வெள்ளி, 21 நவம்பர், 2014

Snap Deal ஆ Snap the Deal ஆ?கடைகளுக்குப் போய் நமக்குத் தேவையானவைகளை வாங்கிய 
காலம் போய், இருந்த இடத்திலிருந்தே நமக்கு பிடித்தவைகளை இணையத்தின் மூலம் கடன் அட்டை (Credit Card) அல்லது 
இணைய வங்கி (Net Banking) மூலமோ பணத்தை செலுத்தி 
வீட்டிற்கே பொருட்களை பெறும் காலம் இது. சில வேளைகளில் 
முன் பணம் செலுத்தாமல் வீட்டிற்கு பொருட்களை 
தூதஞ்சல்(Courier) மூலம் பெறும்போது பணத்தை செலுத்தும்
வசதியையும்  சில மின் வணிகம் நடத்தும் 
நிறுவனங்கள் அனுமதிப்பதுண்டு. 


இன்றைக்கு நம் நாட்டில் 350 க்கு மேற்பட்ட மின் வணிக 
நிறுவனங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 
இவைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக்காட்டாக புத்தகங்கள்,கைப்பேசிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், 
பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் 
போன்றவைகளை மட்டுமே விற்பனை செய்கின்றன. ஆனால் 
இந்த வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில நிறுவனங்கள் 
எல்லா பொருட்களையுமே விற்பனை செய்கின்றன.

அநேக நுகர்வோருடைய  கவனம் இந்த வகை வணிகத்தின் 
மேல் திரும்பியதன் காரணம் வீட்டிலிருந்தே வேண்டியதைப் 
பெறலாம் என்பதும் சந்தை விலையை விட பொருட்கள் 
விலை குறைவாக இருப்பது தான்.

Amazon, ebay, FirstCry, Flipcart, Gadgets Guru, 
Indiatimes Shopping, Jabang, Myntra,Naaptol, Snapdeal, போன்ற 
நிறுவனங்கள் நம்மில் பலருக்கு தெரிந்த நிறுவனங்கள். 
ஆனால் இது போன்ற மின் வணிக நிறுவனங்கள் 
இம்முறையில் வணிகம் நடத்த அரசு ஏதேனும் கட்டுப்பாடுகள்/விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறதா 
எனத் தெரியவில்லை. அப்படி ஏதும் இல்லாவிடில் உடனே 
அவைகளை உண்டாக்க அரசு முயலவேண்டும்.

ஏனெனில் Gartner இன் சமீபத்திய அறிக்கையின்படி பசிபிக் 
ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் மின் வணிகம் 
ஆண்டிற்கு 60 லிருந்து 70 விழுக்காடு அதிகரித்து 
அதி விரைவாக வளர்ந்து வருவதாகவும், 2015 இல் இந்த 
வணிகம் ரூபாய் 600 கோடிகளை எட்டும் எனத் தெரிகிறது. 
சரியான விதி முறைகள் இல்லாவிடில் நுகர்வோர்களாகிய
நாம் ஏமாற்றப்படும் வாய்ப்புகளும் வரலாம்.

நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனமான Flipcart, 
சென்ற அக்டோபர் 6 ஆம் நாளை ‘The Billion Day’ என 
அறிவித்து  அன்று வாங்கும் பொருட்களின் விலையில் 
மிகப்பெரிய தள்ளுபடி தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தது. 
அதை நம்பி காலையிலேயே கணினி முன் அமர்ந்து 
பொருட்கள் வாங்க முனைந்தோருக்கு அறிவிக்கப்பட்ட 
நேரத்திலேயே அவைகள் விற்கப்பட்டதாக அறிவித்ததும், 
அநேகம் பேருக்கு அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தில் 
ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் காரணமாக  பொருட்கள் 
வாங்க முடியாமல் போனதும் அந்த விற்பனை வெறும் 
விளம்பரத்திற்கு தானோ என எண்ணவைத்தது.

அதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டும் கூட சிலர் 
அந்த நிகழ்வை மோசடி வேலை என்று கூட சாடினர். 
வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சரான 
திருமதி திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கூட அந்த 
நிகழ்வு பற்றி சொல்லும்போது , Flipcart இன் அந்த செயல் 
பற்றி அரசுக்கும் தகவல் வந்திருப்பதாகவும், அது பற்றி 
கவனிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிறுவனங்கள் எப்படி நுகர்வோரை அலைக்கழித்து தொல்லைப்படுத்துகின்றனர் என்பதை என் மகளுக்கு ஏற்பட்ட 
அனுபவம் மூலம் நேரடியாக தெரிந்துகொண்டேன். 

Snapdeal நிறுவனம் வெளியிட்டிருந்த விலைப் பட்டியலைப் 
பார்த்து எனது மகள் அக்டோபர் 27 ஆம் நாள் ஒரு 
கைப்பையை வாங்க இணையம் மூலம் பதிவு செய்தார். 
அந்த கைப்பையின் விலை ரூ.1121 என்றும் தள்ளுபடி போக 
நிகர விலை ரூ.588 என்றும் இருந்தது.

பதிவு செய்த சிறிது நேரத்திலேயே அந்த பையை 
வாங்கியதற்கு மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசியில் 
குறுஞ்செய்தி மூலமாகவும் Snapdeal நன்றி தெரிவித்திருந்தது. 
மேலும் அந்த கைப்பை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் 
அனுப்பப்படும் என்றும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் வீட்டில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அக்டோபர் 29 ஆம் தேதி என மகள் வாங்கிய கைப்பை
‘DELHIVERY’ என்ற தூதஞ்சல்(Courier) நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அந்த கைப்பை என் மகளுக்கு 
நவம்பர் 5 ஆம் தேதிக்கு முன்பே வந்தடைந்துவிடும் என்று 
குறுஞ்செய்தி வந்தது. அதில் அந்த தூதஞ்சல் நிறுவனத்தின் 
தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் சொன்னபடி நவம்பர் 5 ஆம் தேதி அந்த பை வந்து 
சேரவில்லை. நவம்பர் 8 ஆம் தேதி ரூ 588 ஐ 
தயாராக வைத்திருக்கும்படியும் அன்று ‘DELHIVERY’  
நிறுவனம் அந்த கைப்பையை ஒப்படைக்கும் என்ற 
குறுஞ்செய்தி வந்தது. அதுபோல் அன்று அந்த கைப்பை 
வந்து சேர்ந்தது. பணத்தையும் கொடுத்துவிட்டோம். .  

ஆனால் அந்த கைப்பையில் இருந்த பற்பிணை (Zip) 
சரியாக இல்லாததால் உடனே கைப்பேசியில் கூப்பிட்டு 
அந்த நிறுவனத்திடம் சொன்னபோது அடுத்த 48 மணி 
நேரத்தில் அந்த கைப்பையை திரும்ப எடுத்துக்கொள்ள 
(Reverse Pickup), தூதஞ்சல் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு 
செய்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார்கள். மேலும் 
மின்னஞ்சல் மூலமாகவும் அதே செய்தியை தெரிவித்து, 
அந்த பையை திருப்பி அனுப்ப எந்த தொகையும் 
தரவேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள். நாங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை உடனே தீர்த்து 
வைக்கிறார்களே என மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் நவம்பர் 12 ஆம் தேதி வரை யாரும் வந்து திரும்ப 
எடுத்து செல்லவில்லை. உடனே அவர்களுக்கு மின்னஞ்சல் 
மூலம், 94 மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை 
என்று நினைவூட்டல் செய்தி அனுப்பியதும் நவம்பர் 13 ஆம் 
தேதி அசௌகரியம் தந்தமைக்கு வருந்துவதாகவும், 
அந்த பையை திருப்பி அனுப்பும்படியும்  
மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

ஆனால் பையை அனுப்ப ஆகும் செலவை தாங்கள் தருவதாக சொல்லவில்லை. அதுபற்றி அன்றே தொலைபேசியில் 
கேட்டதற்கு, வாடிக்கையாளர் மய்யத்திலிருந்த ஒருவர் 
பையை அனுப்புங்கள். செலவாகும் பணத்தை 
தந்துவிடுகிறோம். என்றார். அதை எழுத்து மூலம் தாருங்கள் 
என்றதற்கு  சரி செய்கிறோம். என்றார்.

