வியாழன், 12 நவம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11

எங்களது விடுதியில் நாள் தோறும் காலையும் மாலையும் திருச்சி வானொலியின் மாநிலச் செய்திகளை பொது ஒலிபெருக்கி மூலம் கேட்க வசதி செய்திருப்பார்கள். தமிழகம் முழுதும் மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு போராட்டம் பற்றி செய்தி நிச்சயம் மாநிலச் செய்திகளில் இருக்கும் என்பதால், அன்று மாலை அதாவது 1965 ஆண்டு 25 ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு எல்லோரும் ஆவலுடன் அந்த செய்திக்காக காத்திருந்தோம்.எதிர்பார்த்தது போலவே அந்த செய்திகளில் தமிழகம் முழுதும் மாணவர்கள் பங்கு கொண்ட போராட்டம் பற்றி செய்திகள் இருந்தன. அதோடு அதில் நாங்கள் எதிர்பாராத, ஆனால் எங்களை அனைவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தி ஒன்றும் இருந்தது.

மதுரை மாநகரில் மாணவர்கள் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஊர்வலம் சென்ற வழியில் இருந்த காங்கிரஸ் அலுவலத்திலிருந்து யாரோ வந்து அரிவாளுடன் மாணவர்களைத் தாக்கியதியாகவும், அந்த தாக்குதலில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக சொன்ன செய்தி தான் அது.

தமிழகம் முழுதும் போராட்டம் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும், மதுரையில் ஆளும் கட்சியினர் நடத்திய அந்த கொலைவெறிச் தாக்குதல்தான் மாணவர்களின் இந்தி திணிப்பு போராட்டத்தை அதிதீவிரமாக்கியது என்பதும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளே 1967 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியுற்று ஆட்சியை இழக்கக் காரணமாக இருந்தது என்பதை அவர்கள் காலம் கடந்து புரிந்துகொண்டார்கள்.

அந்த கொலைவெறித் தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தோம். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று எங்களால் அப்போது தீர்மானிக்க இயலவில்லை. எங்களை வழி நடத்தவேண்டிய பொதுச்செயலர் ஒதுங்கிக்கொண்டதால் எங்களது அப்போதைய நிலை மீகாமன் (Captain) இல்லாத கப்பல் போல.

அன்றிரவு உணவு விடுதியில் சாப்பிடும்போதும். திரும்பி அறைக்கு வந்தபின்னும் அந்த தாக்குதல் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். இப்போது போல் கைப்பேசியோ. தொலைக்காட்சியோ, குறுஞ்செய்தி அனுப்பும் வசதியோ அப்போது இல்லாதால் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை அறிய நாளேடுகளையும் வானொலி செய்திகளையும் நம்பியிருக்கவேண்டிய நிலை.

மறு நாள் காலை நாளேடுகளில்தான் தமிழகம் முழுதும் நடந்த போராட்டம் பற்றியும் மதுரையில் நடந்த தாக்குதல் பற்றியும் முழுதும் தெரிந்துகொண்டோம். எங்களில் பெரும்பான்மையோர் தேசிய மாணவர் படை அணிவகுப்பில் 26 ஆம் நாள் கலந்து கொள்வதில்லை என முதல் நாளே தீர்மானித்திருந்ததால் மறுநாள் அதில் கலந்துகொள்ளவில்லை.

மதுரையில் மாணவர்கள் மேல் நடந்த தாக்குதலை கண்டித்து 27 ஆம் நாள் தமிழகம் முழுதும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அன்றைய மாலை செய்தி சொல்லியது.

நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. நான் முன்பே சொல்லியிருந்தபடி எங்களது Eastern Hostel லில் வெவ்வேறு புலத்தில் (Field/Faculty) படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தங்கி இருந்ததால் எந்த நிகழ்ச்சிக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு விடுதியில் உள்ள பொதுச்செயலரையே சாரும்.

எங்களின் சார்பாளரான (Representative) பொதுச்செயலர் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்த விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டதால், மறு நாள் நாங்கள் கண்டனப் போராட்டம் நடத்தப் போகிறாமா அல்லது ஒதுங்கிக்கொள்ள போகிறோமா, அப்படி போராட்டம் நடந்தால் யார் அதை தலைமை ஏற்று நடத்தி செல்ல இருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் எங்களுக்குள் பேசிக்கொண்டு உறங்க சென்றோம்.

மறு நாள் காலை (27-01-1965) நாங்கள் எதிர்பாராத ஒன்று நடந்தது..


தொடரும்38 கருத்துகள்:

 1. ஒரு மாணவரின் தாக்குதலால்தான் இந்தி எதிர்ப்பு சூடு பிடித்திருக்கின்றது...மறுநாள் நடந்தவை அறிய ஆவலுடன்.....
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! மேற்கொண்டு நடந்ததை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.

   நீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ந,இராஜகோபாலன் அவர்களே!

