புதன், 25 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.121965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் நடக்க இருக்கும் கண்டனப் போராட்டம் போல் எங்கள் பல்கலைக் கழக மாணவர்களும் நடத்தபோகிறாமோ இல்லையா என்று தெரியாமல் அன்றிரவு உறங்க சென்றோம்.

வியாழன், 12 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11

எங்களது விடுதியில் நாள் தோறும் காலையும் மாலையும் திருச்சி வானொலியின் மாநிலச் செய்திகளை பொது ஒலிபெருக்கி மூலம் கேட்க வசதி செய்திருப்பார்கள். தமிழகம் முழுதும் மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு போராட்டம் பற்றி செய்தி நிச்சயம் மாநிலச் செய்திகளில் இருக்கும் என்பதால், அன்று மாலை அதாவது 1965 ஆண்டு 25 ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு எல்லோரும் ஆவலுடன் அந்த செய்திக்காக காத்திருந்தோம்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.10

1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகியாக நாங்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டக் குரல் முழங்கி அமைதியான முறையில் ஊர்வலத்தை சிதம்பரத்தில் நடத்திவிட்டு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் கூடினோம்.