விடுதலை பெற்று அமைய இருக்கின்ற இந்திய குடியரசுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று வட இந்திய உறுப்பினர்களும், ஆங்கிலம் இருக்கவேண்டும் என்று தென்னிந்திய உறுப்பினர்களும் கருத்தை முன் வைத்ததால் எந்த மொழியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்வது என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
அப்போது தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளலாம் என ஒரு தமிழர் வாதிட்டார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் யாரென அறியுமுன் அவர் சொன்ன கருத்தை முதலில் பார்ப்போம்.
“இங்கு சில நண்பர்கள் பேசும்போது அமையப்போகின்ற நமது நாட்டிற்கு பொது மொழியாக ஒரு இந்திய மொழிதான் இருக்கவேண்டும் என்றும் அதுவும் அது பழமை வாய்ந்த மொழியாக இருக்கவேண்டும் என எடுத்துரைத்தார்கள்.
அதை ஒப்புக்கொள்வது என்றால் இந்த மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் தமிழ் தான் மற்ற எல்லா மொழிகளை விட பழமை வாய்ந்து என நான் துணிவோடு சொல்வேன்.
இந்த மண்ணில் முதலில் பேசப்பட்ட மொழி திராவிட மொழி தான் என்று நான் சொல்வதை எந்த வரலாற்று ஆசிரியரோ அல்லது தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ நிச்சயம் மறுக்கமாட்டார்கள்.
எனது தாய் மொழியான தமிழ் மொழி பழமையானதும் உயர்தர இலக்கிய வளம் மிக்கதுமான மொழியாகும். அதை நேசிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனவே அதை அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளலாம். “
என்று பெருமையோடு சொன்ன தமிழர் வேறு யாருமல்லர்.அவர்தான் திருநெல்வேலியை சேர்ந்த பேட்டையில் பிறந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் அவர்கள். (காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்)
(அவர் நினைவாகத்தான் சென்னையில் உள்ள பெண்கள் கலைக் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.)
அந்த விவாதத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த திரு சங்கர ராவ் தேவ் அவர்கள் சொன்ன ஒரு கருத்தும் கவனிக்கத்தக்கது. “ஆங்கிலத்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் மொழியை தேசிய மொழி என அறிவிக்கக்கூடாது என சொல்பவர்களில் நானும் ஒருவன். தேசிய மொழி என்பது நாடு முழுதுவதற்கும் உள்ள ஒரே மொழி என நீங்கள் எண்ணினால் நான் அதை ஆதரிக்கமாட்டேன். இந்திய நாட்டில் நான் ஒரு இந்தியன். ஆனால் எனது மொழி மராத்தி என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். “
மூன்று ஆண்டுகள் நடந்த விவாதத்திற்கு பிறகு, எல்லோருடைய கோரிக்கையையும் திருப்தி படுத்தும் வகையில் திரு K.M. முன்ஷி மற்றும் திரு கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரால் ஒரு சமரச திட்டம் உருவாக்கப்பட்டதால், அரசின் மொழி பற்றி கடைசியில் ஒரு ஒத்திசைவு (Copromise) எட்டப்பட்டது.
அது முன்ஷி-ஐய்யங்கார் விதிமுறை (Formula) என அழைக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட வரைவு அரசியலமைப்பில் (Draft Constitution) தேசிய மொழி (National Language) என்று குறிப்பிடாமல் அலுவலக மொழி (Officila Language) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த விதிமுறையின் படி தேவநாகரி எழுத்துருவில் உள்ள இந்தி மொழி இந்திய அரசின் அலுவலக மொழியாக இருக்கும் என்றும் 15 ஆண்டுகள் ஆங்கிலமும் அலுவலக மொழியாக இருக்கும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியை ஊக்குவித்து இந்தியாவின் தனித்த (Sole) அலுவலக மொழியாக ஆக்குவது பற்றியும், ஆங்கிலமொழி பயன்பாட்டை படிப்படியாக விலக்கிக்கொள்வது பற்றியும் பரிந்துரை செய்ய ஒரு மொழி ஆணையம் (Language Commission) அமைப்பது என்றும், மய்ய அரசுக்கும் மாநில அரசுக்களுக்கும் இடையே நடைபெறும் அஞ்சல் தொடர்பு மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அரசின் அலுவலக மொழியில் இருக்கும் என்றும், நீதிமன்றம் ,சட்ட வரைவுகள் (Bills), சட்டங்கள், மற்ற வழிமுறைகள் (Regulations) உட்பட எல்லா விதமான சட்ட நடவடிக்கைகளிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் என்றும் இந்தியை பரப்புவதும் பயன்படுத்துவதும் அரசின் கடமையாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறு (Article) எண் 343 இன் படி இந்தியாவின் அலுவலக மொழியாக தேவநாகரி எழுத்துருவில் இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என சொல்கிறது.
