2025 ஆம்
ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க்
நகரிலிருந்து அரவிந்த்
சென்னையில் இருக்கும் அவனது
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.‘அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக
வேலையாக இன்று
சென்னை வருகிறேன்.’ என்றதும் அவனது அம்மா
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது
கிளம்புகிறாய்? எங்கிருந்து
பேசுகிறாய். இப்போது அங்கு மணி
என்ன?’ என்றதும்,
அரவிந்த், ‘அம்மா. அவசரவேலையாக என்னை எனது
நிறுவனம் இன்றைக்கே
கிளம்பவேண்டும் என்று சொல்லி
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது
விமான
நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன்.
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில்
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து
சொல்கிறேன்.’
என்று சொல்லிகைப்பேசி இணைப்பை
துண்டிக்கிறான்.