செவ்வாய், 23 டிசம்பர், 2014

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 8



நகைச்சுவையை விரும்பாதார் யார் உளர்? ஆனால் அது பிறர்  
மனதை புண்படுத்தாமல்  இருக்கவேண்டும்.மேலும் 
படிப்போருக்கும், கேட்பொருக்கும் அது  சிரிப்பை அல்லது 
புன் சிரிப்பை உண்டாக்குமானால் உண்மையில் அது 
நகைச்சுவைதான். 

புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !



2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன். என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன். என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

வியாழன், 4 டிசம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 19


பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள 

மாற்று சாவியை  கொண்டு வர நண்பர் திரு வாசுதேவன் புறப்பட்டபோது 

நானும் வருகிறேன் என்று சொல்லி அவரோடு எனது ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அந்த கிளைக்கு புறப்பட்டேன்.

திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி - தொடர் பதிவு



கனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு 
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய 
மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய 
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வெள்ளி, 21 நவம்பர், 2014

Snap Deal ஆ Snap the Deal ஆ?



கடைகளுக்குப் போய் நமக்குத் தேவையானவைகளை வாங்கிய 
காலம் போய், இருந்த இடத்திலிருந்தே நமக்கு பிடித்தவைகளை இணையத்தின் மூலம் கடன் அட்டை (Credit Card) அல்லது 
இணைய வங்கி (Net Banking) மூலமோ பணத்தை செலுத்தி 
வீட்டிற்கே பொருட்களை பெறும் காலம் இது. சில வேளைகளில் 
முன் பணம் செலுத்தாமல் வீட்டிற்கு பொருட்களை 
தூதஞ்சல்(Courier) மூலம் பெறும்போது பணத்தை செலுத்தும்
வசதியையும்  சில மின் வணிகம் நடத்தும் 
நிறுவனங்கள் அனுமதிப்பதுண்டு. 

செவ்வாய், 11 நவம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 18



பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை காசாளரிடம் அப்போதைய பிரதமர் 
திருமதி இந்திரா காந்தி அவர்களின் குரலில் பேசி ரூபாய் 60 இலட்சம் 
பணத்தை பெற்று சென்ற நகர்வாலாவை (Rustom Sohrab Nagarwala)   
காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது அவர் குற்றத்தை 
ஒப்புக்கொண்டார்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 17



1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும் 
ஏன் இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும் 
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என 
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 16




ரூபாய் இரண்டு இலட்சத்தை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தொலைபேசியில் வங்கித் தலைவர் குரலில் பேசியவர் 
சொன்னதின் பேரில் விதிகளுக்கு புறம்பாக பணத்தை கொடுத்த 
அலுவலர் தான் ஏமாந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் 
என்ன செய்வதென்று புரியாமல் விழித்திருக்கிறார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 15



தொலைபேசியில் பேசியவர்  நான் தான்  வங்கியின் தலைவர்  

பேசுகிறேன். என்றதும் முதலில் பதற்றம் அடைந்த அந்த அலுவலர் 

பின்னர் மிகவும் பணிவாக சார்.உதவி மேலாளர் பேசுகிறேன்.மேலாளர் 

இல்லை சார். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் சார்?’ என்று 

கன்னடத்தில் பேசத் தொடங்கிவிட்டார். 

புதன், 8 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 14




அந்த ஏமாற்றுப் பேர்வழியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வங்கி

கிளைக்குத் திரும்பியவுடன் அந்த கிளை மேலாளர் செய்த முதல் 

வேலை தலைமையகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுதான்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 13



சேலம் மத்திய சிறையிலிருந்த அந்த ஏமாற்றுப்பேர்வழியை நீதிமன்றம் 

உள்ள ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் அழைத்து சென்றபோது, 

சேலத்தில்  நான்கு ரோடு எனப்படும் நான்கு சாலைகள் சந்திக்கும் 

இடம் வந்ததும், அந்த நபர் தன்னை அழைத்துப் போக வந்த 

காவலர்களிடம்  ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 12




ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதோடு ஏமாற்றுவோர்களும் திருடுபவர்களும் சும்மா இருக்கமாட்டார்கள் 

என்றும் சொல்லலாம். ஒரு மாவட்ட ஆட்சியாளரையே ஏமாற்றிவிட்டதால் 

நமது கதாநாயகனுக்கு துணிவு வந்து மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற 

முதன்மை அதிகாரிகளிடம் தனது வேலையைக் காட்டத் துணிந்துவிட்டார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

பல்திறப் புலமை விருதும் நானும்!




