பெற்றார் என்றும் என்றும் ஆனால் அவர் திட்டத்தின்படி பணத்தை திருப்பித்தரவில்லை என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கல் வாழ்த்து!











பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளால்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
அனைவர் மனதிலும் அன்பு பெருகிட
அடியேனின் அன்பான வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சனி, 10 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21

மக்கள் தங்களது பணத்தை கட்டி ஏமாந்த சில திட்டங்கள்... ஏன் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Ponzi Scheme என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 20



ஏமாற்றுபவர்களில் பல வகையினர் உண்டு  என்பதை 
முந்தைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன். ஒரு சிலர் தனியே 
வந்து நேருக்கு நேர் (One to one) சாதுர்யமாகப் பேசி, பணம் பறிப்பவர்கள்.அப்படி பேசுகிறவர்களின் பேச்சில் மயங்கியோ 
அல்லது அவர்கள் நடிப்பை நிஜம் என்று நம்பி இரக்கப்பட்டோ 
நம்மில் சிலர் பணத்தை இழப்பதுண்டு.