செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!பொங்கல் வாழ்த்து


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் இயற்கையின் சீற்றத்தால்
இல்லாமல்  போனாலும் நல்லதே நாளை
நடக்குமென நம்பிக்கை கொண்டதனை எதிர்நோக்கும் 
தஞ்சைப் படுகை தரணிவாழ் மக்களின்
துன்பமும் துன்மையும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவும் இனிதே நடக்கவும்
நம்மால்  இயன்ற உதவியை செய்து
உழவர்தம் வாழ்க்கை சிறப்பாய் உயர்ந்திட
எங்கும் நிறைந்த இறைவனைத் வேண்டி     
தமிழர் திருநாளாம் புத்தாண்டு நன்னாளில்
வாழ்கவென வாழ்த்துவேன்  நான்


அன்புடன்

வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே.பி.கு ஓராண்டுக்குப் பிறகு வலையில் பதிவிட வந்திருக்கிறேன். சில முக்கிய பணி காரணமாக கடந்த 12 திங்களாக பதிவிட இயலவில்லை. இனி உங்கள் அனைவரின் ஆதரவுடன் பதிவிட இருக்கிறேன்