இன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் தனது பூவை பறிக்க கோடரி எதற்கு? என்ற வலைப்பதிவில்  என்னையும் சேர்த்து ஐந்து வலைப்பதிவர்களுக்கு  பல்திறப் புலமை விருது (The Versatile BloggerAward ) கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த 
நன்றி!

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 11



FIR வாங்கி வர அந்த காவல் நிலையத்திற்கு சென்றபோது கிடைத்த 

வரவேற்பு முன்பு கிடைத்ததிலிருந்து மாறுபட்டிருந்ததை என்னால் 

அறியமுடிந்தது. என்னை அழைத்து சென்ற எங்களது வாடிக்கையாளரைக் 

கண்டதும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் முகத்தில் புன்முறுவலோடு 

எழுந்து நின்று வாங்க அண்ணே. வணக்கம்.உட்காருங்கள் என்று 

சொல்லி வரவேற்றார். பிறகு எங்களுக்கு தேநீர் வாங்கித் தந்து 

உபசரித்தார்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 10



 

என்னை ஏமாற்ற நினைத்தவர் பற்றி காவல் துறையிடம் ஏன் புகார் 

தெரிவிக்கவில்லை என்றால் காவல் துறையிடம் எனக்கு முன்பு   

ஏற்பட்ட அனுபவம் தான் காரணம்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 9




 

தொலைபேசியில் என்னை கூப்பிட்டு எங்கள் Boss குரலில் பேசி தனது 

மைத்துனருக்கு பணம் தர சொன்னவர் போலியானவர் என்பதை எப்படி கண்டுபிடித்தேன் என்ற கேள்வியுடன் சென்ற பதிவை முடித்திருந்தேன்.  

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 8



 

“திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”  

என்கிறார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஏமாற்றுவதும் 

ஒரு திருட்டுதான். ஆனால் இது ஒரு நூதன திருட்டு. இந்த திருட்டை 

செய்பவர்கள் தாங்களாக நிறுத்தினாலோழிய இதை தடுக்கமுடியாது.

சனி, 2 ஆகஸ்ட், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 7



ஏமாற்றுபவர்கள் ஒவ்வொரு தடவையும் ஏதேனும் ஒரு புதிய 

உத்தியைக் கையாண்டு ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. 

எவ்வளவுதான் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் 

ஏமாற்றுபவர்களின் கோணல் புத்தி (Perverted Intelligence) சில சமயம் 

நம்மை ஏமாற வைத்துவிடும்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 6




ஏமாற்றுபவர்களை நமக்கு முன்பின் தெரியாதவர்கள் என்றும் நமக்குத் தெரிந்தவர்கள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். முன்பின் தெரியாதவர்களிடம் ஏமாறுவதென்பது, முன்பே சொன்னதுபோல அவர்களின் பேச்சாற்றலில் மயங்கியோ அல்லது அவர்கள் மேல் ஏற்படுகின்ற அதீத நம்பிக்கையாலோ அல்லது அவர்களின் நடிப்பை நம்பி இரக்கப்பட்டோ அல்லது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பியோ ஏமாறுவது.  

புதன், 16 ஜூலை, 2014

iPad பயன்படுத்தினால் ஒவ்வாமை (Allergy) வருமா?



இன்றைக்கு iPad இல்லாதவர்களைக் காண்பது அரிது. இதுவரை 
மடிக்கணினி மூலம்  மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்த பலர், 
இப்போது iPad மூலம் தான் அனுப்புகிறார்கள். ஏன் பலர் வலைப்பதிவில் 
எழுதுவதும் இதன் மூலம் தான். கர்ணனும் கவச குண்டலங்களும் 
போல் எப்போதும் iPad உடன் இருப்பவர்களும் உண்டு.

புதன், 9 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 5



நண்பர் கிருஷ்ணனை எதற்காக மேலாளர் அழைத்திருக்கிறார் என எண்ணிக்கொண்டிருந்தபோது, என்னையும் மேலாளர் அழைப்பதாக 
ஊழியர் ஒருவர் வந்து சொன்னார்.

