வலையுலக நண்பர்களுக்கு புத்தாண்டு
மற்றும் போகி நாள் நல் வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம்
நாளுக்குப் பிறகு நான் வலையுலகத்திற்கே வர இயலவில்லை. அதற்கு பல காரணங்கள். அதில் முதன்மையானது
எனது மடிக்கணினியில் ஏற்பட்ட சிக்கல். நன்றாக செயலாற்றிக்கொண்டு இருந்த மடிக்கணினி
திடீரென மக்கர் செய்து செயலிழந்துவிட்டது. பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
அதற்கு வயதாகிவிட்டது என்று! 2009 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் வாங்கிய அது 8 ஆண்டுகள்
உழைத்து ஓய்ந்துவிட்டது.
அதை திரும்பவும் சரியாக்க செலவு
செய்வதை விட புதிய மடிக்கணினி வாங்கலாம் என
முடிவெடுத்தபோது, பலரும் பலவித
ஆலோசனைகளைக் கூறினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புக்களை வாங்கலாம்
என ஆலோசனை கூறினர். நண்பர் ஒருவரோ ‘ஏன்.வீண் செலவு செய்கிறீர்கள்.
இருக்கும் மடிக்கணியை பணி நடுவத்திடம் (Service Centre) கொடுத்து சரி செய்து இன்னும் சிறிது ஆண்டுகள் பயன்படுத்தலாமே?” என்று ஆலோசனை சொன்னார்.
எல்லோருடைய ஆலோசனைகளைக் கேட்டு
ஒரே குழப்பத்தில் இருந்தபோது எனக்கு மெதுவன் (Bun) வாங்கப் போன ஒருவரின் கதை நினைவுக்கு வந்தது.
.
அது என்ன கதை என்கிறீர்களா?
தனியாக இருந்த ஒருவர் இரவில்
சாப்பிடாமல் தூங்கிவிட்டார். திடீரென விழிப்பு வந்து சாப்பிடலாம் என எண்ணியபோது சாப்பிட
வீட்டில் அப்போது ஒன்றும் இல்லாததால், சரி.வெளியே சென்று அடுமனை (Bakery) அங்காடியில் மெதுவன்
வாங்கி சாப்பிடலாம் என்று அங்கு போனாராம். அங்கிருந்த பணியாளரிடம் ‘மெதுவன் நன்றாக இருக்குமா?’ எனக் கேட்டபோது அவர் ‘சாப்பிட்டுப் பாருங்கள் .அப்படியே வெண்ணெய் போல் இருக்கும்.’ என்றாராம்.
மெதுவன் சாப்பிடுவதை விட வெண்ணையையே
வாங்கி சாப்பிடலாமே என்று வெண்ணை விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு சென்று, அங்கிருந்தவரிடம் ‘வெண்ணை
தரமானதா?’ எனக் கேட்டாராம். அதற்கு அவர், ‘ஐயா. உருக்கினால் அசல் விளக்கெண்ணை போல் நயமாய் இருக்கும்.’ என்றாராம்.
அதைக்கேட்ட நம்மவர் சரி வெண்ணய்
சாப்பிடுவதை விட விளக்கெண்ணை சாப்பிடுவோமே.வயிற்றை சுத்தம் செய்ததுபோல் இருக்கும் என்று
விளக்கெண்ணை
விற்பனை செய்யும் கடைக்கு சென்று அங்கு ‘விளக்கெண்ணை சுத்தமானதா?’ என விசாரித்தாராம்.
அதற்கு அங்கிருந்தவர். ‘சாப்பிட்டால் தண்ணீர் சாப்பிட்டது போலவே இருக்கும்.’ என்றதும் சரி வீட்டிற்கே சென்று தண்ணீரைக் குடித்துவிட்டு தூங்கலாம் என்று வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு
படுத்ததும் பசி வயிற்றைக் கிள்ளியதால் தூங்கமுடியவில்லையாம்.
அதுபோல் திரும்பவும் பழைய கருப்பனே
கருப்பன் என்ற நிலைக்கு வந்து விடுவோமோ என்று அச்சம் ஏற்பட்டதால், புதிய மடிக்கணினியை வாங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எனது மகன் HP நிறுவனத்தின் மடிக்கணினியை தான் பயன்படுத்துவதாகவும், அதை வாங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.
அவரின் அறிவுரையின் படி சென்ற வாரம் HP-bs146tu ( 8th Gen Core i5 -825OU 1.6 GHz/4GB RAM/1TB HDD/FHD/Windows10/15.6”) என்ற மின்னும் (Sparkling) கருமை நிற மடிக்கணினியை வாங்கிவிட்டேன். மூன்று நான்கு நாட்களாக பழைய மடிக்கணினியிலிருந்த
தகவல்கள் மற்றும் படங்களை மாற்றும் பணியில் மூழ்கியிருந்தேன்.
இப்போது ஒரு வழியாக புதுக் கணினி
எனது ஆணைளை ஏற்று பதிவிட ஆயத்தமாயுள்ளது.
