வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 6எடுத்தூண் (Buffet) முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல.  பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட இந்த முறையில் உணவுக்கு செலவு கூட வாய்ப்புண்டு.விருந்து அளிப்போர் மற்றும் விருந்தினர்கள் ஆகியோரே அதற்கு காரணம்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 5


திருமண விழாக்களிலும், மற்ற விழாக்களிலும் நடைபெறும் விருந்தில், விருந்தினர்கள் அமர்ந்து, பிறர் பரிமாறி சாப்பிடும் முறை மாறி, பலவித உணவு வகைகளை எல்லோருக்கும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து, விருந்தினர்கள் தாங்களே உணவைத் தேர்ந்தெடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு நின்றுகொண்டு சாப்பிடும் எடுத்தூண் (Buffet) என்ற முறை தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய், 21 ஜூலை, 2020

எது சிறந்தது ? 4


சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக்  கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

எது சிறந்தது ? 3

தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன். 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

எது சிறந்தது ? 2

பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர்  நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம். 

ஞாயிறு, 21 ஜூன், 2020

எது சிறந்தது ? 1

தஞ்சையில் எங்களது வகுப்புத் தோழர்களின் மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு  நடந்த போது உணவு சாப்பிட்ட முறை பற்றி எழுதும் போது எடுத்தூண் என்று Buffet முறையை குறிப்பிட்டிருந்தேன்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

தொடரும் சந்திப்பு 31

பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்த அன்றே (02-09-2018)  நண்பர் முத்தையாவை தொடர்புகொண்டு சந்திப்பு பற்றி சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், உடனே ‘கவலை வேண்டாம்.நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்று அவர் சொன்னார் என்று எழுதியிருந்தேன் அல்லவா. ஆனால் நடந்ததோ வேறு.