புதன், 2 ஜூலை, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 4



எங்கள் வங்கியின் கோழிக்கோடு கிளை மேலாளரிடம் தான் கார் 
ஓட்டுனராக இருப்பதாகவும், பழனிக்கு வந்த இடத்தில் பணம் 
போதவில்லை என்றும், 200 ரூபாய் கொடுத்தால் ஊர் போனதும் 
திருப்பி அனுப்பவதாக மலையாளத்தில் என்னிடம் சொன்னவரிடம், 
மேற்கொண்டு விவரங்கள் விசாரிக்க மொழி தெரியாத காரணத்தால் 
பாலக்காட்டை சேர்ந்த என்னோடு வங்கியில் பணிபுரியும் 
நண்பர் கிருஷ்ணன் வீட்டிற்கு அவரை அனுப்பி விவரத்தை 
சொல்லி வரச் சொன்னேன்.  

புதன், 25 ஜூன், 2014

என்னைக் கேட்டால்?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? தொடர் பதிவு 


2011 ஆம் ஆண்டில் தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவுலகில் ஆரம்பமாகியபோது, அதை பதிவுலக வாசகன் என்ற முறையில் படித்து 
இரசித்தவன் நான். நம்மை யாரும் இந்த தொடர் பதிவு எழுதும் சிக்கலில் மாட்டிவிடமாட்டார்கள் என நினைத்திருந்தபோது எனது எண்ணத்தை 
பொய்யாக்கி என்னை முதன் முதல் தொடர் பதிவிட அழைத்தவர் 
திரு சென்னை பித்தன் அவர்கள். அவரது அழைப்பிற்கிணங்கி  
நண்பேண்டா என்ற தொடர் பதிவு தான் நான் எழுதிய முதல் 
தொடர் பதிவு.

வியாழன், 19 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 3

முந்தைய பதிவில் ஒருவர் எப்படி என்னிடம் பொய் சொல்லி 
உதவி கேட்டார் என்பதையும் அவர் சொல்வது பொய் எனத் தெரிந்தும்
நான் ஏன் பணம் கொடுத்தேன் என்பதையும் எழுதியபோது, நம்மவர்கள் 
பற்றி வட இந்தியர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என்பதை 
அடுத்த பதிவில் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. 
அதைப் பற்றிய தகவல் கீழே.  

சனி, 14 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 2



என் முன்னே வந்தவர் திடீரென அழ ஆரம்பித்ததும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது ஆய்வக நண்பர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்க்க நான் சங்கடத்தில் ஆழ்ந்தேன்.

சனி, 7 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 1


ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரையில் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என சொல்வதுண்டு. நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் 

நம்மையறியாமல் சிலசமயம் ஏமாந்துவிடுகிறோம்.

 

வெள்ளி, 30 மே, 2014

எதற்கும் எப்போதும் மாற்று வழி (Alternative) உண்டு!



முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது மன அலைகள் வலைப்பதிவில் 
சமீபத்தில் எனது பெங்களூரு விஜயம் என்ற பதிவில், பெங்களூரு செல்வதற்காக இரயிலில் முன் பதிவு செய்த பின், பெங்களூருவிற்கு புறப்படும் நாளன்று ஏற்பட்ட கவலைகள் பற்றி அவரது பாணியில் வழக்கம்போல் சுவைபட எழுதியிருந்தார்.

திங்கள், 19 மே, 2014

எனது ஓவியங்கள் 15



நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, ‘எனது ஓவியங்கள் 
என்ற தலைப்பில் 14 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன். 

வெள்ளி, 9 மே, 2014

நினைவோட்டம் 80



சென்ற பதிவில் திரு T.R‌. மகாலிங்கம் அவர்கள் பாடிய செந்தமிழ் 
தேன்மொழியாள் என்ற பாட்டு இன்றைக்கும் எல்லோராலும் விரும்பப்படும் 
பாடல் என்று சொல்லியிருந்தேன்.

ஞாயிறு, 4 மே, 2014

நினைவோட்டம் 79



கல்லூரியில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி உடற்கல்வி ஆசிரியர் 
திரு ஜோசப் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் கோலாகலத்துடன் 
நடக்கும்.நான்  படித்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக 
அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை 
அழைத்திருந்தார்கள்.  

