செவ்வாய், 11 நவம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 18பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை காசாளரிடம் அப்போதைய பிரதமர் 
திருமதி இந்திரா காந்தி அவர்களின் குரலில் பேசி ரூபாய் 60 இலட்சம் 
பணத்தை பெற்று சென்ற நகர்வாலாவை (Rustom Sohrab Nagarwala)   
காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது அவர் குற்றத்தை 
ஒப்புக்கொண்டார்.எதிர்க்கட்சிகள் அப்போதைய பிரதமருக்கு  இந்த குற்றத்தில் பங்குண்டு 
என விமர்சித்தாலும் நகர்வாலாவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 
நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறையில் 
இருந்தபோது அவர் அந்த குற்றத்தின் பின் உள்ள உண்மையை 
வெளிப்படுத்த இருப்பதாகவும் அது எதிர்பாராத வியப்பூட்டும் செய்தியாக 
இருக்கும் என்றும் சொன்னார்.


ஆனால் அவர் சிறையிலே இருக்கும்போதே இறந்து போனார்.

அதுமட்டுமல்ல அந்த வழக்கை புலானாய்வு செய்து வந்த அலுவலர் 

திரு D.K Kashyap அவர்களும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனது 

அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே அந்த வங்கியின் 

தலைமைக் காசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

 


அப்போது எதிர் கட்சிகள் எல்லாம் அந்த பணம் திருமதி இந்திரா காந்தியின் 
பணம் என்றும் அந்த நிகழ்வின் பின்னணியை அறிய ஒரு விசாரணை 
நடத்தவேண்டும் என்றும் சொன்னபோது திருமதி இந்திரா காந்தி அதற்கு 
செவி சாய்க்கவில்லை.


பிறகு 1997 இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்த நிகழ்வின் 
பின்னணியை விசாரிக்க நீதியரசர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை 
தலைவராகக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை  
(Commission of Inquiry) அமைத்தது.ஓராண்டுக்குபின் 1978 இல் நீதியரசர் ஜகன்மோகன் ரெட்டி அவர்கள் 
கொடுத்த 820 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் திருமதி இந்திரா காந்திக்கு
பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு ஏதும் இல்லையென்பதால், அந்த பணம் திருமதி இந்திரா காந்தியுடையது தான் 
என்பதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும், மேலும்   சரியான 
ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை 
முழுதும் நிராகரிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


குற்றவாளியான நகர்வாலா மார்பு வலி( Myocardial infarcation)  
காரணமாகத்தான் இறந்தார் என்றும் எனவே அவரது இறப்பில் 
எந்தவித சந்தேகமும் இல்லை என்பதையும் தெரிவித்திருந்தது.
  
அதோடு அந்த அறிக்கையின் முடிவில் "There were several lacunae 
and to supply an answer to these would force me to leave the safe haven 
of facts which required to be established by evidence and enter the realm 
of conjecturesand speculation." என்று தெரிவித்திருந்தது.
 

இன்றுவரை அந்த நிகழ்வு அவிழாத மர்ம முடிச்சாகவும் 

புரியாத புதிராகவும் உள்ளது என்பதும் மேற்கொண்டு அந்த 

நிகழ்வு அடியோடு மறக்கப்பட்டுவிட்டது என்பதும் கசப்பான 

உண்மைகள். 

 


இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 

1973 இல் செப்டம்பர் வாக்கில் அந்த வங்கியின் கிளைக்கு 

ஒரு பணிநிமித்தம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. 

1970 ஆம் ஆண்டிலிருந்து 1973 ஆம் ஆண்டு வரை கோவை 

மாவட்டத்தில் உள்ள ஒரு கிளையில் பணிபுரிந்து கொண்டு 

இருந்த என்னை அந்த ஆண்டு மே மாதம் புது தில்லியில் 

இருந்த எங்களது வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு 

மாற்றிவிட்டார்கள்.


