புதன், 28 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 22இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் 1920 களில், வெளி நாட்டில் International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்து மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகைகளை பெற்றார் என்றும் என்றும் ஆனால் அவர் திட்டத்தின்படி பணத்தை திருப்பித்தரவில்லை என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.அந்த திட்டப்படி ஏன் அவரால் பணம் தரமுடியவில்லை என பார்ப்பதற்கு முன் International Reply Coupon என்றால் என்பதை பார்ப்போம். Universal Postal Union வெளியிடும் பன்னாட்டு பற்றுரிமை சீட்டை (International Reply Coupon) UPU வில் உறுப்பினராக உள்ள நாடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட (பதிவுசெய்யப்படாத முன்னுரிமையுள்ள) விமான அஞ்சல் தலைகளாக மாற்றிக்கொள்ளலாம்.

இது நமது அஞ்சல் துறையில் உள்ள Reply Card போன்றது. நாம் யாருக்காவது கடிதம் எழுதி அவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்தால் அவர்கள் பதில் எழுதலாம் அல்லது எழுதாமல் போகலாம். அவர்களிடமிருந்து பதிலை பெறுவதற்காக அந்த அஞ்சல் அட்டைக்குமான செலவை நாமே கட்டி பெறுவதுதான் Reply card என்பது.

அஞ்சல் அட்டை இரண்டு பகுதியாக இருக்கும். Reply card பகுதியில் உள்ள பெறுபவரின் முகவரியில் நமது முகவரியை எழுதி, நாம் எழுதவேண்டியதை அதோடு இணைத்துள்ள அட்டையில் எழுதி அனுப்பினால் அதை பெறுபவர் Reply card பகுதியை கிழித்து பதில் எழுதி அனுப்பலாம். அதை பெறுபவர் அதை அனுப்ப செலவு செய்யவேண்டியதில்லை. மேலும் முகவரியை எழுதும் சிரமமும் இருக்காது. பெரும்பாலும் இதை வணிகம் செய்வோர் உபயோகிப்பார்கள்.

இப்போதெல்லாம் யார் அஞ்சலட்டை உபயோகிக்கிறார்கள்? அதற்கு பதில் Business Reply Mail என்ற அஞ்சல் உறைகளை அனுப்புகிறார்கள். அதை உபயோகிப்போர் அஞ்சல் தலை ஒட்டவேண்டியதில்லை. பெறுபவர் அதற்கான தொகையை கட்டிவிடுவார்.

ஆனால் இது ஒரு நாட்டுக்குள் அனுப்பும் உள்ளூர் அஞ்சலுக்கு மட்டுமே பொருந்தும். வெளி நாடுகளுக்கு அனுப்பும்போது அவைகளை உபயோகப்படுத்தமுடியாது என்பதால் இந்த பன்னாட்டு பற்றுரிமை சீட்டை (International Reply Coupon) வாங்கி அனுப்பினால் அதைப் பெறுபவர் அவர்கள் நாட்டில் அதைக் கொடுத்து அந்த நாட்டின் விமான அஞ்சல் (Air Mail) தலைகளை பெற்று பதில் எழுதும்போது அவைகளை ஒட்டி அனுப்பலாம்.

இவ்வாறு பல நாடுகளுக்கிடையே உள்ள வணிகத்திற்கான இந்த வசதி பொன்ஃஜிக்கு பணம் பண்ண வசதியாகிவிட்டது. அவர் இதை அறிந்துகொண்டதே ஒரு எதிர்பாராத நிகழ்வால்தான். கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பியவுடன் அவருக்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு அஞ்சலோடு இணைத்திருந்த International Reply Coupon அவரது கவனத்தை ஈர்த்தது.


International Reply Coupon (நன்றி கூகிளாருக்கு)


அதை அவர் முதல் தடைவையாக பார்த்ததால் அதன் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டு தீவிரமாக விசாரித்ததில் அந்த முறைமையில் (System) உள்ள குறைபாடுகளை தெரிந்துகொண்டார்.

வெவ்வேறு நாடுகளில் உள்ள அஞ்சலுக்கான கட்டண விகிதத்தில் உள்ள மாறுபாடிகளினால் ஒரு நாட்டில் இந்த பன்னாட்டு பற்றுரிமை சீட்டை (International Reply Coupon) குறைந்த விலைக்கு வாங்கி மற்றொரு நாட்டில் அவைகளை அதிக மதிப்புள்ள அஞ்சல் தலைகளாக மாற்றிக்கொள்வதின் மூலம் இலாபம் அடையலாம் என்பதை அறிந்துகொண்டார் நமது Charles Ponzi.