அரசின் அலுவலக மொழி பற்றி கூறும் அந்த கூறு(Article) எண் 343 இன் விவரம் கீழே.
Article 343. Official language of the Union-
(1) The official language of the Union shall be Hindi in Devnagari script. The form of
numerals to be used for the official purposes of the Union shall be the international
form of Indian numerals
.
(2) Notwithstanding anything in clause (1), for a period of fifteen years from the
commencement of this Constitution, the English language shall continue to be used
for all the official purposes of the Union for which it was being used immediately
before such commencement:
Provided that the President may, during the said period, by order authorise the use of
the Hindi language in addition to the English language and of the Devnagari form of
numerals in addition to the internationl form of Indian numerals for any of the official
purposes of the Union.
(3) Notwithstanding anything in this article, Parliament may be law provide for the
use, after the said period of fifteen years, of-
(a) the English language, or
(b) the Devnagari form of numerals,
for such purposes as may be specified in the law.
இந்தியா 1947 ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் விடுதலை பெற்றபின், அரசியல் அமைப்பு (Constitution) இந்தியா குடியரசான 1950 ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள் அமலுக்கு வந்தது.
பிறகு இந்த மொழி பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
தொடரும்

மொழிப் போர் பற்றி மிக குறைவாகத்தான் எனக்கு தெரியும். தங்களின் தொடர் விரிவாக அன்றைய வரலாறை புரிந்துக் கொள்ளும் படி இருக்கிறது. மிக்க நன்றி அய்யா!
பதிலளிநீக்குத ம 1
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!
நீக்குதிரு. காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் அவர்கள் என்ற விடயம் எனக்கு புதியவை நன்றி நண்பரே..
பதிலளிநீக்குதொடர்கிறேன்
தமிழ் மணம் 2
வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குஅன்பு நண்பரே இந்தி பற்றிய தங்கள் பதிவுகள் அனைத்தும் , நிகழ் காலமும், வருங்காலமும் அறிய வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்கவை! இதனைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்!
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குவிருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளதை உள்ளபடி எழுதும் உங்களுக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவருகைக்கும், மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குமிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருவூலகப் பதிவு அய்யா!
பதிலளிநீக்குதமிழுக்கு குரல் கொடுத்த காயிதே மில்லத் அவர்களின் சிறப்பினை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அய்யா!
த ம + 4
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!
நீக்குநடந்த ஐகழ்வுகளை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.ஒரு தகவல் களஞ்சியம்
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குமொழிப்போருக்குப் பின்னால் நடைபெற்ற இவ்வளவு நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்கும்போது சற்றே வேதனையாக உள்ளது. வாய்ப்பிருப்பின் நூலாக வெளியிட தாங்கள் முயற்சிக்கலாம். நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குஇன்று, இப்போதுதான் இந்த பதிவை படித்தேன். காயிதே மில்லத் மற்றும் சங்கர ராவ் தேவ் ஆகியோரின் ஆணித்தரமான தாய்மொழிப் பற்றை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தங்களது பின்னூட்டத்திற்கு இன்று பதில் அளிப்பதற்கு மன்னிக்க.
நீக்கு