1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21
ஆம் நாள் வெள்ளிக்கிழமை
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும்
ஏன்
இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும்
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப்
போகிறது என
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம்
என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!
அன்று காலை புது தில்லியில் உள்ள கன்னோட் பிளேஸ்
மற்றும் அதை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின.கன்னோட் பிளேஸிலிருந்து
பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் பாராளுமன்ற சாலையில்
(சன்சத் மார்க் (Sansad Marg)) சிறிது தூரத்தில் இருந்த ஸ்டேட்
பாங்க்
ஆஃப் இந்தியாவின் கிளையிலும் அதே சுறுசுறுப்பைக்
காணமுடிந்தது.
அந்த கிளையில் பணிபுரிந்துகொண்டிருந்த தலைமை
காசாளர்
(Chief Cashier) திரு
வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா (Ved Prakash Malhotra) அவர்களும் வழக்கம்போல் தனது பணியில் மும்முரமாக
இருந்தபோது அவருக்கு ஒரு
தொலை பேசி அழைப்பு
வந்தது.
அவரை தொலைபேசியில் ‘அழைத்தவர்’ அப்போதைய பிரதமர்
திருமதி இந்திராகாந்தி அவர்கள். நாட்டின் தேசிய
முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு இரகசியப் பணிக்கு (Secret Mission) பணம் தேவைப்படுவதாகவும் எனவே உடனே 60 இலட்சம் ரூபாய்களை
தயார்
செய்து வைக்கும்படியும், அதை தான் அனுப்பும் ஒரு
பங்களா தேசத்தவரிடம் (Bangladeshi) தருமாறும்
சொல்லியிருக்கிறார்.
(அப்போது கிழக்கு பாகிஸ்தானில் உள் நாட்டுப்
போர் நடந்துகொண்டிருந்தது.பங்களா தேஷ் உருவாகாத நேரம்)
திரு மல்ஹோத்ரா அவர்களும் இரகசியப் பணிக்கு பணம்
வேண்டும் என ‘பிரதமரே’ தன்னிடம் நேரடியாக
சொன்னதால்
யாரையும் கலந்து ஆலோசிக்காமலும், பிரதமர்
அலுவலகத்திற்கு திரும்பவும் தொலைபேசியில் பேசி, பேசியது பிரதமர்
தானா
என உறுதி செய்யாமலும் கேட்ட பணமான ரூபாய்
60 இலட்சத்தை வங்கி
பெட்டகத்திலிருந்து எடுத்து அந்த
கிளைக்கு சிறிது நேரத்தில் வந்த‘பிரதமரால்
அனுப்பிவைக்கப்பட்ட’ அந்த பங்களா தேசத்தவரிடம்
கொடுத்துவிட்டார்.
அனுப்பிவைக்கப்பட்ட’ அந்த பங்களா தேசத்தவரிடம்
கொடுத்துவிட்டார்.
அந்த பணத்தை வாங்க வந்தவர், தான் பிரதமர்
அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு விரை தூதர் (Courier)
என்றும் தன்னிடம் கொடுத்த பணத்திற்கான பற்றுச்சீட்டை
(Receipt) பின்னர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளளலாம்
என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு விரை தூதர் (Courier)
என்றும் தன்னிடம் கொடுத்த பணத்திற்கான பற்றுச்சீட்டை
(Receipt) பின்னர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளளலாம்
என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அதை நம்பிய வங்கியின் தலைமை காசாளர் திரு மல்ஹோத்ரா,
பிரதமர்
அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த
பிரதமரின்
முதன்மை செயலர் திரு ஹஸ்கர் (P.N. Haksar)
அவர்களை சந்தித்து தான் கொடுத்த பணத்திற்கான பற்றுச்
சீட்டைக் கேட்டிருக்கிறார்.
அதைக் கேட்டு
அதிர்ச்சி அடைந்த திரு ஹஸ்கர் திருமதி
இந்திரா காந்தி அதுபோல் யாரிடமும் பணம் தர சொல்லி ஆணை பிறப்பிக்கவில்லை
என்றும்
உடனே காவல் துறையினரிடம் அது குறித்து முறையீடு செய்யுமாறும்
சொல்லியிருக்கிறார்.
தான் ஏமாற்றபப்ட்டதை அறிந்த தலைமை காசாளர் உடனே
காவல் துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார். திரு ஹஸ்கர் அவர்களின் ஆணையின் பேரில்
உளவுத்துறையினர் ஒரே நாளில் திருமதி இந்திரா காந்தியின் குரலில் பேசி பணத்தை பெற்று
சென்ற நபரை
கைது செய்ததோடு, பணத்தையும் மீட்டுவிட்டனர்.
கைது செய்யப்பட அந்த நபர் இந்திய இராணுவத்தில்
கேப்டன் ஆக இருந்து பின்னர் RAW எனப்படும்
இந்திய அரசின்
நுண்ணறிவு பிரிவில் அலுவலராக
பணிபுரிந்து வந்த Rustom Sohrab
Nagarwala என்பவர். அவர்
அன்றைக்கு பிடிபடாமல் இருந்திருந்தால்
நேபாளம்
தப்பி சென்றிருப்பாராம்.
