ஞாயிறு, 28 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 31




தேக்குமர திட்டத்தில் சேராமல் தப்பித்த நான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு திட்டத்தை சந்தைப்படுத்தும் முகவரை அண்டை மாநிலத்தில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அப்போது நான் மாற்றல் ஆகி கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊரில் எங்கள் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

செவ்வாய், 16 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 30



வரமாட்டார் என நினைத்திருந்த அந்த முகவர் சரியாக மாலை 5 மணிக்கு திரும்பவும் வந்தார்! வந்தவர் விடாக்கண்டர் போலும் என எண்ணிக்கொண்டு அவரை உட்கார சொன்னேன். பிறகு ‘சொல்லுங்கள் காலையில் நீங்கள் சொல்ல நினைத்த திட்டம் பற்றி.’ என்றேன்.

வெள்ளி, 5 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 29


முன்பெல்லாம் பொது மக்கள் இரண்டு பேரைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஒருவர் வங்கி மேலாளர். மற்றவர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு முன் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற கடும்போட்டி இருக்கும். அதனால் வங்கி மேலாளர்கள் யாரை எங்கு கண்டாலும் ‘நீங்கள் ஏன் எங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கக் கூடாது?’ என நச்சரிப்பார்கள்.