எனவே இனி பதிவு மூலம் சந்திப்போம்.
வாழ்த்துகள். தமிழ் வலையுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
பதிலளிநீக்குவருகைக்கும், வரவேற்புக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குவருக மீண்டும் இணைய உலகத்தில் இணைய வந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குவருகைக்கும், வரவேற்புக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERJI அவர்களே!
நீக்குவெளியூர் ஆகவே கணினியில் விரிவாக கருத்துரை எழுத இயலவில்லை மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஊருக்கு வந்து நேரம் இருக்கும்போது கருத்து தாருங்கள்
நீக்குHP-bs146tu ( 8th Gen Core i5 -825OU 1.6 GHz/4GB RAM/1TB HDD/FHD/Windows10/15.6”)
பதிலளிநீக்குஇதற்கு விளக்கம் நீங்களே கொடுப்பீர்களா? அல்லது வேறு எங்கு கிடைக்கும்?
வருகைக்கு நன்றி முனைவர் ப. கந்தசாமி ஐயா அவர்களே! HP-bs146tu என்ற மடிக்கணினி என்னென்ன சிறப்பியல்புகளை (Features) கொண்டிருக்கிறது என்பது பற்றி அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறேன்.
நீக்கு8th Gen Core i5 என்பது intel நிறுவனத்தின் Processor ஆகும் இதில் i7 ம் உண்டு. இதுவே கணினி வேகமாக இயங்க உதவும். மேலும் 4 GB RAM Memory நம்மைப்போன்றோருக்கு போதும் என்பதால் இந்த மடிக்கணினியைத் தேர்ந்தெடுத்தேன். மற்றபடி Windows10 மென்பொருளுடன் கூடிய இதனுடைய திரை அகலம் 15.6 அங்குலம்.
நமது தேவையை சொன்னால் மடிக்கணினி விற்பனை செய்யும் நிறுவனங்களே நமது விருப்பத்திற்கேற்ற Model ஐத் தருகிறார்கள். எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன். மற்றபடி தங்களுக்குத் தெரியாததா என்ன?
எங்கே காணோமே என்றிருந்தேன் மின் அஞ்சல் அனுப்பினால் ஒரு வேளை விரும்பமாட்டீர்களோ என்றும் தோன்றியது இப்போதுதெளிவாகி விட்டது வருக வருக. உங்க்சள் வரவு நல் வரவாகுக
பதிலளிநீக்குவருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களிடமிருந்து அஞ்சல் வந்திருந்தால் நிக்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இனிமேல்தான் தங்களுடைய பதிவுகளை படிக்கவேண்டும்.மெதுவாகப் படித்து கருத்திடுவேன்.
நீக்குஒரு வருகை இன்னொரு வருகையை விளைவித்தது!உங்களுக்கு மடிக்கணினி.,எங்களுக்கு உங்கள் பதிவு மீண்டும்!
பதிலளிநீக்குகதை செம!
தொடருங்கள்
வருகைக்கும் சொற்சிலம்பம் ஆடி வரவேற்றமைக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குமடிக்கணினி இனி உங்களை தாலாட்டி தமிழ் பாட வைக்கும் பாராட்டுகள் த.ம.வுடன்
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!
நீக்குவாருங்கள் என்று உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. உங்களுக்க்கும் உங்கள் குடும்ப்த்தாருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருகைக்கும், வரவேற்பிற்கும், பொங்கல் வாழ்த்திற்கும் நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!
நீக்குநல்லதொரு குட்டிகதை
பதிலளிநீக்குகதையை இரசித்தமைக்கு நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே!
நீக்குவருக... வருக... புதிய மடிக்கணினிக்கும் தை முதல் நாளுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!
நீக்குபதிவுலகத்தில் மீண்டும் எழுத ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். திரும்பவும் பதிவுகள் எழுத வந்தமைக்கு வாழ்த்துக்கள். கணினி நல்ல கணினிதான். ஹார்ட் டிஸ்க்தான் SSD வாங்கியிருக்கலாம்.SSD-ல் நகரும் இயந்திர அமைப்பு இல்லை. அதனால் எளிதில் பழுதடையாது. இப்பொழுது வாங்கியிருப்பதும் மோசமில்லை.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! மடிக்கணினி வாங்குமுன் உங்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். இப்போது வாங்கியிருப்பதும் மோசமில்லை என்பதால் மகிழ்ச்சியே.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும், நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!
நீக்குதை பிறந்தால் வழி பிறக்கும். இனிய பொங்கல் வாழ்த்துகள் !
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும், நன்றி திரு R.முத்துசாமி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!
நீக்குஇன்றுதான் உங்களின் பதிவினைக் கண்டேன். வருக..வருக.. உங்களது பதிவுகளை வாசிக்கக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குவரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
பதிலளிநீக்குவருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி திரு தனிமரம் நேசன் அவர்களே!
நீக்கு