உடனே நண்பர்களிடம் பணத்தை கடன் வாங்கி இத்தாலியில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி அங்கிருந்து International Reply Coupon ஐ வாங்கி அனுப்ப சொல்லி அதை அஞ்சல் தலைகளாக மாற்றி விற்பனை செய்தார்.

Boston இல் உள்ள நண்பர்களிடம் இந்த திட்டம் பற்றி விளக்கி 90 நாட்களில் அவர்களது முதலீடு இரட்டிப்பாகும் என சொல்லி அவர்களை அவரிடம் முதலீடு செய்ய வைத்தார். அதுபோலவே அவரை நம்பி 750 டாலர்கள் முதலீடு செய்த சிலருக்கு 1250 டாலர்கள் கொடுத்து அனைவரின் நம்பிக்கையையும் பெற்றார்.

குறுகிய காலத்திலேயே இந்த திட்டத்தை அமல் படுத்த Securities Exchange Company என்ற பெயரில் ஒரு சொந்த நிறுவனத்தையும் நிறுவினார். வாய்மொழிமூலம் இவரது ‘புகழ்’ பரவ மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இவரது திட்டத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர்.

பொன்ஃஜியும் அநேக முகவர்களை நியமித்து அவர்களுக்கு தாராளமாக தரகு கட்டணம் (Commission) கொடுத்து தனது வணிகத்தை பன்மடங்கு பெருக்கினார். மக்களும் வெறி கொண்டவர்கள் போல் தங்களது வீடுகளை அடமானம் வைத்து தங்களை ஆயுட்கால சேமிப்புகளை முதலீடு செய்தனர். அவர் பேரில் அபரித நம்பிக்கை வந்ததால் முதலீடு செய்தோர், தங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த இலாபத்தை கூட திரும்பவும் அந்த திட்டத்திலேயே முதலீடு செய்தனர்.

ஆனால் அவரோ சட்டப்படியான முறையில் இலாபம் ஈட்டும் முயற்சியில் இறங்காமல். கிடைத்த பணத்தை Boston இல் இருந்த Hanover Trust Bank இல் வைத்தார். அவருடைய நோக்கம் தான் வைப்பாக (Deposit) வைத்த பணம் பெருகியதும் அந்த வங்கியை கைப்பற்றுவதுதான். அவரிடம் எல்லோரிடமிருந்தும் பணம் வர தொடங்கியதும் முதலீடு செய்தவர்களுக்கு புதிதாய் சேர்ந்தவர்களின் பணத்தைக் கொடுத்து சமாளித்தார்.

பொன்ஃஜி மிகப் பெரிய மாளிகை போன்றை வீட்டை வாங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்தினார். சிலருக்கு அவர் திடீர் பணக்காரர் ஆனது பற்றி சந்தேகம் இருப்பினும் சில நாளேடுகள் அவரது திட்டம் பற்றி ஐயம் எழுப்பியும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் அவர் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்ததால் அவர் மேல் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது.

ஆனால் அவருக்கு அறைகலன்கள் (Furnitures) கொடுத்த ஒருவர் தனக்கு வரவேண்டிய தொகைக்காக அவர் மேல் வழக்கு தொடர்ந்தபோது அப்போதுதான் மக்களுக்கு சந்தேகம் வந்தது. எந்த ஒரு செயலும் கடைசியில் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இரண்டு ஆண்டுகள் சமாளித்து வந்த ஒரு கட்டத்தில் முடியாமல் காவல் துறையிடம் சரணடைந்தார்.

அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதால் ஏழாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த பின், ஓட்டாண்டியாகி மாரடைப்பு வந்து கண் பார்வை மங்கி, வலது கையும் வலது காலும் முடக்குவாதத்தால் முடக்கப்பட்டு, Rio de Janeiro வில் இருந்த ஒரு அறக்கொடை (Charity) மருத்துவமனையில் 1949 ஆம் ஆண்டு காலமானார்.

அவரிடம் ஒரு டாலர் முதலீடு செய்தவர்களுக்கு 30 சென்ட் தான் கிடைத்தது. அவரால் அப்போது மக்கள் இழந்த தொகை 20 மில்லியன் டாலர்கள். (இன்றைய மதிப்பில் சுமார் 123 கோடி ரூபாய்கள்)

அவர் செய்தது போல் இப்போது தில்லுமுல்லு செய்பவர்களின் திட்டங்களையும் அவரது பெயரால் பொன்ஃஜி திட்டம் என்றே அழைக்கிறார்கள். ஆனால் இன்னொரு திட்டம் இருக்கிறது அதனுடைய பெயர் ‘பிரமிட் திட்டம். அது என்ன என்பதை பின்னர் பார்ப்போம்.

