இரயில் கோவை சந்திப்பை அடைந்ததும் இரயில் பெட்டியிலிருந்து இறங்கி வெளியே
செல்ல முயன்றபோது கோவை
சந்திப்பு நிலையம் முழுதும் மாறியிருந்ததைக் கண்டேன்.
1998-2000
ஆண்டுகளில் கோவையில் நான் பணிபுரிந்தபோது கோவை இரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து வெளியே வரவேண்டுமென்றால்
நீண்ட நடைமேடைகளில் நடந்து, படிகளில் இறங்கி வெளியே வரவேண்டும். ஆனால் இப்போதோ நடைமேடையிலிருந்து
கீழே செல்ல நகரும் படிகள் (Escalators) உள்ளன. சந்திப்பின்
முகப்பும் முற்றிலும் மாறியுள்ளது
நகரும்
படிகளில் இறங்கி வெளியே வந்து சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றவுடன் நண்பர்
இந்திரஜித்தை அழைத்து நான் வெளியே வந்துவிட்டதை தெரிவித்தேன். இரயில் சந்திப்பு
நிலையத்திற்கு எதிரே மகிழுந்து நிறுத்த இடம் இல்லாததால், அவர் முன்பே வந்து அருகில்
உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அருகே காத்திருந்தார்,
எனது அழைப்பை கேட்டு அவர் வந்ததும் அவரது
மகிழுந்துவில் ஏறி, அவரோடு 11 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள சரவணம்பட்டியில் இருக்கும் அவரது வீடு இருக்கும் நோக்கி
புறப்பட்டேன்.
என்னுடன்
எங்கள் வங்கியில் பணி புரிந்த நண்பர் திரு இந்திரஜித், வங்கியில் பொது மேலாளராக
பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் கோவை சரவணம்பட்டியில் உள்ளார். முன்பே
சொல்லியிருந்தபடி 28-01-2018 அன்று நடந்த அவரது புதிய வீட்டின் புதுமனை புகு விழாவில் கலந்துகொள்ள இருந்த நானும் என் துணைவியாரும். அதே
நாளில் எங்களது குடும்பத்தில் வேறொரு நிகழ்சி நடக்க இருந்ததால் கலந்துகொள்ள
இயலவில்லை.
கலந்துகொள்ள
முடியாத நிலையை சொல்லி அடுத்த முறை கோவை வரும்போது அவசியம் வருகிறேன் என்று
சொல்லியிருந்தேன். அவரும் அப்படி வரும்போது அவசியம் என் வீட்டில் தங்கவேண்டும்
என்று சொல்லியிருந்தார். ஆனால் இந்த முறையும் எனது துணைவியார் வர இயலாததால் நான்
மட்டும் அவரது இல்லத்திற்கு சென்றேன்.
சரவணம்பட்டி
செல்லும் வழியில் போடப்பட்டிருந்த மேம்பாலம் மற்றும் புதிது புதிதாய்
முளைத்திருந்த அடுக்கு மாடி கட்டிடங்கள் எல்லாம் கோவையின் வளர்ச்சியை பறைசாற்றிக்
கொண்டிருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் கோவையும் ஒரு பெருநகரமாகும் (Metropolis) என்பதை அவை
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
சரவணம்பட்டியில்
முதன்மை சாலையிலிருந்து சற்று தள்ளி உள்ளே வளர்ந்து வரும் குடியிருப்பில் இருந்தது
அவர் வீடு. அவரது வீட்டை சுற்றி வீடுகள் ஏதும் இன்னும் கட்டப்படவில்லை. நிச்சயம்
அந்த இடம் முதன்மையான இடமாக மாறும் என்ற
அசாத்திய நம்பிக்கையில் துணிந்து அந்த இடத்தில் அழகிய வீட்டைக் கட்டியுள்ளார்
நண்பர் திரு இந்திரஜித். அவரது வீட்டின் படம் கீழே
நான் சென்ற அன்று அவரது வீட்டை சுற்றிப்பார்த்தபோது
வீடே புதுக்கோலம் பூண்டிருந்ததைக் கண்டேன். வீட்டின் வளாகச்சுவருக்கு (Compound Wall) உள்ளேயும் வெளியேயும், தான் கல்லூரியில் படித்த வேளாண்
அறிவியலை பயன்படுத்தி, பூச்செடிகளையும் வாழை மற்றும்
சுண்டைச்செடி போன்றவைகளையும் வைத்திருந்தார்.
(திரு
இந்திரஜித் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் பொறியியல் படித்த பொறியாளர்.)
அதுமட்டுமல்ல
வீட்டிற்கு அருகே, அரசால் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், மரச்செடிகளையும்
பூச்செடிகளையும் நட்டிருக்கிறார். வருங்காலத்தில் அரசு பூங்கா அமைக்கும்போது அவைகள்
வளர்ந்து பூங்கா திறக்கும் அன்றே அங்கு குடியேறும் மக்களின் பயன்பாட்டிற்கு உதவும்
என்ற நல்லெண்ணத்தில் செய்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இந்த பணியில் அவருக்கு உறுதுணையாக அவரது
துணைவியாரும் பிள்ளைகளும் உதவியாய் இருக்கிறார்கள் என்பதைக் கேட்டு மேலும்
மகிழ்ச்சியுற்றேன்.
வீட்டை
சுற்றியுள்ள செடிகளுடன் கூடிய படங்கள் அடுத்த பதிவில்.
தொடரும்
வீடு அழகு... அதை விட பூங்கா சிறப்பு...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஅவரின் குடும்பத்தின் நல்லெண்ணத்திற்கு பாராட்டுகளும். வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்குதங்களின் பாராட்டையும், வாழ்த்துகளையும் நண்பர் திரு இந்திரஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துவிடுகிறேன்.
நீக்குவீட்டின் முகப்பு மிகவும் அழகாக இருக்கிறது. தொடர்கிறேன்...
பதிலளிநீக்குபாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!
நீக்குபுதுமனைப் புகுவிழா கண்ட வீடு நன்றாயிருக்கிறது. பாராட்டுகள். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!
நீக்குநகரத்திற்குள் ஏற்படும் வளர்ச்சியையும், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் போகும் வழிப்பாதைகளின் வளர்ச்சியையும் மனத்தில் சீர்தூக்கிப் பார்த்தேன்.
பதிலளிநீக்குஇரண்டும் சமவலர்ச்சி பெற வேண்டும் எனபதே நியாயமான கோட்பாடாக இருந்தால் தானே இரண்டுமே மக்கள் புழகத்திற்கு சமச்சீராக உதவிகரமாக இருக்கும்?
இதில் ஒன்று வேண்டாம், இன்னொன்று இருக்கட்டும் என்றால்?..
உடலின் ஒரு பாகம் மட்டும் உப்பினால் என்னவாகும்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நம்முடைய நாட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்கும் மற்றும் அதனுடைய புறநகர் வளர்ச்சிக்கும் சரியான திட்டமிடல் இல்லாததே சம வளர்ச்சி இல்லாததன் காரணம். ஒரு பகுதி மட்டும் வளர்வது சரியல்ல என்ற தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன்.
நீக்குவீட்டைச் சுற்றிப்பார்க்க ஆவலாக இருக்கிறோம்...
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர் இருப்பதற்கு நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே!
நீக்கு