 

அப்போது எங்களது வட்டார வளர்ச்சி அலுவலகம் புது டில்லியில் 

கன்னோட் சர்க்கஸ் பகுதியில் இருந்த Super Bazaar கட்டிடத்தில் இருந்தது. 

கீழே அடித்தளத்தில் (Basement) எங்கள் வங்கியின் கிளை இருந்தது. 

அந்த கிளை வாடிக்கையாளர்கள் வசதிக்காக மாலை வேளையிலும் 

இயங்கிக்கொண்டு இருந்தது. அதில் மாலை நேர கிளையின் 

பொறுப்பாளராக பணியாற்றிக்கொண்டு இருந்த திரு க.வாசுதேவன் 

அவர்கள் எனது நண்பர். (இவரைப்பற்றி பின்னர் எழுதுவேன்.)

 


வங்கியில் இருப்பு பெட்டகத்தின் இரண்டாவது சாவியை வேறொரு 

வங்கியில் பாதுகாப்பிற்காக Deposit செய்வது வழக்கம். ஒருவேளை 

முதலாவது சாவி தொலைந்துவிட்டால் அதை எடுத்து  வந்து 

திறந்துவிட்டு பெட்டகத்தின் சாவியை மாற்றுவதுண்டு. சாவி 

தொலையாவிட்டாலும் ஆறு அல்லது பன்னிரண்டு  மாதங்களுக்கு 

ஒரு முறை உபயோகத்தில் உள்ள சாவியை அந்த வங்கியில் 

வைத்துவிட்டு உள்ளே உள்ள சாவியை எடுத்து உபயோகிப்பது 

வழக்கம்.

 


பொதுவாக மாற்று சாவிகளை பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பதுதான் 

வழக்கம். அதே முறையில் எங்களது கன்னோட் சர்க்கஸ் மாலை நேர 

கிளையின் பெட்டகத்தின் சாவியும் பாராளுமன்ற சாலையில் இருந்த 

பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தான் Deposit செய்யப்பட்டிருந்தது. 

 


ஒருநாள் நண்பர் திரு வாசுதேவன் அந்த வங்கியில் உள்ள மாற்று 

சாவியை எடுக்க வேண்டி இருந்ததால் எங்கள் வங்கியின் கிளை 

மேலாளரிடம் அனுமதி கடிதம் பெற்றுக்கொண்டு அந்த கிளைக்கு 

செல்ல ஆயத்தமானர். 

 

நானும் அந்த கிளையை பார்க்க ஆவலாயிருந்ததால் 

நானும் வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரும் 

சரி என்றதும் என்னிடம் அப்போது இருந்த ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அவரை அழைத்துக் கொண்டு அந்த கிளைக்கு 

சென்றேன்.

 


தொடரும்
26 கருத்துகள்:

 1. இந்திராகாந்தி காலத்தில் இம்மாதிரியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதே, தங்களின் இந்த பதிவின் மூலம் தான் தெரிகிறது ஐயா.

  என்ன, அங்கே அந்த சாவி இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அங்கே சாவி இருந்தது. நான் அதைப்பற்றி சொல்ல வரவில்லை. பொறுத்திருங்கள்.

   நீக்கு
 2. அடுத்து நிகழ்ந்த செய்திகளை எதிர்நோக்கித் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 3. தெரியாத மர்மங்கள் தெரிய. வருகிறது,,, அடுத்த பதிவு சீக்கிரம் இடுங்கள் நண்பரே,,, இந்த தளம் இன்று எனக்கு இணைக்கப்பட்டது இனி உடன் படித்து விடுவேன் எனது மதுரை விழா பதிவு காண கீழே,,,
  http://killergee.blogspot.ae/2014/11/blog-post.html?showComment=1415704927486#c8574430856310576796

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! மதுரை பதிவர் விழா பற்றிய கருத்தை தங்கள் பதிவில் இட்டுள்ளேன்.

   நீக்கு
 4. அந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! அன்றே ஊழலில் சிக்கிவிட்டது போல காங்கிரஸ் கட்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 5. சஸ்பென்ஸ் வருகிறது, பராக், பராக்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! சஸ்பென்ஸ் ஒன்றுமில்லை. பதிவு நீண்டுபோனதால் அதோடு நிறுத்திக்கொண்டேன். அவ்வளவே.

   நீக்கு
 6. //திருமதி இந்திரா காந்தி அதற்கு
  செவி சாய்க்கவில்லை.//

  அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அரசியலில் எந்த மாற்றமும் இல்லை என்பதுமட்டும் புரிகிறது. ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு அதிக அவென்யூக்கள் இருப்பதால், இப்பொழுதெல்லாம் விஷயங்கள் வெளிவந்துவிடுகிறது. ஆனால், வரும் தகவல்களிலிருந்து உண்மையைப் பிரித்து பார்ப்பதுதான் சிரமம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இப்போது ஊடகங்கள் இருப்பதால் மக்கள் நொடிக்கு நொடி நடப்பதை தெரிந்துகொள்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமாகவே நடந்துகொள்ளுகின்றன. எனவே உண்மை எது எனத் தெரிந்துகொள்வது சிரமம் தான்.

   நீக்கு
 7. வங்கி ஊழியர்களுக்கான பயிற்சியின் போது, CASE STUDY – இல், இந்த நகர்வாலா வழக்கைப் பற்றியும் எங்களுக்கு சொன்னார்கள். போனில் யாரேனும் சொல்வதைக் கேட்டு வங்கி ஊழியர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பற்காக இதனை மேற்கோள் காட்டுவார்கள்.
  த.ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! என்னதான் பயிற்சி கல்லூரியில் சொல்லிக் கொடுத்தாலும், பணி புரியும்போது கட்டாயத்தின் பேரில், தெரிந்தோ வேண்டுமென்றோ சிலர் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது வேலைக்கும் வாழ்வுக்கும் உலை வைக்கின்றன என்பது தான் உண்மை.

   நீக்கு
 8. அறியாத பல விஷயங்களை அறியத்தந்திருக்கிறீர்கள்... சுவாரஸ்யமான அடுத்த பதிவை எதிர்நோக்கி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஸ்கூல் பையன் அவர்களே!

   நீக்கு
 9. துப்பறியும் கதைத் திறில்லாகவே உள்ளது....
  மேலும் காத்திருப்பு...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 10. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
  அன்புடன்
  தங்களின் நண்பன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! தங்களது பதிவிற்கு சென்று பின்னூட்ட மறுமொழியிட்டுள்ளேன். பார்க்கவும்

   நீக்கு
 11. அ்யயா வணக்கம். தங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன்.
  துப்பறியும் கதைபோல “புகழ்பெற்ற“ நகல்வாலா ஊழல் நிகழ்வுகள் சென்றதை அறியத்தந்தமைக்கு நன்றி. சொந்த அனுபவங்களை அழகாகச் சொல்லும் தாங்கள் இதுபோலத் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் நன்றி அப்பறம்... சாவி என்னாச்சு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது பதிவிற்கு முதல் வருகை தரும் திரு முத்து நிலவன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். கலைஞர் தொலைக்காட்சியில் தங்களது உரையைகேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தங்களது பதிவையும் படிப்பதுண்டு. கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. அந்த சாவி தொலையவில்லை. அதுபற்றி வரும் பதிவில் எழுதுவேன்.

   நீக்கு
 12. விறுவிறுப்பான ஓர் ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதைப் போல உள்ளது தங்களின் பதிவு. அரசியல் தலையீடு இருக்கும் எந்த இடமும் இவ்வாறான சூழலை எதிர்கொள்ளவேண்டிய அவலம் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 13. It was a very interesting episode. You seem to be endowed with elephantine memory !
  It surprises me no end that you are capable of recalling even minutest of details despite lapse of few decades !
  Like others I am also waiting to read subsequent blogs relating to this incident ( not to know what happened subsequently..for i know it...but to savor the style ...) Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புது தில்லி அனுபவத்தை மறக்கமுடியுமா?

   நீக்கு