புதன், 28 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 22இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் 1920 களில், வெளி நாட்டில் International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்து மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகைகளை பெற்றார் என்றும் என்றும் ஆனால் அவர் திட்டத்தின்படி பணத்தை திருப்பித்தரவில்லை என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கல் வாழ்த்து!பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளால்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
அனைவர் மனதிலும் அன்பு பெருகிட
அடியேனின் அன்பான வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சனி, 10 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21

மக்கள் தங்களது பணத்தை கட்டி ஏமாந்த சில திட்டங்கள்... ஏன் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Ponzi Scheme என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 20ஏமாற்றுபவர்களில் பல வகையினர் உண்டு  என்பதை 
முந்தைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன். ஒரு சிலர் தனியே 
வந்து நேருக்கு நேர் (One to one) சாதுர்யமாகப் பேசி, பணம் பறிப்பவர்கள்.அப்படி பேசுகிறவர்களின் பேச்சில் மயங்கியோ 
அல்லது அவர்கள் நடிப்பை நிஜம் என்று நம்பி இரக்கப்பட்டோ 
நம்மில் சிலர் பணத்தை இழப்பதுண்டு.