அதற்குப் பிறகு எந்த பதிலும் வராததால் நவம்பர் 15 ஆம் தேதி,  
19. மற்றும் 20 தேதிகளில் நினைவூட்டல் அஞ்சல்கள் அனுப்பியும் இன்றுவரை எந்த வித பதிலும் இல்லை. காத்திருக்கிறோம் 
பதில் வரும் என்று!

வழக்கம்போல் கடைக்கு சென்று வாங்கியிருந்தால் நல்ல 
கைப்பையை பார்த்து வாங்கியிருக்கலாம். என் செய்ய! 
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை 
இப்போது உணர்கிறோம்.

அந்த நிறுவனத்தை  குற்றம் சொல்லி பயனில்லை. 
ஏனெனில் அவர்களின் பெயர் மூலம் நமக்கு 
சொல்லியிருக்கிறார்கள்.  Snap (the) Deal என்று!24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், தங்களது அனுபவத்தையும் தெரிவித்தமைக்கு நன்றி திரு சந்திரசேகரன் அவர்களே!

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா.
  சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 3. நல்லதொரு விளிப்புணர்வு பதிவு நண்பரே... காந்திஜியை மறந்து விட்டீர்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! காந்திஜியை மறக்கமுடியுமா அதுவும் நீங்கள் அன்பு கட்டளையிட்ட பிறகு! காத்திருங்கள் அந்த தொடர் பதிவு விரைவில்.

   நீக்கு
 4. நான் இங்கே இணையத்தின் வழியாக பொருட்களை வாங்குகிறேன். Pay pal- மூலம் பணம் செலுத்துகிறேன். Pay pal- நான் பொருட்களை வாங்கி 21 நாட்களுக்குப் பிறகுதான் என்னுடைய பணம் விற்பவர்களுக்கு சென்றடையுமாறு அமைத்துள்ளது. அதற்குள் எனக்கு பிரச்சனை இருந்தால் Pay pal– இடம் சொல்லி பணம் கொடுப்பதை நிறுத்திவிட முடியும். மேலும் $20,000-க்கு இன்சுரன்ஸ்-ம் உண்டு. அதனால் பொருட்களில் பிரச்சனை இருந்தாலும் Pay pal- இடம் சொல்ல முடியும்.

  என்னுடைய அனுபவத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியா அரசாங்கத்தைவிட மக்களின் நற்பண்புகளால்தான் இயங்கிவருகிறது. ஆனால் காலப்போக்கில் அப்பண்புகளில் பலவகையான எதிர்வகையில் மாற்றங்கள் வந்துவிட்டது. நல்லபழக்கங்களை கற்பது கடினம். இழப்பது எளிது. காலத்தைத் தவிர யாரையும் குறை சொல்லமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் ‘நல்லபழக்கங்களை கற்பது கடினம். இழப்பது எளிது.’ என்பது சரிதான். ஆனால் இந்தியாவில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

   நீக்கு
 5. "//கடைக்கு சென்று வாங்கியிருந்தால் நல்ல
  கைப்பையை பார்த்து வாங்கியிருக்கலாம்//".
  உண்மை தான் ஐயா. எதையுமே நாம் கண்ணால் பார்த்து வாங்க வில்லை என்றால், இமாதிரியான தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டும்.

  ஆனால், இங்கு இந்த மாதிரி பிரச்சனையை நானும் சந்தித்திருக்கிறேன். வாங்கும் பொருளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், நாம் உடனே அதை திருப்பி அனுப்பிவிட்டால், வாங்கிய பொருளின் பணமும்,திருப்பி அனுப்பிய செலவையும் அவர்கள் உடனே நமக்கு திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! சும்மாவா சொன்னார்கள் ‘Seeing is believing’ என்று.

   நீக்கு
 6. என்னங்க இது, அக்கிரமமாக இருக்கிறதே.நான் இண்ணைக்கித்தான் அமேஸான் மூலமாக கிண்டில் ரீடர் வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் கதையைப் படித்தவுடன் அந்த எண்ணத்தை கை விட்டு விட்டேன்.

  கடைக்குப் போனோமா, பொருளைப் பார்தோமா, காசைக் கொடுத்தோமா, சாமானை வாங்கினோமா என்றுதான் நாம் பழகியிருக்கிறோம். இந்தப் புது உத்திகளெல்லாம் நமக்கு சரிப்படாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நேற்று கூட Business Line நாளேட்டில் Flipcart மூலம் Pen-drives கேட்டவற்கு மூன்று முறையும் காலி பாக்கெட் வந்தததாகவும், Snapdeal மூலம் Phone கேட்டதற்கு சோப்புக்கள் தந்ததாகவும் கொல்கத்தாவில் ebay க்கு பொருட்கள் தரும் ஒரு நிறுவனம் போலி Canon பொருட்களை வைத்திருந்ததாகவும் செய்தி வந்துள்ளது.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி!

   நீக்கு
 8. அனுபவங்கள் பரவலாகப் பகிரப் பட வேண்டும். எனக்கென்னவோ இந்த மாதிரி shopping செய்வது மேல்தட்டு மக்களிடம் காணப் படும் ஒரு craze என்றே தோன்றுகிறது. எச்சரிக்கை அவசியம் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. பிறிதொரு தளத்தில் என் சிறு கதைத் தொகுப்புக்கு விமரிசனம் எழுதி இருப்பதாக நீங்கள் எழுதி இருந்ததைப் பார்த்தேன். எப்போது வெளியீடு.?ஆவலாக இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களின் சிறுகதை தொகுப்புக்கு மதிப்புரை எழுத இருக்கிறேன் என்பதை தவறுதலாக ‘எழுதிவிட்டேன்’ என தட்டச்சு செய்துவிட்டேன். நிச்சயம் எழுதுவேன்.

   நீக்கு
 10. பட்டால்தானே தெரிகிறது என்பார்கள். பொதுவாக ஆன் லைனில் வாங்கும் பொருட்கள் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. கொஞ்சம் சரியில்லை என்றாலும் அதை சரிசெய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 11. This is probably the price one has to pay to get goods at discounted price sitting at home.However my experience was rather pleasant with Fliplart. Not once they had defaulted in delivery .... all as scheduled and as assured. The Moto E smart phone was delivered in one day. Similarly many of the orders placed were executed perfectly. Probably this is one off incident. Any way the blog is an eye-opener. I would never patronize Snapdeal. I suggest you write to Times of India on Monday next furnishing full facts so that wide publicity could be given to the incident. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி Times Of India நாளேட்டிற்கு எழுதவேண்டியதுதான்.

   நீக்கு
  2. தங்களின் ஆலோசனைப்படி Times Of India நாளேட்டிற்கு எழுத இருந்தேன். அதற்குள் எனது அண்ணன் மகன் யோசனைப்படி Snapdeal இன் Face Book பகுதியில் இந்த பதிவை வெளியிட்டேன். மேலும் எனது Face Book பகுதியிலும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிட்டேன். இன்று காலை குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பிவிட்டு மதியம் ‘DELHIVERY’ என்ற தூதஞ்சல்(Courier) மூலம் அந்த பையை திரும்ப எடுத்துக்கொண்டு போய் இருக்கிறார்கள். பார்ப்போம் எப்போது புதியதை தருகிறார்கள் என்று!

   நீக்கு
 12. இங்கு (Snapdeal ) இந்த மாதிரி பிரச்சனையை நானும் சந்தித்திருக்கிறேன். மேல்தட்டு மக்களிடம் பட்டால்தானே தெரிகிறது பாடம். R.Venkitakrishnan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கிடகிருஷ்ணன் அவர்களே

   நீக்கு