வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கல் வாழ்த்து!











பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளால்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
அனைவர் மனதிலும் அன்பு பெருகிட
அடியேனின் அன்பான வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!



(மேலே உள்ளவை இன்று எங்களது வீட்டின் முன்பு என் மனைவியும் மகளும் போட்ட கோலங்களின் புகைப்படங்கள்)

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று பொங்கல் வாழ்த்தாக, கவிதை என நினைத்து நான் சில வரிகளை எழுதியதுண்டு. ஆனாலும் அவைகள் மரபுக் கவிதைகள் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ஆண்டு பொங்கல் வாழ்த்தை நிச்சயம் ஒரு வெண்பா வடிவில் எழுதவேண்டும் என எண்ணினேன். உயர் நிலைப்பள்ளியில் S.S.L.C படிக்கும்போது வெண்பா எழுதியதுண்டு. அதற்கு காரணம் தமிழிலே எனக்கு ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர். தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள்.

ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். 'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.

அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிக ரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. இது பற்றி விரிவாகவே எனது நினைவோட்டம் 28 இல் எழுதியிருக்கிறேன்.

ஆனால் அதற்குப் பிறகு கல்லூரியில் வேளாண் அறிவியல் படித்ததால் தமிழை பாடத்தில் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வெண்பா எழுதவேண்டும் ஆசை வந்தாலும் எங்கு போய் வெண்பா இலக்கணத்தை கற்பது என நினைத்துக் கொண்டிருந்தபோது தான் நண்பர் திரு திரு தமிழ் இளங்கோ அவர்களின் பதிவின் மூலம் விடை கிடத்தது. அவருடைய விடை தெரியாத கேள்விக்கு விடை என்ற பதிவை படிக்கும் போது ஊமைக்கனவுகள் என்ற வலைப்பதிவர் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களின் யாப்புச்சூக்குமம் என்ற பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெண்பா எழுதுவதை இவ்வளவு விரிவாக அதே நேரத்தில் யாவரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லமுடியும் என்பதை அப்போது தான் தெரிந்துகொண்டேன். ஆசிரியர் அல்லவா அதனால் மிக அருமையாக, படிப்படியாக விளக்கியுள்ளார் திரு ஜோசப் விஜூ அவர்கள். இதுவரை அவர் யாப்புச்சூக்குமம் பற்றி நான்கு பதிவுகள் இட்டுள்ளார். அவரது முதல் மூன்று பதிவுகளை படித்து இந்த தடவை வெண்பா எழுத முயற்சித்து மேலே உள்ள வெண்பாவை எழுதியுள்ளேன்.

இது சரியாக இருக்கிறதா அல்லது தளை தட்டுகிறதா என ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்கள் தான் சொல்லவேண்டும். ஆனால் ஒன்று சொல்வேன் இலக்கணம் தெரியாதவர்கள் கூட அவரது பதிவுகளை படித்தால் நிச்சயம் வெண்பா எழுதுவார்கள் என்பது உறுதி.

நான் எழுதியுள்ள வெண்பாவில் எதுகை மோனை இலக்கணப்படி இல்லை என்பது எனக்கு தெரியும். அடுத்த முறை இந்த குறையைத் தவிர்ப்பேன். ஒருவேளை எனது வெண்பா இலக்கண விதிக்கு உட்பட்டு இருந்தால் எல்லா பெருமையும் திரு ஜோசப் விஜூ அவர்களையே சாரும். அவருக்கு இந்த பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.












31 கருத்துகள்:

  1. முயற்சி + பயிற்சி = வெற்றி


    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. அருமையான கவிதை....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. உங்களது பழைய நினைவோட்டம் (28) மீண்டும் படித்தேன். அந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட

    // எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார் என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.

    இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.//

    என்ற வரிகள் இன்றும் பொருந்தும். நானும் உங்களைப் போல எல்லாவற்ரிலும் தமிழ் என்று எழுத ஆசைப்படுகிறேன். இருந்தாலும் நேரடி தமிழாக்கம் என்று சிலவற்றில் (உதாரணம்: குளிர்களி (ICE CREAM) உடன்பாடு இல்லாத படியினால் அப்படியே எழுத வேண்டியுள்ளது.

