ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!பொங்கல் வாழ்த்து


வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்

வையத்தில் வாழ்வோர் வயிறார உண்ண

வேளாண்மை செய்து விளைச்சலைத்  தந்த

உழவர் குலத்தை உளமாற  வாழ்த்தி

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்க

தனக்குவமை இல்லா இறைவனை வேண்டி

தரணியில் வாழும் தமிழர்கள் யாவரையும்

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன்  நான்அன்புடன்வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே. சனி, 13 ஜனவரி, 2018

திரும்பவும் வந்துவிட்டேன்.


வலையுலக நண்பர்களுக்கு புத்தாண்டு மற்றும் போகி நாள் நல் வாழ்த்துக்கள்!


கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாளுக்குப் பிறகு நான் வலையுலகத்திற்கே வர இயலவில்லை. அதற்கு பல காரணங்கள். அதில் முதன்மையானது எனது மடிக்கணினியில் ஏற்பட்ட சிக்கல். நன்றாக செயலாற்றிக்கொண்டு இருந்த மடிக்கணினி திடீரென மக்கர் செய்து  செயலிழந்துவிட்டது. பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதற்கு வயதாகிவிட்டது என்று! 2009 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் வாங்கிய அது 8 ஆண்டுகள் உழைத்து ஓய்ந்துவிட்டது.