திங்கள், 16 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 17


மேலும் சில நண்பர்கள் அந்த இடத்தில் வந்து குழுமியதும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் அலுக்காமல் பழைய நிகழ்வுகளை  பகிர்ந்துகொண்டும் சில மணித்துணிகளை செலவிட்டோம்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 16





புல்வெளியை அடைந்தபோது ஏற்கனவே பல நண்பர்கள் குடும்பத்தினருடன் அங்கே குழுமியிருந்தனர். 2016 ஆம் ஆண்டு  தஞ்சையில் நடந்த சந்திப்புக்கு பிறகு சந்திப்பதால், எல்லோரும் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர்  நலம் விசாரித்துக்கொணடும். புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.  

நானும்  அவர்களுடன் சேர்ந்து கொண்டதும், எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி நான் ஏன் என மனைவியை அழைத்து வரவில்லை என்பதுதான். 

சனி, 30 நவம்பர், 2019

தொடரும் சந்திப்பு 15



பெட்டிகளை  எடுத்துக்கொண்டு வரவேற்பு அறை சென்றபோது, அங்கே அந்த ஓய்வக மேலாளர்  திரு செல்வம்  அவர்களுடன்  தஞ்சை நண்பர் R பாலசுப்பிரமணியனும் இருந்தார்.  வரும் நண்பர்களுக்கு அறை ஒதுக்குவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தார். 

நண்பர் பாலுவின் ஆலோசனைப்படி எனது PAN அட்டையின்  நகலை முன்பே திரு செல்வம் அவர்களுக்கு அனுப்பிவிட்டபடியால், எனக்கான  அறை ஒதுக்கப்படிருந்தது.  அறை சாவியையும் WIFI க்கான கடவு சொல்லையும் தந்த திரு செல்வம், ஓய்வ‌க ஊழியர் ஒருவரை எனது அறையை காண்பிக்க அனுப்பினார். 

வரவேற்பு கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ட காட்சிகள் கண்ணுக்கு இனியவைகளாக இருந்தன, வரிசையாய் இருந்த குடில்களும் அழகான நீச்சல் குளமும், அதற்கு அருகே இருந்த பெரிய குளமும் சுற்றி இருந்த தங்கும் விடுதிகளும் தென்னை மரங்களும் என்னை ஏதோ ஒரு புதிய உலகிற்கு அழைத்து சென்றது போல் இருந்தது.











அவைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டே, அந்த ஓய்வக ஊழியரை பின் தொடர்ந்தேன். எனக்காக ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்து காட்டிவிட்டு ஏதேனும் தேவையெனில் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டார். 

உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறையும் அடுத்து படுக்கை அறையும் எல்லா வித  வசதிகளோடும் இருந்தன. இரண்டு அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரண்டு குளியல் அறைகளும் இருந்தன.  








அறைக்கு வெளியே இருந்த குளத்தை அமர்ந்து பார்த்து இரசிக்க ஒரு அமைப்பும் இருந்தது.



அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு சுமார் 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியில் கூடவேண்டும் என நண்பர் பாலு  கேட்டுக் கொண்டதால் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்.

பின்னர் குளித்து உடை மாற்றிக்கொண்டு 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியை அடைந்தேன். 


தொடரும்

வெள்ளி, 22 நவம்பர், 2019

சாமானியனும் சர்க்கரை நோயும்






சர்க்கரை நோய் என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற நீரிழிவு நோய்  (Diabetes) பற்றி நம்மில் பலருக்கு, ஏன் அனேகருக்கு சரியான புரிதல் இல்லை என்றே சொல்லலாம்.

வியாழன், 24 அக்டோபர், 2019

தொடரும் சந்திப்பு 14


ரத்னா ஸ்கொயர் விடுதி நோக்கி நடக்கும்போது, 1970 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 1973 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வரை பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது நடந்த பழைய நிகழ்வுகள் மனதில் அலைமோதின.

திங்கள், 14 அக்டோபர், 2019

‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியிலும் இருந்தால் மட்டும் போதுமா?





ஒரு நிறுவனம் நிலைத்து நிற்க வாடிக்கையாளர்கள் (ஆதரவு) தேவை. வாடிக்கையாளர்கள் இல்லாத நிறுவனம் ஆணிவேர் இல்லாத செடிக்கு ஒப்பாகும். ஏனெனில் ஆணிவேர் இல்லாத செடி நிலைத்து நிற்க முடியாது. அதுபோல் வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாத எந்த நிறுவனமும் நிலைத்து நிற்கமுடியாது.