புதன், 23 ஏப்ரல், 2014

நினைவோட்டம் 78



எங்கள் புனித வளவனார் கல்லூரியில் நான் படித்தபோது திங்கள் முதல் 
வெள்ளி வரை காலை 10 மணிக்கு துவங்கும் வகுப்புகள், சனிக்கிழமை 
மட்டும் காலை 9 மணிக்கே துவங்கும்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3



A2 Counter க்கு சென்றபோது அங்கிருந்த பெண் ஊழியர் எங்களை 
புன்முறுவலோடு வரவேற்று அமரச் சொன்னபோதே எங்கள் வேலை 
முடிந்துவிட்டது போல உணர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா? 
அது உண்மைதான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதை 
உறுதி செய்தன.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை(Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 2



Navins Presedium என்ற பெயரில் உள்ள கட்டிடத்தில் உள்ள இரண்டு தொகுப்புகளில் (Blocks) எந்த தொகுப்பில்  Passport Seva Kendra இயங்குகிறது என்பதை  அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் விசாரித்து அது இரண்டாவது தொகுப்பில் இயங்குவதை அறிந்து அந்த கட்டிடத்தை அடைந்தோம்.

புதன், 9 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1



எனது கடவுச்சீட்டை 2011 இல் புதுப்பிக்க நான் பட்ட பாடு பற்றி 2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ?  என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.

சனி, 29 மார்ச், 2014

நினைவோட்டம் 77



அடுத்து நான் மறக்க இயலா ஆசிரியர் தர்க்கவியல் (Logic) பாடம் நடத்தியவர்.
அவர் பெயரும் பெர்னாண்டஸ் தான். ஆனால்  திரு பெர்னாண்டஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.

வியாழன், 20 மார்ச், 2014

சிட்டுக்குருவி பற்றிய சேதி தெரியுமா?



சிட்டுக்குருவி பற்றி நிறைய பதிவர்கள் எழுதிவிட்டார்கள். இருப்பினும் நானும் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கிறேன்.

செவ்வாய், 18 மார்ச், 2014

நினைவோட்டம் 76



அக்டோபர் 29, 2013 தேதி பதிவிட்ட நினைவோட்டம் 75ல் திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் (StJoseph’s College) 1960-61 ஆண்டில் புகுமுக வகுப்பு (Pre University Course) படித்தபோது, எனக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் பற்றி எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சி இதோ.

சனி, 8 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 21



ஏற்காடு சென்ற போதும்,ஹொகனக்கல் புறப்பட்ட போதும் அனைவருக்கும் இருந்த உற்சாகம் சுற்றுலாவை முடிந்து திரும்பவும் சேலத்திற்கு பேருந்தில் ஏறி புறப்பட்டபோது காணாமல் போனது போல் தெரிந்தது எனக்கு. 

செவ்வாய், 4 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 20



தொங்குபாலத்தின் வழியே திரும்பி இறங்குபோது கீழே ஓடும் காவிரி ஆற்றைப் பார்த்தபோது அந்த இடத்தை விட்டு வரவே மனமில்லை. திரும்பவும் இந்த இடத்தை எப்போது பார்க்கப் போகிறோமோ என்ற எண்ணமும், அப்படியே மறுபடியும் வந்தாலும் இன்று இருப்பதுபோல் இந்த காவிரி ஆற்றில் தண்ணீர் ஒடுமா என்ற ஐயமும் மனதில் ஏற்பட்டது.  

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கருணைக் கொலையை அனுமதிக்கலாமா?



கருணைக்கொலையை அனுமதிக்கலாமா என்பது இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள கேள்வி. அதற்கு முன் கருணைக் கொலை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம். Euthanasia என்ற ஆங்கிலத்தில் சொல்வதைத்தான் கருணைக் கொலை என்று தமிழில் சொல்கிறோம்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 19



மேலும் அருவியை படம் எடுக்க அந்த கரடு முரடான  பாறைகளின் வழியே ஓரமாக நடந்தபோது, சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பாறைகளின் விளிம்புக்கு அருகில் செல்லாமல் இருக்க கழிகளைக் கட்டி தடுப்பு வைத்திருப்பதையும் கண்டேன்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 18



அநேக திரைப்பட இயக்குனர்களின் வெளிப்புறப் படப்பிடிப்பில் தவறாமல் இடம் பெறும் Cini falls என அழைக்கப்படும் அருவியைக் காண, தொங்கு பாலம் தாண்டி இறங்கினோம்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 17



