புதன், 23 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14


எங்களில் ஒரு மாணவரை துப்பாக்கி சூட்டில் இழந்துவிட்டு செய்வதறியாது திகைத்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தபோது, ‘மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க எல்லோரும் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தின் முன் கூடி முடிவெடுப்போம் வாருங்கள்.’ என்று கூறிவிட்டு சென்ற மாணவரை தொடர்ந்து, நாங்கள் எல்லோரும் சோகத்தோடும், கோபத்தோடும் ஓட்டமும் நடையுமாக திரும்பவும் வந்த வழியே சென்று நூலக கட்டிடத்தின் முன் கூடினோம்.

புதன், 9 டிசம்பர், 2015

சென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.

சென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, தங்க இடம் இடம் இன்றி, மழையில் மொட்டை மாடியிலும் இன்ன பிற இடங்களிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா முழுதும் உள்ள நல்ல உள்ளங்கள் சாதி இனம் மொழி கடந்து உதவ முன் வந்திருக்கும்போது, இந்தி வெறியர் ஒருவர் எந்த அளவுக்கு இனவெறியோடு இந்த அழிவை விரும்புகிறார் என்பதை கீழே தந்துள்ளேன்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13


எங்களது பல்கலைக்கழக வரலாற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், முகம் தெரியா நண்பர்கள் வெளியிட்ட துண்டறிக்கையை படித்துவிட்டு 27-01-1965 நாளன்று கூடிய கூட்டம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளாமல் தாங்களே முடிவெடுத்து தன்னிச்சையாக அந்த கண்டனப் போராட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதால் அதை ஒரு மௌனப் புரட்சி என்றே சொல்வேன்.