வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஏன் இந்த இடைவெளி?


ஜூலை 27 ஆம் தேதிக்கு பிறகு என்னால் வலையுலகம் வந்து பதிவிட முடியவில்லை.காரணம் வீட்டை சீரமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது தான்.

சென்ற ஆண்டு சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எனது வீட்டிலும் கார் நிறுத்தும் இடத்தில் தண்ணீரும், சாக்கடை நீரும் புகுந்துவிட்டன. இந்த ஆண்டும் பெருமழை இருக்கும் என்ற வானிலை அறிவிப்பு காரணமாக முன் எச்சரிக்கையாக, கார் நிறுத்தும் இடத்தின் உயரத்தை ஒரு அடி உயரம் உயர்த்தவும், வீட்டின் மேற்புற தளத்தில் புது ஓடுகள் பதிக்கவும் எண்ணி ஒரு ஒப்பந்தகாரரை அணுகினேன். அவரும் இரண்டு பணிகளையும் மூன்று வாரத்தில் முடித்து. தருவதாக சொல்லி பணியைத் தொடங்கினார்.

ஆனால் உள்ளே நுழைந்ததும் ‘சார். வீட்டு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியையும் கையோடு கையாக முடித்துவிடலாம் எனக் கூறி ஆரம்பித்து,இடையிடையே சிற்சில பணிகளையும் (அவருக்கும் வேலை வேண்டுமே) மேற்கொண்டு ஒரு வழியாக 48 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். .இந்த 48 நாட்களும் சீரமைப்பு பணி நடப்பதை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மேற்பார்வை செய்தபடியால் அங்கும் இங்கும் நகரமுடியவில்லை அதனால் பதிவுலகம் வர இயலாததால் பதிவிட இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.

இன்னும் ஓரிரு நாட்களில் பதிவிட ஆரம்பித்துவிடுவேன். பதிவுலக நண்பர்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி!



22 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்! வழக்கம் போல சுவையான பதிவுகளுடன், உங்கள் எழுத்துப் பணியைத் தொடரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  2. sir, in a coincidence, i was only yesterday wondering what happened no posts from you and went through your previous posts from 2010 and found this is the only year in which you have not posted anything for more than a month.

    Have a good stay in renewed house sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ‘நல்மனம்’ வலைப்பதிவர் அவர்களே! தங்கள் தொடர்ந்து எனது பதிவை படிப்பதற்கு நன்றி!

      நீக்கு
  3. வாருங்கள்.. வாருங்கள்.. உங்களுக்காக இங்கும் ஏகப்பட்ட பணிகள் காத்துக் கிடக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வரவேற்புக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! பணிகள் செய்ய காத்திருக்கிறேன்.

      நீக்கு
  4. நாம் சில நேரங்களில் 48 நிமிடங்களிலோ அல்லது 48 மணி நேரங்களிலோ முடிந்துவிடக்கூடும் என எதிர்பார்த்துத் துவங்கும் ஒருசில வேலைகள், இதுபோல 48 நாட்கள் இழுத்துகொண்டே போய்விடும்தான்.

    அதை வெகு அழகாக தங்களின் சொந்த அனுபவத்தில் விவரித்து எழுதியுள்ளீர்கள்.

    எப்படியோ ’வருமுன் காத்தல்’ என்ற அந்த வேலைகளை ஒருவழியாகத் தாங்கள் முடித்தது கேட்க மகிழ்ச்சியே.

    தங்களின் வழக்கமான பதிவுகள் இனி தொடரட்டும்.

    ஆவலுடன் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்கள் போன்றோரின் ஆதரவுடன் பணியைத் தொடர்வேன்.

      நீக்கு
  5. நானும் ஏன் பின்னூட்டங்களில் வருகை இல்லை என்று நினைத்தது உண்டு. வெல்கம் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வரவேற்புக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  6. சார்! நீங்க சென்னையில் தான் இருக்கிங்களா? திருச்சி என்று நினைத்துவிட்டேன்! பொறுமையா வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வரவேற்புக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! நானும் சென்னை வாழ் பதிவாளன் தான்

      நீக்கு
  7. All contractors are the same every where. This year rain forecast is heavy. Glad that you have taken precaution. Looking forward for your articles. Regards.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும்நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

      நீக்கு
  8. தொடர்ந்து எழுதுங்கள்..... இடையே இப்படி சில வேலைகள் இருக்கும்போது இணையத்திலிருந்து விலகி இருக்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! விட்டுப்போன தங்களின் பதிவுகளை படிக்கவேண்டும்.

      நீக்கு
  9. நல்ல காலம் பிறக்குது !நல்ல காலம் பிறக்குது !வலையுலகத்துக்கு
    நல்ல காலம் பிறக்குது ! நீங்களும்,'ஊமைக் கனவுகள்' விஜி அய்யாவும் மீண்டும் கலக்க வருகிறீர்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! வலையுலகத்திற்கு நல்ல காலமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  11. ஐயா இங்கும் இடைவெளியா.....?

    தங்களைப் போன்றோர் தொடர்ந்து இயங்கவேண்டும்.

    வருக ...... காத்திருக்கிறோம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பதிவுலம் வருவதை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டியதாகிவிட்டது. காத்திருப்பதற்கு நன்றி!

      நீக்கு