ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.18


மய்ய அரசின் இந்தி திணிப்பு பற்றி காங்கிரசிற்குள்ளும் தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.1965 ஆம் ஆண்டு சனவரி 31 நாளன்று அப்போதைய மைசூர் மாநில முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா, மய்ய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர், வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ் ஆகியோர் மைசூரில் ஒன்றுகூடி இது பற்றி விவாதித்தனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.17


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நசுக்க இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக நினைத்து அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டதால் காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.16திடீரென பல்கலைக்கழக விடுதியை காலி செய்ய சொன்னதும் நானும் அறையை காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று விருத்தாசலம் செல்லும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டேன். எங்களது போராட்டம் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டுவிட்டது என்று ஊருக்கு போனவுடன் அப்பாவிடம் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற பயம் அப்போது எனக்கில்லை.