காவிரி ஆற்றைத் தாண்டி மறுபக்கம் சென்றால் Cini Falls பார்க்கலாம் என்றபோது அதற்கு ஏன் Cini Falls என்று பெயரிடப்பட்டிருக்கிறது என ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டவுடன், உடனே எனக்கு பள்ளியில் படித்த தமிழ் இலக்கணம் நினைவுக்கு வந்தது.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 16



குளியல் துறையில் நான் படமெடுத்துக் கொண்டிருந்தபோது, என்னைப்போல் மாற்றுடை கொண்டு வராதால் குளிக்க முடியாத நண்பர்களும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டனர்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 15


ஹொகனக்கல் அருவியை எப்படி மூன்று மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு குளித்துவிட்டு மதியம் 1.30 மணிக்குள் வருவது என பேசிக்கொண்டு எல்லோரும்  கிளம்பினோம். 

சனி, 1 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 14



ஏற்காடு சென்றுவிட்டு இரவு 10.15 மணிக்கு சேலம் திரும்பிய நாங்கள், மறுநாள் காலை ஹொகனக்கல் செல்ல காலை 6.30 மணிக்கே தயாராக இருக்கவேண்டும் என நண்பர்கள் சொன்னதால் உடனே உறங்க சென்றோம்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

முதுமை வந்தால் மூளை மந்தமாகுமா?








வயதானவர்கள் மெதுவாக செயல் படுவதன் காரணம் அவர்கள் முதுமை அடைந்ததால் மூளை மழுங்கியுள்ளது என்றும் அதனால் அவர்களால் இளைஞர்கள் போல் விரைவாக ஒன்றை புரிந்துகொள்ள இயலாது என்றும் நம்மில் பலர் ஏன் எல்லோருமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம்.


வெள்ளி, 17 ஜனவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 13


எல்லோரும் தேநீர் மற்றும் காஃபியும் அருந்தி முடித்ததும், நிகழ்ச்சியை 
ஏற்பாடு செய்திருந்த நண்பர்களில் ஒருவரான திரு வெங்கட்ரமணன் 
எல்லோரையும் வரவேற்றுவிட்டு, இதுவரை நடந்த சந்திப்புக்கு வராமல் 
இந்த சந்திப்புக்கு முதன் முறையாக வந்திருந்த வகுப்புத்தோழர்கள் 
முன்னால் வந்து தாங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்து வெளியே 
சென்ற பின் வேலை பார்த்த இடங்கள் கடைசியாய் பதவி 
ஓய்வுபெற்றபோது இருந்த பதவி மற்றும் தங்கள் குடும்பம் பற்றிய 
விவரங்களை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

நண்பர் வெங்கட்ரமணன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த
புகைப்படம் கீழே





இந்த சந்திப்பில் நண்பர்கள் முனைவர் அய்யம்பெருமாள் அவர் தம் துணைவியாருடனும், நண்பர் திரு கோகுல்தாஸ் அவர் தம் 
துணைவியாருடனும், முனைவர் சங்கரனும், D.கோவிந்தராஜனும் 
சேதுராமனும் முதன்முறையாக வந்திருந்தனர்.

முதலில் முனைவர் அய்யம்பெருமாள் அவருடைய துணைவியாரோடு 
வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். நண்பர் அய்யம்பெருமாள்  
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எங்களோடு இளநிலை 
வேளாண் அறிவியல் படித்தவர்.பின்பு எங்கள் பல்கலைக் கழகத்திலேயே 
முது நிலை வேளாண் அறிவியலில் நுண்ணுயிரியல் (Microbiology) 
படிப்பை படித்து பின்னர் கனடா சென்று அங்கு காடு வளர்க்கும்  
கலையில்(Forestry) முனைவர் பட்டம் பெற்று, கனடா அரசில்  
பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் கனடாவில் ஒட்டாவாவில்(Ottawa) 
குடியிருப்பவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வெளி நாட்டில் 
வசித்துவருகிறார்.

அடுத்து  நண்பர் திரு கோகுல்தாஸ் அவர் தம் துணைவியாருடனும் 
வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் துணை வேளாண்மை 
இயக்குனராக(Deputy Director of Agriculture) பணியாற்றி ஒய்வு பெற்று 
தற்சமயம் திண்டிவனத்தில் வசித்து வருகிறார்.