அதற்கு முன் சில திட்டங்கள் எப்படி பொன்ஃஜி திட்டங்கள் ஆயின என்பதை படிக்க காத்திருங்கள்.தொடரும்


(பி.கு: எனது கணினியில் எனது கவனக்குறைவு காரணமாக தீங்கு நிரல் (Malicious software) நுழைந்து தொந்தரவு கொடுத்ததால் பதிவு எழுத தாமதமாகிவிட்டது.)
30 கருத்துகள்:

 1. விளக்கமாக எழுதி அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறீர்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 3. ''..அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதால் ஏழாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த பின், ஓட்டாண்டியாகி மாரடைப்பு வந்து கண் பார்வை மங்கி, வலது கையும் வலது காலும் முடக்குவாதத்தால் முடக்கப்பட்டு, Rio de Janeiro வில் இருந்த ஒரு அறக்கொடை (Charity) மருத்துவமனையில் 1949 ஆம் ஆண்டு காலமானார். ..'''
  ஆர்வம் தூண்டும் நல்ல தகவல்.. ஏமாற்றுவதிலும் எத்தனை விதம்...
  தொடருவேன்.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி. வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா.
  அறிய முடியாத விடயங்களை அறிந்தேன் தங்களின் பதிவுவழி.. பகிர்வுக்கு நன்றி.த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ் மண வாக்குக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 5. // எந்த ஒரு செயலும் கடைசியில் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.//

  நம்மூர்லயும் இப்படியெல்லாம் நடந்தால் சந்தோஷமாக இருக்கும். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நம்மூரிலும் இது போல் நடக்கும் என நம்புவோம்.

   நீக்கு
 6. புதிய செய்தியை அறிந்தோம். பிரமிட் திட்டம் பற்றி அறியக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 7. எந்த ஒரு செயலும் நல்லதொரு முடிவுக்கு வந்தே தான் ஆக வேண்டும்...

  பிரமிட் இதைவிட பெரிய தில்லுமுல்லு...? ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 8. எளிதில் விளங்காத விஷயங்கள். ஓரிரு முறை படித்தால் சற்று விளங்குகிறது. இந்த ஏமாற்று வேலை வேறு விதப்பெயர்களில் தொடர்கிறதா. ?உ-ம் சாரதா ஸ்காம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! ஏமாற்றும் வேலை எந்த பெயரில் இருந்தாலும் ஏமாறாமல் இருப்பது நல்லது அல்லவா? நீங்கள் சொன்ன எடுத்துக் காட்டும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

   நீக்கு
 9. பொன்ஃஜி திட்டங்கள் பற்றி நான் கேள்விப் பட்டதில்லை. மேலும் அறிய ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 10. பழய தமிழ் சினிமாக்களில் கடைசிக்காட்சியில் வில்லன் எம்.ஆர் ராதா கைகளில் விலங்கோடு நடந்து போக , படம் முடியுமே அதே மாதிரி இருக்கிறதே கதை ! நமது "மாண்புமிகு" ஊழல் ம்ந்திரிகள கதையும் இப்படி முடிந்தால் ...?

  மாலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு மாலி அவர்களே! நீங்கள் நினைப்பது நடக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என எண்ணுகிறேன்.

   நீக்கு
 11. இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொண்டேன்.
  இன்னும் வாசிக்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

   நீக்கு
 12. அறியாத பல நல்ல விடயங்கள் அறியத்தன்தமைக்கு நன்றி நண்பரே....
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு

 13. தில்லுமுல்லு செய்பவர்களின் திட்டங்களை
  (பொன்ஃஜி திட்டம்) பற்றி அறிந்தேன்.
  ‘பிரமிட் திட்டம் குறித்த பதிவினை
  காண்பதற்கு மிக்க ஆவல் கொண்டேன்.

  நல்ல பயனுள்ளத் தகவல்கள் தந்தீர்கள் அய்யா!

  மிக்க நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 14. பாவம் அவர் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை.

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும், தங்களது கேள்விக்கும் நன்றி திரு அன்பே சிவம் அவர்களே! அவர் தேர்தலில் நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கக்கூடும்!

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. நலமே! விசாரிப்புக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு