வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஏன் இந்த இடைவெளி?


ஜூலை 27 ஆம் தேதிக்கு பிறகு என்னால் வலையுலகம் வந்து பதிவிட முடியவில்லை.காரணம் வீட்டை சீரமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது தான்.

சென்ற ஆண்டு சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எனது வீட்டிலும் கார் நிறுத்தும் இடத்தில் தண்ணீரும், சாக்கடை நீரும் புகுந்துவிட்டன. இந்த ஆண்டும் பெருமழை இருக்கும் என்ற வானிலை அறிவிப்பு காரணமாக முன் எச்சரிக்கையாக, கார் நிறுத்தும் இடத்தின் உயரத்தை ஒரு அடி உயரம் உயர்த்தவும், வீட்டின் மேற்புற தளத்தில் புது ஓடுகள் பதிக்கவும் எண்ணி ஒரு ஒப்பந்தகாரரை அணுகினேன். அவரும் இரண்டு பணிகளையும் மூன்று வாரத்தில் முடித்து. தருவதாக சொல்லி பணியைத் தொடங்கினார்.

ஆனால் உள்ளே நுழைந்ததும் ‘சார். வீட்டு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியையும் கையோடு கையாக முடித்துவிடலாம் எனக் கூறி ஆரம்பித்து,இடையிடையே சிற்சில பணிகளையும் (அவருக்கும் வேலை வேண்டுமே) மேற்கொண்டு ஒரு வழியாக 48 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். .இந்த 48 நாட்களும் சீரமைப்பு பணி நடப்பதை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மேற்பார்வை செய்தபடியால் அங்கும் இங்கும் நகரமுடியவில்லை அதனால் பதிவுலகம் வர இயலாததால் பதிவிட இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.

இன்னும் ஓரிரு நாட்களில் பதிவிட ஆரம்பித்துவிடுவேன். பதிவுலக நண்பர்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி!