பதிவுலக நண்பர்கள்
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்து
வானமே பொய்த்தாலும் பூமியே
காய்ந்தாலும்
வையத்தில் வாழ்வோர் வயிறார
உண்ண
வேளாண்மை செய்து
விளைச்சலைத் தந்த
உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி
இனிவரும் நாட்கள் இனிதாய்
இருக்க
தனக்குவமை இல்லா இறைவனை
வேண்டி
தரணியில் வாழும் தமிழர்கள்
யாவரையும்
தைத்திங்கள் நன்னாளாம்
பொங்கல் பெருநாளில்
வாழ்கவென வாழ்த்துவேன் நான்
அன்புடன்
வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன்
போடப்பட்ட கோலங்கள் கீழே.