   நீக்கு
 2. அன்பு நண்பருக்கு வணக்கம்
  தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
  முகவரி -
  http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  12.11.2015
  U.A.E. Time: 03.41 pm

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! எனது கருத்தை தங்களது பதிவில் பின்னூட்டமாக தந்துள்ளேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. கண்முன் நிகழும் நிகழ்வுகளாக மனதில் பதியும் வகையில் உள்ளது அய்யா
  "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11 "
  வரலாற்று பதிவு! வாழ்த்தி வரவேற்கிறேன். வளர்க!
  நன்றி அய்யா!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 5. இப்போதுதான் போராட்டத்தின் முழு வீச்சு தெரிய வந்து இருக்கிறது. ஆர்வத்துடன் படித்தேன். இதன் அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 6. போராட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 7. தொடர்கதையின் சுவாரசியத்துடன் வரலாறு சொல்லப்படுகிறது.
  விரிந்த விழிகளுடன், படபடப்பான மனதுடன் காத்திருக்கும் குழந்தைமையின் மனோபாவத்தினுள் செலுத்துகிறது தங்களின் எழுத்து.

  “தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வரலாறு என்றாலே பலருக்கு ‘வேப்பங்காய்’ தான். இந்த தொடர் எழுத ஆரம்பித்தபோது பலருக்கு இது பிடிக்குமோ இல்லையோ என்ற ஐயத்தோடே எழுதத்தொடங்கினேன், இருப்பினும் நடந்ததை நேரில் கண்டவன் என்ற முறையில் அதை என் பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த தொடர் சுவாரஸ்யமாய் இருக்கிறதென தாங்கள் பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

   நீக்கு
 8. மர்மக்கதை போல எதிர்பாராத தருணத்தில் தொடரும் என்று போட்டுவிடுகிறீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வேலூர் திரு கவிப்ரியன் அவர்களே! என்னவோ தெரியவில்லை முக்கியமான இடத்தில் ‘தொடரும்’ என போடும்படி ஆகி விடுகிறது!

   நீக்கு
 9. சுவாரசியமாக செல்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்.
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திருS.P.செந்தில் குமார் அவர்களே!

   நீக்கு
 10. தொடர் முடிந்தவுடன் நூலாக வெளியிட முயற்சி செய்யுங்கள். குறைந்த பட்சம் மின்னூலாக்காமல் விட்டுவிடாதீர்கள். வரலாற்றுப் பங்கெடுப்பும் அது குறித்த நினைவுக் குறிப்புகளும் பதியப்பட வேண்டியவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு தமிழானவன் அவர்களே!

   நீக்கு
 11. விறுவிறுப்பான தொடர். மேலும் நடந்த செய்திகளை படித்து அறியக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திருவை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 12. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 13. வணக்கம்
  ஐயா
  அறியாத விடயத்தை தங்களின் வழி அறிகிறேன்...தொருங்கள். த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 14. //ஊர்வலம் சென்ற வழியில் இருந்த காங்கிரஸ் அலுவலத்திலிருந்து யாரோ வந்து அரிவாளுடன் மாணவர்களைத் தாக்கியதியாகவும், அந்த தாக்குதலில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக சொன்ன செய்தி தான் அது. //

  இப்பொழுது படிக்கும் பொழுதே கோபம் வருகிறது. அக்காலகட்டத்தில் இந்நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருந்திருக்குமென்று உணரமுடிகிறது. கோடரிக்காம்புகள் இல்லாமல் மரம் வெட்டுவது என்பது முடியாத காரியம்தான். ஆனால் தற்காலத்தில் நாம் என்னும் சமுதாய உணர்வு குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
  இந்த வீடியோவைப் பாருங்கள், ஜப்பான் போன்ற நாடுகள் எப்படியிருக்கிறது என்று புரியும்.

  https://www.facebook.com/TheStraitsTimes/videos/10153115038482115/?pnref=story

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் அருமையான காணொளி இணைப்பைத் தந்தமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இப்போது இந்த தகவல் கேட்டு உங்களுக்கு கோபம் வருகிறதென்றால், அப்போது மாணவர்களாயிருந்த எங்களது மன நிலை எப்படி இருந்திருக்கும். அதன் விளைவுதான் பின்னர் நடந்த நிகழ்வுகள்.

   தற்காலத்தில் நாம் என்னும் சமுதாய உணர்வு குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. என்ற உங்கள் கருத்து சரியானதே. அந்த காணொளியில் கண்டது போன்று நம் நாட்டில் நடக்க சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது.

   நீக்கு
 15. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி அவர்களே! தங்களின் பெயர் தெரியாததால் குறிப்பிடமுடியவில்லை.

   நீக்கு
 16. நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 17. உங்கள் எழுத்தில் ,அந்த நிகழ்வுகளின் தாக்கம் மானவர்களிடையே எப்படி இருந்தது என்பதை தெளிவாக உணர முடிகிறது.அடுத்த பகுதிக்கான ஆவலுடன்.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 18. While some of the details are new to me, I wish to confirm that but for students involvement congress could not have been unseated in 1967. Congress probably underestimated students power which manifested itself as tsunami and engulfed it .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசும் அப்போது முதல்வராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்களும் மாணவர்களை ’கிள்ளுக்கீரை’ என நினைத்து உதாசீனப்படுத்தியதால் தான் ஆட்சியை பறிகொடுத்து, 48 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை.

   நீக்கு