நண்பர் கோகுல்தாஸ் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே




அடுத்து முனைவர் சங்கரன் தன்னைப்பற்றிய விவரங்களை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு 
பெற்று தற்சமயம் கோவையில் வசிப்பதாக சொன்னார்


நண்பர் சங்கரன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே





அடுத்து வந்த நண்பர் சேதுராமன் வேளாண்மைத் துறையில் 
பணியாற்றும்போதே இந்தியன் வங்கிக்கு அயல் பணியில் 
(Deputation) சென்றுவிட்டு பின் வேளாண்மைத் துறையிலேயே 
பணியாற்றி இணை வேளாண்மை இயக்குனராக(Joint Director of  
Agriculture) ஒய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிப்பதாக 
சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் வந்த நண்பர் D.கோவிந்தராஜன் தான் இணை வேளாண்மை 
இயக்குனராக(Joint Director of Agriculture) பணியாற்றி ஒய்வு பெற்று 
தற்சமயம் வேலூரில் வசிப்பதாகவும் பணியாற்றும்போது மகளிர் 
முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்ததாக சொன்னார்.

இந்த அறிமுகப்படலத்திற்குப் பிறகு, வேதாத்ரி மகரிஷி அவர்களின் 
மனவளக் கலை பற்றிய இதுவரை தெரியாத தகவல்களை, 
தெளிவாக தங்குதடையின்றி சொல்லி அனைவருடைய 
கவனத்தையும் ஈர்த்தார் திருமதி S.அருட்செல்வி அவர்கள் .இவர் 
தற்போது சேலத்தில் பல்லவன் கிராம வங்கியில் மேலாளராகப் 
பணிபுரிந்து வருகிறார். (இவரை அழைத்து வந்து பேச வைத்த 
சேலம் நண்பர்களை பாராட்டத்தான் வேண்டும்)

மனவளக் கலை மன்றங்களில் போதிக்கும், உடலையும்,
உள்ளத்தையும் தூய்மையாக வைப்பதற்கான வழிமுறைகளான  
உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, காயகல்ப பயிற்சி முறைகள் பற்றி அவர் 
விளக்கியபோது சுமார் ஒரு மணி நேரம் அனைவரும் மெய்மறந்து
அவரது சொற்பொழிவில் ஒன்றியிருந்தோம்.

திருமதி S.அருட்செல்வி அவர்கள் பேசும்போது திரு அய்யம்பெருமாள் 
எடுத்த புகைப்படம் கீழே.



இந்த மனவளக் கலையில் பயிற்சி பெற்ற எங்ககளது வகுப்புத்தோழர் 
ஹரிராமனும் அது பற்றி பேசி அவரது அனுபவம் பற்றி விளக்கினார்.

நண்பர் ஹரிராமன் பேசும்போது திரு அய்யம்பெருமாள் எடுத்த 
புகைப்படம் கீழே.




இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முனைவர் நாச்சியப்பன் நடத்திய புதிர் 
போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

முதலில் திருமதி செல்லையா அவர்களுக்கு திரு செல்லையாவின் 
கையாலேயே பரிசு வழங்கப்பட்டது. திரு செல்லையா தன் 
துணைவியாருடன் கைகுலுக்கி பரிசு தரத் தயாராக இருந்தபோது 
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே  


 
(படத்தில் இடமிருந்து வலமாக நண்பர் செல்லையா முனைவர் 
நாச்சியப்பன் முனைவர் கோவிந்தசாமி மற்றும் திருமதி செல்லையா.)

முனைவர் அந்தோணிராஜுக்கு முனைவர் கோவிந்தாமி பரிசு 
வழங்கியபோது நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே 




நண்பர் சேதுராமனுக்கு நண்பர் பழனியப்பன் பரிசு வழங்கியபோது 
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே

  

பரிசளிப்பு முடிந்ததும், எங்களது அடுத்த சந்திப்பை எங்கு 
வைத்துக்கொள்ளலாம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது 
பற்றி அனைவரும் தங்களது கருத்துக்களை கூறுமாறு நண்பர்கள் 
கேட்டுக்கொண்டனர். 

2011இல் அண்ணாமலை நகரில் கூடியபோது 2016 இல் கோவையில் 
சந்திக்கலாம் என முடிவெடுத்திருந்தாலும், சிலர் வேறு இடத்தில் 
சந்திக்கலாம் என விரும்பியதால் திரும்பவும் அது பற்றி 
விவாதித்தோம்.

பெரும்பான்மையோர் எங்களது பொன் விழா சந்திப்பை தஞ்சையில்  
2016 ஆம் ஆண்டு வைத்துக்கொள்ளலாம் என விரும்பியபோது 
தஞ்சையில் இருக்கும் நண்பர்கள் பாலசுப்ரமணியன், முருகானந்தம், 
நாகராஜன் நாராயணசாமி ஆகியோர் தாங்கள் அந்த சந்திப்பை 
பிரமாண்டமாக நடத்துவதாக ஒத்துக்கொண்டனர்.

தஞ்சையில் சந்திப்பை மிக சிறப்பாக தாங்கள் நடத்துவதாக
நண்பர் பாலசுப்ரமணியன்  மற்ற தஞ்சை நண்பர்கள் சார்பில் 
உறுதியளித்தபோது நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் 
கீழே



நண்பர் நாகராஜன், அந்த சந்திப்பின்போது முத்துப்பேட்டை அருகே 
உள்ள காயல் (Lagoon) அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்றும் 
அங்கே சென்று பார்க்க, தான் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு 
ஒரு நாள் தேவை என்றும் சொன்னார்.

பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த 50 ஆம் ஆண்டை,தஞ்சை 
மாநகரில் சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடுவது என்றும், 
மூன்று நாட்களில் முத்துப்பேட்டை காயலை பார்க்க ஒரு நாள் 
ஒதுக்கிவிட்டு, மீதி நாட்களில் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் 
வேளாங்கன்னி மாதா கோயில் நாகூர் தர்கா முதலிய இடங்களுக்கு 
செல்லலாம் என்றும் எல்லோரும் ஒருமித்து முடிவெடுத்தோம்.

பேசிக்கொண்டிருந்ததில் இரவு 8 மணி ஆகிவிட்டது தெரியவில்லை. 
மறு நாள் காலை ஹோகனேக்கல் செல்லவேண்டும் என்பதால், 
சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றி 
சொல்லி அதோடு கூட்டத்தை முடித்து இரவு உணவை 
சாப்பிடத் தயரானோம்.  

மதிய உணவை தயார் செய்தவர்களே இரவிலும் இட்லி, சப்பாத்தி 
போன்றவைகளைத் தந்து எங்களது வயிற்றுப் பசியைப் 
போக்கினார்கள்.

ஏற்காட்டில் உள்ள இன்னொரு முக்கியமான கல்வி நிறுவனம் பற்றி 
சொல்ல மறந்துவிட்டேன்.அதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். 
1917 இல் முதல் உலக மகா யுத்தம் ஆரம்பித்த போது ஏற்படுத்தப்பட்ட 
Montfort School என்ற உண்டுறை விடுதியைக்கொண்ட கல்வி 
நிறுவனம் தான் அது. 

நல்லொழுக்கத்தையும் உழைப்பையும் குறிக்கோள்களாக கொண்டுள்ள 
இந்த பள்ளி இருபாலருக்கும் உரியது. இந்த பள்ளியில் இடம் 
கிடைப்பது கடினம் என்று சொல்வார்கள்.

இந்தப் பள்ளியில் தான் காலஞ்சென்ற பி.‌டி.‌ஆர்.பழனிவேல் ராஜன் 
அவர்கள், இலங்கை அமைச்சர் தொண்டைமான் அவர்கள், 
தற்போதைய மய்ய அரசின் இணை அமைச்சர் சசி தரூர் அவர்கள், 
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், கிரிக்கெட் வீரர் ரோஜர் 
பின்னி அவர்கள், மற்றும் விக்ரம் கென்னடி என அழைக்கப்பட்ட 
பிரபல திரைப்பட நடிகர்  விக்ரம் அவர்கள் படித்தார்கள் என்பது 
சிலருக்கு புதிய தகவலாய் இருக்கக்கூடும். 

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்கு ஏற்காட்டை விட்டு 
பேருந்தில் புறப்பட்டோம். இரவில் நாங்கள் பயணம் செய்த மூன்று 
பேருந்துகளைத் தவிர வேறு எந்த நடமாட்டமும் அந்த மலைப்
பாதையில் இல்லை. வழியில் எந்த வித பழுதும் பேருந்துகளுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என நினைத்துக்கொண்டே இருந்தேன்.

இரவு 10.15 மணிக்கு சேலத்தில் உள்ள எங்களது தங்குமிடத்தை 
சௌகரியமாக அடைந்து உறங்கச் சென்றோம்.


தொடரும்