ஒன்றை இங்கே சொல்லியாகவேண்டும். ரூபாய் 60
இலட்சத்தை
பெற்று சென்ற நகர்வாலாவுக்கும் அந்த
வங்கியில் கணக்கு
இல்லை. திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கும் அந்த வங்கியில்
கணக்கு
இல்லை.பின் எப்படி அந்த தலைமை காசாளர் காசோலை
ஏதும் இல்லாமல் அந்த பெரிய தொகையை யாரையும்
கலந்து ஆலோசிக்காமல் எந்த கணக்கிலிருந்து எடுத்து கொடுத்தார்
என்பது இன்றுவரை புரியாத
புதிராகவே உள்ளது.
தொடரும்
மர்மங்கள் பலவிதம். அன்றைய நாட்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிகழ்வு இது.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இந்த நிகழ்வு இன்னும் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாகவே வங்கி வாடிக்கையாளரே தனது கணக்கைப் பற்றிய விவரங்களை போனில் கேட்டாலும் சொல்லக் கூடாது. ஆனால் ஒரு பெரிய வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் எப்படி ஏமாந்தார் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குத.ம.1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே பிரதம மந்திரி பேசுகிறார் என்றதும் எல்லா விதிகளும் மறந்து போயிருக்கும் என எண்ணுகிறேன். ‘யானைக்கும் அடி சறுக்கும்.’ என்பது சரிதான்.
நீக்குவிளங்காத மர்மம்!நடந்ததைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறிர்கள்
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே நீங்களே சொல்லிவிட்டீர்கள் விளங்காத மர்மம் என்று. வேறென்ன சொல்ல!
அறிந்திராத தகவல். கதைக்கும், உண்மை நிகழ்வுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, கதை தர்க்க ரீதியாக சரியாக இருக்கவேண்டுமென்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்ச்சி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.
நீக்குஉங்களுடைய கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். அன்றைய காவல் துறையினர் ஒரே நாளில் அந்த ஏமாற்று பேர்வழியை கண்டுபிடித்து, பணத்தையும் மீட்டனர் என்ற சைதி தான் எனக்கு முக்கியமாக பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அளவு தொழில்நுடபம் வளர்ச்சியடையாத நாட்களில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! நம் காவல் துறையினர் மதி நுட்பம் உள்ளவர்கள். தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத நாட்களில் கூட சிக்கலான வழக்குகளை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரதமரின் பெயர் அடிபட்டதால் உடனே விரைந்து செயல் பட்டிருக்கிறார்கள். அவ்வளவே. இதுவே வேறு யாராவதாக இருந்தால் இவ்வளவு விரைவாக குற்றம் புரிந்தவரை கைது செய்திருப்பார்களா என்பது ஐயமே.
அட இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதா? ஆச்சர்யமாக இருக்கிறது!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!
நீக்குஅந்த நகர்வாலா இம்மாதிரி மோசடிகளில் கை தேர்ந்தவரோ, அதனால்தான் காவல்துறையினர் இலகுவாகப் பிடிக்க முடிந்ததோ.செய்தி ஏற்கனவே படித்தது. அதன் பின்னணி இப்போது உங்கள்பதிவு மூலம் நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குபிரதமர் பெயரும் இதில் இருந்ததால் விரைவாகச் செயல்பட்டிருக்கக்கூடும் என்று தான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவிதம் விதமாய் ஏமாற்றுகிறார்கள்.
தொடர்கிறேன்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.
வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குபெரிய தொகையை அவ்வளவு எளிதாகவா கொடுத்தனுப்புவது.
பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் சில நேரங்களில் மதிம்யநிக்விடுகிறார்கள்
நீக்குநீண்ட நாட்களுக்குப் பின் எனது பதிவிற்கு வரும் தங்களுக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! அந்த முக்கிய பொறுப்பில் இருந்தவர் ஏன் அப்படி செய்தார் என்பது புதிராகத்தான் இருக்கிறது.
really surprising news sir
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Prince அவர்களே!
நீக்குபடிக்க படிக்க மர்மக்கதை போல இருக்கிறதே... நண்பரே தங்களை மதுரையில் மிகவும் எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு KILLERGEE அவர்களே! சொந்த ஊருக்கு வந்து விடுமுறை முடிந்ததும் அமீரகம் திரும்பிவிட்டீர்கள் என நினைக்கிறேன். மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க நினைத்திருந்தேன். சொந்த பணி நிமித்தம் என்னால் வந்து கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். அடுத்த முறை சந்திப்போம்.
நீக்குMr.Malhotra was subsequently dismissed from service against which he filed a writ petition which was dismissed in 1973 . Those interested may access this link http://indiankanoon.org/doc/1690662/
பதிலளிநீக்குEven one of the branches of syndicate bank was cheated in a similar fashion but the amount was small around four lacs. Vasudevan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
நீக்கு