திங்கள், 15 செப்டம்பர், 2014

பல்திறப் புலமை விருதும் நானும்!




இன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் தனது பூவை பறிக்க கோடரி எதற்கு? என்ற வலைப்பதிவில்  என்னையும் சேர்த்து ஐந்து வலைப்பதிவர்களுக்கு  பல்திறப் புலமை விருது (The Versatile BloggerAward ) கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த 
நன்றி!





ஏற்கனவே இதே விருதை 17-02-2012 அன்று  நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் தனது நான் பேச நினைப்பதெல்லாம் என்ற வலைப்பதிவில் ஜாம்பவான்களான நான்கு பதிவர்களோடு என்னையும் சேர்த்து ஐவருக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார்.

இந்த விருது கிடைத்தது பற்றி அன்று எழுதியதைத்தான் இன்றும் 
எழுத விரும்புகிறேன். உண்மையிலேயே இந்த விருது பெறத்தகுதி உடையவனா நான் என்பது தான் அது.

காரணம் நான் எதையும் புதிதாக எழுதிவிடவில்லை/படைத்திடவில்லை. பணியில் இருந்தபோது, நான் கண்ட,கேட்ட,அனுபவித்த நிகழ்வுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அவ்வளவே. என்னைவிட அருமையாய் எழுதுபவர்களும், புதிய கருத்தை படைப்பவர்களும் இந்தபதிவுலகில் இருக்கிறார்கள். அவர்களைவிட நான் எவ்வகையிலும் சிறப்பானவனாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

இருப்பினும் விருது தந்து என்னை கௌரவித்த நண்பர் திரு KILLERGEE அவர்களின் நல்லெண்ணத்தையும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த விருதை அவரிடமிருந்து பெறுவதில் உண்மையிலேயே நான்  
பெருமைப்படுகிறேன்.

இந்த விருதைப் பெறுவோர் ஐந்து விதி முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமாம்.
முதலாவதாக விருதினைக் கொடுத்த தளத்தை பகிரவேண்டுமாம்.
இரண்டாவதாக விருது பெற்றதை அதை பெற்றவர்களின் தளத்தில் வெளியிடவேண்டுமாம்.
மூன்றாவதாக விருதை மேலும் ஐந்து பேருக்கு வழங்க  வேண்டுமாம்.
நான்காவதாக விருதினைப்பெற்றவர் தன்னைப்பற்றி 
சொல்லவேண்டுமாம்.

முதல் இரண்டு விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது எளிது. 
அவைகளை நிறைவேற்றிவிட்டேன். மூன்றாவது விதிமுறையின் 
படி ஐவருக்கு மட்டும் விருது தருவதை விட வலைப்பதிவில் 
எழுதுவோர் அனைவருமே பல்துறை அறிவும், திறமையும் வாய்ந்தவர்களாக இருப்பதால் முன்பு செய்தது போல் 
வலைப்பதிவர்கள் அனைவருக்குமே (இவ்விருதை பெற்றவர்கள் 
நீங்கலாக) இந்த பல்திறப் புலமை வாய்ந்த பதிவர் விருதை 
 ( The Versatile blogger award) அளிக்கிறேன்.

நான்காவது விதியின் படி என்னை பற்றி சொல்லவேண்டுமெனில், 
நான் பதிவு எழுத தொடங்கிய ஜனவரி 30 2009 ஆண்டு எழுதிய முன்னோட்டத்தில் எழுதியதையே சொல்ல விரும்புகிறேன்.   

மருத்துவம்படிக்க ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால் 
வேளாண்மை அறிவியல் படித்து மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண்துறைகளில் பணி ஆற்றி பின் வங்கியில் சேர்ந்து
35 ஆண்டு காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.

எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள், சந்தித்த சோதனைகள் மற்றும் சாதித்த சாதனைகள் 
பற்றி எழுத இருக்கிறேன்.அந்த வகையில் தற்போது எனது நினைவலைகளில் வருபவைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

என்னைப்பற்றி இது போதும் என நினைக்கிறேன்.  


இந்த விருதை அளித்த நண்பர் தேவக்கோட்டை
திரு KILLERGEE அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி!





இதோ இன்னும் ஒரு விருது!

நண்பர் திரு KILLERGEE அவர்கள் விருது கொடுத்த மூன்று 
நாட்களுக்குள், நண்பர் திரு மதுரைத் தமிழன் அவர்களும்  
18-09-2014 அன்று  இதே பல்திறப் புலமை விருதை   
(The Versatile BloggerAward ) என்னோடு சேர்த்து 53 
பதிவர்களுக்கு தந்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் 
இந்த பதிவில் தந்திருக்கிறார். அவருக்கும் எனது 
மனமார்ந்த நன்றி!









16 கருத்துகள்:

  1. நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    http://vivadhakalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு ம.பாபு அவர்களே! நீங்களும் வங்கியில் பணி புரிந்தவர் என அறிந்து மிக்க மகிழ்ச்சி. எனது கருத்தை தங்களது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. பலருக்கும் இந்த விருது வழங்கப் படுவதால் இதன் சரித்தன்மையும் முக்கியத்துவமும் குறைகிறதோ என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இந்த விருதுகள் அளிப்பதையும் தொடர் பதிவிடுவதையும் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்பது என் கருத்து.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் நண்பரே... தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்றமைக்கு பாராட்டுக்கள் .
    அட, எல்லோருக்கும் விருது வழங்கி தப்பித்து விட்டீர்களே, நானும் தங்களின் வழியை பின்பற்ற போகிறேன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! என்னைப் பொருத்தவரையில் வலைப்பதிவாளர்கள் அனைவருமே பல்திறப் புலமை பெற்றவர்கள்தான். அதனால் தான் அவ்வாறு செய்தேன்.

      நீக்கு
  7. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா.
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு