மேலும் அருவியை
படம் எடுக்க அந்த கரடு முரடான பாறைகளின் வழியே
ஓரமாக நடந்தபோது, சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பாறைகளின் விளிம்புக்கு அருகில்
செல்லாமல் இருக்க கழிகளைக் கட்டி தடுப்பு வைத்திருப்பதையும் கண்டேன்.
சில
இடங்களில் தரை வெகு அருகில் இருப்பதுபோல்
தெரிந்தாலும், பாறைகள் இருப்பதால் நிச்சயம் ஆழம் அதிகமாக இருக்கலாம்.
அங்கு நான்
எடுத்த சில புகைப்படங்கள் கீழே.
சிறிது தூரம்
சென்றதும் ஒரு பெரிய மரத்தின் கீழே உள்ள சில சிலைகள் மேல் சிகப்புத்துணி அணிவிக்கப்பட்டு இருப்பதையும்
அவைகளின் அருகே துணியால் கூடாரம் அமைத்து சிலர் அமர்ந்திருந்தப்பதையும் பார்த்தேன்.
அந்த இடத்தில் கீழே இறங்கி செல்ல பாறைகள் படிக்கட்டு போல் இருந்தன. எட்டிப் பார்த்தபோது, ஆற்றின் குறுக்கே படல்
வேலி அமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அங்கிருந்தவர்களிடம்
அது பற்றி கேட்டதற்கு அந்த இடத்தில் நீரின் ஆழம் முழங்கால் அளவுதான் என்றும், நடுவில் படல் இருப்பதால்
தைரியமாக(!) ஆற்றில் நடந்து அக்கரைக்கு செல்லலாம் என்றும் அதற்கு ரூபாய் 50
கட்டணம் என்றும் சொன்னார்கள். அது ஒன்றும் தொங்கு பாலம் போல் சுற்றுலாத்துறையின் கீழ்
வருவதாகத் தெரியவில்லை.
‘காசு
கொடுத்து தேளைக் கொட்டிக்கொள்வது’ என்று சொல்வார்களே அது போன்று
வீணே எதற்கு பணத்தைக் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்குவானேன் என்று நாங்கள் அந்த வழியே
ஆற்றைக் கடக்க விரும்பவில்லை.
அந்த இடத்தில்
நான் எடுத்த புகைப்படங்கள் கீழே.
அந்த வழியே
கஷ்டப்பட்டு அந்த கரையோரமாக இன்னும் முன்னால் சென்றால், இது போன்ற பல
அருவிகளைப் பார்க்கமுடியும் என்றாலும் வெயிலின் தாக்கமும் நேரமின்மையும் எங்களை மேலே
செல்லவிடாமல் தடுத்தன. எனவே திரும்பி மிகவும் கவனத்தோடு காலடி எடுத்து வைத்து நானும்
என் மனைவியும் திரும்பினோம்.
எங்களோடு வராமல்
ஆரம்ப இடத்திலேயே தங்கிவிட்ட திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் எடுத்த சில புகைப்படங்கள்
கீழே.
நண்பர் அய்யம்பெருமாள்
அவர்களும் அந்த இடத்தில் வகுப்புத் தோழர்கள் சிலரை நிற்க வைத்து படமெடுத்திருந்தார்.
அந்த படங்களில் சில கீழே.
திரு பாலசுப்ரமணியன்
& திரு
பழனியப்பன்
திரு செல்லையா
& திரு
நாகராஜன்
மக்கள் திலகம்
எம்ஜியார் பாணியில் சிலர் நின்றபோது நண்பர்
அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படங்கள் கீழே.
முனைவர் அந்தோணி ராஜ்
திரு சரவணன்
திரு ஹரிராமன்
நண்பர் அய்யம்பெருமாளின் புகைப்படம் கீழே.
நேரம் ஆகிவிட்டபடியால்
எல்லோரும் தமிழ்நாடு
சுற்றுலாத்துறை உணவு விடுதிக்குப் போக திரும்பி நடந்தோம். தொங்குபாலத்தின் வழியே இறங்குபோது கீழே ஓடும் காவிரி
ஆற்றைப் பார்த்தபோது மனதில் ஏதேதோ எண்ணங்கள்!
தொடரும்
அருமையான படங்கள் மூலம் பலரையும் அறிய முடிந்தது ஐயா... நன்றி... அனைவருக்கும்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஎல்லோருக்கும் வாய்ப்பதில்லை இப்படி ஒரு இனிய சந்திப்பு;சந்திப்பின் இனிமையைப் பதிவின் எழுத்தும் படங்களும் உணர்த்தி நிற்கின்றன.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
நீக்குநமது சந்திப்பின் போது நீங்கள் குறிப்பிட்டிருந்த உங்கள் கை வண்ணம் கண்டேன். பால் பாயின்ட் பேனாவாலும் இந்தியன் இங்க் கொண்டும் படங்கள் வரைவது அதுவும் இரேசர் உபயோகிக்காமல் வரைவது ஒரு தேர்ந்த ஓவியரால்தான் முடியும். பழைய படங்களை தேதியிட்டு வரைந்த நேரத்தை யும் குறிப்பிட்டு வைத்திருக்கிறீர்கள் . அதில் உங்கள் ஈடுபாடு தெரிகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
நீக்குபடங்கள் அருமை ஐயா
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராதா மனோகரன் அவர்களே!
நீக்குஇவ்வளவு நீரோட்டம் இருந்தாலும், அந்த பாறைகளைப் பார்த்தால் ஒரு வெம்மையான உணர்வு தோன்றுகிறது. உண்மையில் அங்கு குற்றாலம், கொடைக்கானல் போல காற்றில் ஈரப்பதம் இதமானதாக இருந்ததா? படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குவருகைக்கும், படங்களைப் பாராட்டியதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பாறைகள் மேல் நடந்து, நான் படமெடுத்த இடங்கள் குளிர்ச்சியாய் இல்லை ஆனால் கீழே குளியல் துறை அருகேயும், அதன் அருகே இருந்த கரையோரங்களும்,ஆற்றின் இரு பக்கத்திலும் இருந்த அடர்த்தியான மரங்கள் காரணமாக வெயிலின் தாக்கம் இல்லாமல் இதமாக (சுகமாக) இருந்தன.
நீக்குஅறுபது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது இந்த உல்லாச பயணமும் உங்கள் நண்பர்களுடைய சிலருடைய எம்ஜிஆர் பாணி போசும்:)) பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! அய்ம்பதிலும் ஆசை வரும்போது, 60 இல் வரக்கூடாதா என்ன! அன்று நாங்கள் எங்கள் வயதை மறந்து போனோம் என்பது உண்மைதான்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குஇன்னும் பழைய நண்பர்களோடு குடும்பத்துடன், சுற்றுலா செல்லும் அளவிற்கு நட்பும் தொடர்பும் உள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குதங்களது வலைத்தளத்தில், எனது வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திரு ராஜா அவர்களே!
பதிலளிநீக்குஅருமையான படங்கள்....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்கு