சனி, 5 அக்டோபர், 2019

தொடரும் சந்திப்பு 13






வீரப்பக்கௌண்டனூரிலிருந்து பொள்ளாச்சிக்கு திரும்பும்போது நண்பர் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டே உந்துருளியை மெதுவாக  ஓட்டிக்கொண்டு சென்றேன். சிறிது தூரம்  சென்றதும் சாலையின் குறுக்கே நீண்ட கயிறு ஒன்று கிடப்பது போல் தெரிந்தது. 

புதன், 25 செப்டம்பர், 2019

தொடரும் சந்திப்பு 12

1971 ஆம் ஆண்டின் இறுதியில் ஜாவா மோட்டார் சைக்கிளை வாங்கி  தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்று, மோட்டார் சைக்கிளை பொள்ளாச்சி நகருக்குள்ளேயே ஓட்டிவந்தேன்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 4




எனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.

சனி, 7 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 3


நமது வாழ்க்கை முறையில், பணியில் இருக்கும்போது இருப்பதற்கும் , பணி நிறைவு பெற்று ஓய்வெடுக்கும்போது இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்றால் பதில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லலாம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 2



ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.


வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது

என்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 1




பணியில் இருப்போர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் ஓய்வு பெறுவதை பணி மூப்பு அடைதல் என்கிறோம். நடுவண் மற்றும் மாநில அரசு பணிகளில் இருப்போரின்  ஓய்வு பெரும் வயது முதலில் 55 ஆக இருந்து, பின்னர் 58 ஆகி தற்போது 60 ஆகிவிட்டது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தொடரும் சந்திப்பு 11



பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், எனது கைத்தொலைபேசி ஒலித்தது. யாரென்று பார்த்தால்  நண்பர் மீனாட்சி சுந்தரம். அவருடன் பேசியபோது  நான் எங்கிருக்கிறேன் என்று விசாரித்தார், பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்துவிட்டதாக சொன்னவுடன், தான் பொள்ளாச்சி வந்துவிட்டதாகவும் அங்கு ‘ரத்னா ஸ்குயர்’ (Rathna Square) என்ற விடுதியில் நண்பர் செல்லப்பாவுடன் இருப்பதாகவும் சொன்னார். 

திங்கள், 29 ஜூலை, 2019

தொடரும் சந்திப்பு 10





மறு நாள் (31-08-18)  காலை வழக்கம் போல் 5.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பொள்ளாச்சி புறப்பட ஆயத்தமானேன். 6 மணிக்கு நண்பர் திரு இந்திரஜித் நான் எழுந்துவிட்டதை அறிந்து தேநீர் அருந்த கூப்பிட்டார். கீழே சென்று தேநீர் அருந்தியதும், சார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பார்த்துவிட்டீர்கள். மேல் தளத்தை (Terrace) பார்க்கவில்லையே. வாருங்கள் பார்க்கலாம் என்று அழைத்து சென்றார்.

திங்கள், 22 ஜூலை, 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 5


எனக்கும் மேடைப்பேச்சை மொழிபெயர்க்கும் அனுபவம் ஏற்பட்டது என்று சொல்லியிருந்தேன். 1988 ஆம் ஆண்டு நான் சேலத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது அந்த மாவட்டதில் இருக்கும் ஒரு சிற்றூரில் கிளை திறக்க எங்களது வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தது.

வியாழன், 20 ஜூன், 2019

தொடரும் சந்திப்பு 9


சரவணம்பட்டியிலிருந்து பட்டீஸ்வரர் கோவில் இருந்த போரூர் 18 கி.மீ தொலைவுதான் என்றாலும் மாலை வேளையில் இருந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக  மாற்றுப்பாதையில்  அழைத்து சென்றார் நண்பர் திரு இந்திரஜித்.

வெள்ளி, 10 மே, 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 4






நூல்களை மொழி பெயர்ப்பதற்கும், மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பதற்கும் அதிக வேறுபாடு உண்டு. நூல்களை மொழிபெயர்ப்போர் ஐயம் இருப்பின் நண்பர்களிடம் கலந்தாலோசித்தோ அல்லது சொற்களஞ்சியத்தை (Dictionary) பார்த்தோ சரியாக மொழிபெயர்க்க முடியும். அதனால் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் பணியை முடிக்கவேண்டிய அழுத்தம் (Pressure) இருக்காது.

திங்கள், 6 மே, 2019

தொடரும் சந்திப்பு 8





கோவை சரவணம்பட்டியில் நண்பர் திரு இந்திரஜித் அவர்களின் புதிதாக  கட்டியுள்ள வீட்டருகே  நடப்பட்டிருந்த மரச்செடிகளையும் பூச்செடிகளையும் சுற்றிப்பார்த்தபோது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 3


கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வேறுபாடு உண்டு என்று  முன்பே சொல்லியிருந்தேன்.

திங்கள், 22 ஏப்ரல், 2019

தொடரும் சந்திப்பு 7


இரயில் கோவை சந்திப்பை அடைந்ததும் இரயில் பெட்டியிலிருந்து இறங்கி வெளியே செல்ல முயன்றபோது கோவை சந்திப்பு நிலையம் முழுதும் மாறியிருந்ததைக் கண்டேன்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 2


முந்தைய பதிவில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த பொருளாதார பாடத்தில், குறிப்பிட்டிருந்த விலைவாசியைக் குறைக்க அரசிடம் விளயாட ஒரு பெரிய உருளை உள்ளது!’ என்ற சொற்றொடரை தந்திருந்தேன்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

தொடரும் சந்திப்பு 6


எங்களது பொள்ளாச்சி சந்திப்பு பற்றிய நண்பர் பாலுவின் விரிவான சுற்றறிக்கை கிடைத்த பிறகு, 30-08-2018 அன்று  பொள்ளாச்சி செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தபோது அந்த நிகழ்வில்  கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை திடீரென ஏற்பட்டது. 

திங்கள், 25 மார்ச், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 1



ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதை மொழி பெயர்ப்பு (Translation) என்கிறோம். அது வேற்று மொழியில் உள்ள நூல்களை இன்னொரு மொழியில் மாற்றம் செய்வதாய் இருக்கலாம் அல்லது வேற்று மொழியில் ஒருவர் மேடையில் பேசும் பேச்சை, அம்மொழி அறியாத மக்களுக்காக அவர்கள் மொழியில் மாற்றம் செய்வதாக கூட இருக்கலாம்.    

செவ்வாய், 12 மார்ச், 2019

தொடரும் சந்திப்பு 5





பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 நடக்க இருந்த ஆறாவது சந்திப்பு பற்றி நண்பர் பாலு 16-06-2018 க்குப் பிறகு 07-08-2018 அன்று இறுதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.  

சனி, 23 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 4




எங்களது ஆறாவது சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 அன்று தொடங்குவதாக இருந்தபோது, நான் 30-008-2018 அன்றே கோவைக்கு பயணப்பட்டதற்கு காரணம் ஒன்று உண்டு. 

சனி, 16 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 3



நண்பர் பாலு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் பொள்ளாச்சியில் எங்களது ஆறாவது சந்திப்பு நடைபெறும் Great Mount ‘COCO LAGOON’ இல் (ஓய்வகத்தில்) ஆயுர்வேத சிகிச்சை மய்யம் உண்டென்றும் அதை பயன்படுத்துவோர் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதுபோல அங்குள்ள நீச்சல் குளத்தில் நீந்த விரும்புவோர் அதற்கான கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 2







எங்களது அடுத்த சந்திப்பு பொள்ளாச்சியில்  என்று கேள்விப்பட்டதுமே எனது மனம் கால இயந்திரத்தில் ஏறி 47 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு. ஏப்ரல் திங்கள். மணிப்பாலில் இருந்த எங்களது வங்கியின் தலைமையத்தில் இருந்த அலுவலர்கள் பயிற்சிக் கல்லூரியில் 45 நாட்கள் பயிற்சி முடிந்த பின்  மேற்கொண்டு எந்த கிளைக்கு கள பயிற்சிக்கு செல்லவேண்டுமோ என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, பொள்ளாச்சியில் உள்ள எங்கள் கிளையில் செய்முறை பயிற்சி பெற எனக்கு ஆணை தரப்பட்டது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 1



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் 
படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!



பொங்கல் வாழ்த்து


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் இயற்கையின் சீற்றத்தால்
இல்லாமல்  போனாலும் நல்லதே நாளை
நடக்குமென நம்பிக்கை கொண்டதனை எதிர்நோக்கும் 
தஞ்சைப் படுகை தரணிவாழ் மக்களின்
துன்பமும் துன்மையும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவும் இனிதே நடக்கவும்
நம்மால்  இயன்ற உதவியை செய்து
உழவர்தம் வாழ்க்கை சிறப்பாய் உயர்ந்திட
எங்கும் நிறைந்த இறைவனைத் வேண்டி     
தமிழர் திருநாளாம் புத்தாண்டு நன்னாளில்
வாழ்கவென வாழ்த்துவேன்  நான்


அன்புடன்

வே.நடனசபாபதி




எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே.



பி.கு ஓராண்டுக்குப் பிறகு வலையில் பதிவிட வந்திருக்கிறேன். சில முக்கிய பணி காரணமாக கடந்த 12 திங்களாக பதிவிட இயலவில்லை. இனி உங்கள் அனைவரின் ஆதரவுடன் பதிவிட இருக்கிறேன்