ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.7



1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் அண்ணா அவர்கள், தான் முன்பே எச்சரித்திருந்தபடி நடத்திய போராட்டத்தின் போது, ‘இந்தியாவின் ஒரு பகுதியில் தாய்மொழியாக உள்ள இந்தியை நாடு முழுவதற்கும் அலுவலக மொழியாக ஆக்குவது கொடுங்கோன்மை செயல் ஆகும் (Tyranny) என்றும் அந்த செயல் இந்தி பேசும் பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையும், மேம்பட்ட நிலையையும் கொடுக்கும் என்றும், இந்தி அலுவலக மொழியாக ஆகுமானால் நம்மை இந்தி மொழி பேசுவோர் ஆளவும், நாம் கீழ்நிலை குடிமகன்களாகவும் (Third rated citizens) நடத்தப்படுவோம். ‘என்று முழங்கினார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.6


இந்தி மொழியை திணிப்பதற்கு பெருகி வரும் எதிர்ப்பை கண்ட பிரதமர் திரு ஜவஹர் லால் நேரு அவர்கள் இந்தி மொழி பேசாதவர்களின் கவலையை போக்க உறுதிமொழி ஒன்றை கொடுத்தார் .

புதன், 9 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5


ஆங்கிலத்தை இந்தியுடன் அலுவலக மொழியாக தேர்ந்தெடுத்தை இந்தி ஆதரவாளர்கள் விரும்பாததால் அந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ஜனசங்க கட்சியின் நிறுவனரான திரு ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அது ஏற்கப்படவில்லை.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.4

விடுதலை பெற்று அமைய இருக்கின்ற இந்திய குடியரசுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று வட இந்திய உறுப்பினர்களும், ஆங்கிலம் இருக்கவேண்டும் என்று தென்னிந்திய உறுப்பினர்களும் கருத்தை முன் வைத்ததால் எந்த மொழியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்வது என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.