    உங்களது இந்த பதிவைப் பற்றி ஜோசப் விஜு அவர்களுக்கு தெரியப் படுத்தி இருக்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    த.ம.3


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது பழைய பதிவை திரும்பவும் படித்து, கருத்து தந்தமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நான் எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்வதில்லை. எங்கெங்கு ஆங்கில சொல்லுக்கு இணையான, மக்களுக்கு புரிகின்ற தமிழ் சொல் இருக்கிறதோ அதை பயன்படுத்துகிறேன். Ice Cream என்பதை பனிக்கூழ் என்றோ அல்லது பனிப்பாலேடு என்றோ சொல்லலாம். இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என ஐயப்படுவோருக்கு ஒன்றை சொல்வேன். Bus என்பதை பேருந்து என்றபோது ‘தயங்கிய’ மக்கள் இன்று அதை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதில்லையா? எனவே நம்மைப் போன்றோர் பதிவுகளில் எழுதினால் நாளடைவில் அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

      ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களும் எனது வெண்பாவைப் பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். அது பற்றி பின்னர் எழுதுவேன். அவருக்கு எனது வெண்பா பற்றி தெரியப்படுத்தியதற்கு நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. ஆஹா, தாங்களும் வெண்பா எழுத ஆரம்பித்து விட்டீர்களா, மிக்க மகிழ்ச்சி ஐயா.


    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
      உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், இனிய கவிதைக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  8. மனங்கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  10. உங்களுக்கு என் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டாண்டுகாலமாக சித்திரையே தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்று நினைத்தும் கொண்டாடியும் வருகிறோம். அரசில் சில ஆண்டுகாலம் இருந்தவர்கள் தை மாதமே ஆண்டின் முதல் மாதம் என்று சுற்றறிக்கை விடுவதால் அது மாறிவிடுமா. இதையே இன்னொரு பதிவில் ஆரியர்களின் வேலை அது என்று கூறி இருக்கிறார்கள். பாரம்பரியப் பழக்கத்தை அரசு ஆணையால் மாற்றமுடியுமா.? சரியா.?நிற்க. மரபுக் கவிதை எழுதும் ஆசை இருக்கிறதா.?நான் எழுதி இருந்த கவிதை கற்கிறேன் என்னும் பதிவு எளிதாக வசப் படலாம் பாருங்களேன்
    gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html
    நான் 18-ம் தேதிமுதல் 23-ம் தேதி முடிய சென்னையில் இருப்பேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! பாரம்பரிய பழக்கத்தை அரசு ஆணையால் மாற்றமுடியுமா அது சரியா என்றும் அரசில் சில ஆண்டு காலம் இருந்தவர்கள் தை மாதமே ஆண்டின் முதல் மாதம் என்று சுற்றறிக்கை விடுவதால் மாறிவிடுமா என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இது ஆட்சியில் சில காலம் இருந்தவர்கள் கொண்டு வந்த மாற்றம் அல்ல! இவர்கள் ஆட்சிக்கு வருமுன்னரே (ஏன் இவர்கள் பிறப்பதற்கு முன்பே) அதாவது 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் பேராசிரியர் கா. நமச்சிவாயம் அவர்கள் முன்னிலையில் நடந்த தமிழாண்டு தீர்மானிப்புக் கருத்தரங்கத்தில் மறைமலை அடிகளார், பேராசிரியர் கா. நமச்சிவாயம்,தமிழ்த்தென்றல் திரு.வி.க, தமிழ்க்காவலர் கா.சுப்ரமணியம், சைவப்பெரியார் சச்சிதானந்தம், நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய ஏழு முதன்மை தமிழறிஞர்கள் கூடி அறிவியல் பூர்வகமாக விவாதித்து எடுத்த முடிவு இது. எனவே இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் முடிவல்ல.ஆனால் ஏனோ இதற்கு ஒரு கட்சி சாயம் பூசப்பட்டுவிட்டது. இருப்பினும் காலம் ஒரு நாள் சரியான முடிவை எடுக்கும் என நம்புவோம்.

      தங்களது ‘கவிதை கற்கிறேன்’ என்ற பதிவை படித்து எனது கருத்தை பதிவு செய்வேன்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  12. வருகைக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. தங்களிடமிருந்தும கற்றுக்கொள்ள ஆவலாக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! வெண்பா எழுத சொல்லிக் கொடுக்க நான் தமிழறிஞர் அல்லர். நானும் ஒரு தமிழ் மாணவன் தான். இருப்பினும் எனது அனுபவங்களை சொல்வேன்.

      நீக்கு
  14. Enjoyed ur maiden attempt and all the enlightening comments

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ‘பா’ வை இரசித்தமைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  15. இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. சகோதரா வந்தேன் என் கருத்து இருந்தது இறுதிப் பதிவிற்கு.
    சரி பொங்கலைப் பார்ப்பொம் என்று பார்த்தென் கோலங்கள் அழகாக இருந்தது.
    வாழ்த்தைக் கூறுங்கள் வீட்டில்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! தங்களின் பாராட்டுகளை வீட்டில் தெரிவித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு