சனி, 7 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 1


ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரையில் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என சொல்வதுண்டு. நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் 

நம்மையறியாமல் சிலசமயம் ஏமாந்துவிடுகிறோம்.

 

புத்திசாலித்தனமாக ஏமாற்றுகிறவர்களின் பேச்சாற்றலில் மயங்கியோ 

அல்லது அவர்கள் மேல் ஏற்படுகின்ற அதீத நம்பிக்கையாலோ,அல்லது 

அவர்கள் நடிக்கின்ற நடிப்பை நம்பி இரக்கப்பட்டோ, ஏமாந்து போவதுண்டு. 

பல சமயம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி,பேராசையால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுத்து ஏமாறுவதும் உண்டு.   

 

இது போன்ற ஏமாற்றுக்காரர்களிடமிருந்து எப்படி நம்மைக் காத்துக்கொள்வது என்பதற்கான வழிகாட்டி நூல்கள் எதுவும் 

இல்லை.அநேக ஏமாற்றுக்காரர்கள் கோணல் போக்கு புத்திசாலிகளாக 

(Perverted Intelligentsia) இருப்பதால், ஒவ்வொரு முறையும் அவர்கள் 

புதிய புதிய உத்திகளைக் கையாண்டு ஏமாற்றுகிறார்கள். எனவே அவர்கள் 

எந்த வகையில் ஏமாற்றுவார்கள் என யூகிக்க முடியாததால் அதை தடுக்க 

வழி காண முடியவில்லை என்பதே உண்மை.

 

நாம் ஏமாறாமல் இருக்கவேண்டுமானால் ஒரு முறை நாம் 

ஏமாறவேண்டும். இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை. 

ஒரு முறை ஏமாந்தால் தான் மறுமுறை விழிப்போடு இருப்போம். 

இதை நான் எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

 

நான் முதன் முதல் ஏமாந்த அனுபவத்தை 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் எத்தனைக் காலம்தான் ...? என்ற தலைப்பில் மூன்று 

பதிவுகளாக எழுதியிருந்தேன். அவைகளைப் படிக்காதவர்கள் கீழே 

தந்துள்ள எண்களை சொடுக்கி படிக்கலாம்.

 

                               1   2   3

 

அதன் தொடர்ச்சியாக சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் 

என நினைக்கிறேன்.

 

1968 ஆம் ஆண்டு புது தில்லியில் மய்ய அரசின் நிறுவனமான 

தேசிய விதைக் கழகத்தில் விதைத் தேர்வாய்வு ஆய்வகத்தில் 

(Seed Testing Laboratory) பணி எனக்கு. எங்களது தலைமையகம் அப்போது 

மேற்கு பட்டேல் நகரில் இருந்தாலும் நான் பணிபுரிந்த ஆய்வகம் 

கரோல் பாக் கில் இருந்த அஜ்மல் கான் சாலையும் பூசா சாலையும் 

சந்திக்கு இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய வீட்டின் முதல் தளத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. கீழே வீட்டின் உரிமையாளர் வசித்து வந்தார்.

 

நான் அப்போது அஜ்மல்கான் சாலைக்கு இணையாக இருக்கும் 

சரஸ்வதி மார்க் கில் இருந்த இராமநாத ஐய்யர் மெஸ்ஸில் 

தங்கியிருந்தேன். எனது பணியிடத்திற்கு அருகாமையில் 

(நடந்து போகும் தூரத்தில்) அந்த மெஸ் இருந்ததால் அங்கு 

தங்கியிருந்தேன்.   

 

அப்போதெல்லாம் தில்லியில் வேலை பார்த்த திருமணமாகாத தென்னக இளைஞர்களுக்கு  அஜ்மல்கான் சாலை மற்றும் சர்ஸ்வதி மார்க் கில் 

இருந்த இராமானுஜம் மெஸ், இராமநாத ஐய்யர் மெஸ், சௌத் இந்தியா 

மெஸ், ராவ் மெஸ்,மகாதேவ ஐய்யர் மெஸ் போன்ற உண்டுறை 

விடுதிகளே (Boarding & Lodging) புகலிடம்!


(அந்த மெஸ் வாழ்க்கை பற்றி பின் எழுதுவேன்.)

 

நான் பணிபுரிந்த ஆய்வகத்தில் இருந்த கலப்பின்மை பகுப்பாய்வு 

(Purity Analysis) ஈரப்பதம் பகுப்பாய்வு (Moisture Analysis), வாழுந்திறன் 

முளைப்புத்திறன் & வீரியம் பகுப்பாய்வு (Viability, Germination & Vigour Analysis) 

என்ற மூன்று பிரிவுகளில் என்னை மூன்றாவது பிரிவுக்கு பொறுப்பாளாராக போட்டிருந்தார்கள். ஒரு நாள் மதியம் 12 மணி இருக்கும். பணியில்

தீவிரமாக இருந்தபோது கீழ் தளத்தில் இருந்த காவலர் வந்து என்னைப் 

பார்க்க ஒரு மதராசி வந்திருப்பதாக சொன்னார்.

 

அப்போதெல்லாம் (ஏன் இப்போது கூட) தென்னிந்தியர்களை

மதராசி என்றே அழைப்பது வழக்கம். எனக்கு ஒரே ஆச்சரியம். நம்மைப் 

பார்க்க யார் வந்திருக்கிறார்கள் என்று. சரி. வரச்சொல்லுங்கள். என்றேன்.

 

எனது நண்பர்களும் உறவினர்களும் வருவதாக  இருந்தால் தொலைபேசியில் சொல்லிவிட்டுவருவார்களே யார் அது நம்மைப் பார்க்க வந்திருப்பது என எண்ணிக்கொண்டே இருந்தேன்.

 

அப்போது ஒரு நடுத்தர வயதுள்ள ஒருவர், அழுக்குப் படிந்த வேட்டி 

சட்டையுடன் என்னை நோக்கி வந்தார். அவரது உடையைப் பார்த்த 

என் ஆய்வக நண்பர்கள் என்னை விசித்திரமாகப் பார்த்தனர். அவருக்கும் 

எனக்கு என்ன தொடர்பு என அவர்கள் நினைத்திருக்கலாம்.

 

அவரோ எனக்குத் தெரிந்தவராக இல்லை. இவர் யாரென்றே தெரியாதே. 

இவர் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் வந்து தமிழில் நீங்கள் தானே சபாபதி?’ என்றார்.

 

(நான் எவ்வாறு அலுவலக நண்பர்களிடையே அழைக்கப்பட்டேன் என்பதை 

எனது பெயர் பட்ட பாடு என்ற பதிவில் விரிவாக சொல்லியுள்ளேன்.)

     

ஆமாம். உட்காருங்கள். நீங்கள் யார்? உங்களை யாரென்றே தெரியாதே. 

தவறாக வந்துவிட்டீர்களோ?’ என்றதும் அவர்இல்லை சார். 

உங்களைத்தான் பார்க்க வந்தேன். என்று சொல்லிவிட்டு திடீரென அழ ஆரம்பித்துவிட்டார்.

 

அவர் அழுவதைப் பார்த்ததும் அருகில் இருந்த எனது ஆய்வக நண்பர்கள் 

என்னை வினோதமாக ஒரு சந்தேகத்தோடு பார்க்க, நான் சங்கடத்தோடு 

திகைப்பில் ஆழ்ந்தேன்.

 

 

தொடரும்

26 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  இந்த உலகமே ஒரு நடகமேடை என்ன செய்வது ஐயா. நல்ல தலைப்பு எடுத்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. அடுத்த தொடரை தொடருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  த.ம +1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மணத்தில் வாக்கிட்டமைக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

   நீக்கு
 3. வந்தவர் உண்மையிலேயே தெரிந்தவராக இருந்தாலும், அலுவலகத்தில் வைத்து இதுபோல ரசாபாசமாக ஆக்கினால் நான் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவேன். இரக்கம் காட்டமாட்டேன். நான் சில சமயங்களில், தொலையுது போ, என்று தெரிந்தே ஏமாந்துகொண்டதும் உண்டு. என்ன நடந்தது என்று பார்க்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!அலுவலகத்தில் வந்து இது போன்று நடந்துகொள்பவர்களை மேற்கொண்டு ரசாபாசம் நடக்காமல் இருக்க உடனே வெளியேற்றத்தான் நினைப்போம். ஆனால் அது சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்தது. அன்று. என்ன நடந்தது என்பதை அறிய காத்திருங்கள்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும்,சஸ்பென்ஸ் அறிய தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. எப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளையும் ஏமாற்றிவிடும் ஜகஜாலஜித்தர்கள் இருகிறார்கள்.
  ஏமாற்றதவர்கள் உலகில் உண்டு. அனால் ஏமாறாதவர்கள் யாரும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! உண்மைதான் ஏமாறாதவர்கள் இல்லாமலிருக்கமுடியாது.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 7. ஏமாற்றுபவர்களுக்கு வேடம் தரிப்பது கைவந்த கலை. உங்களை சந்திக்க வந்தவருடைய தோற்றமும் ஒரு வேடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். சஸ்பென்ஸ் தொடர் போல உள்ளது. தொடர்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! உங்களின் யூகம் சரியா என்பது அடுத்த பதிவில் தெரிந்துவிடும்.

   நீக்கு
 8. சுவையான அனுபவ பகிர்வுக்கு காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 9. சஸ்பென்ஸ் தீர்க்கும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ் மணத்தில் வாக்கிட்டமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 10. ஏங்க கதையில தான் சஸ்பென்ஸ் எல்லாம் இருக்கும். உங்க அனுபவத்துல கூட சஸ்பென்ஸ் வைக்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! வாழ்க்கையே ஒரு சஸ்பென்ஸ் தானே! எனவே அனுபவத்தை சொல்லும்போது சஸ்பென்ஸ் வருவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. பொறுத்துக்கொள்ளவும்.

   நீக்கு
 11. Interesting ..waiting for the next episode which may unfold the events leading to probably describing the techniques adopted by the sobbing old man to victimize you. vasudevan.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வாசு அவர்களே! அடுத்த பதிவில் என்ன நடந்தது எனத் தெரியும். காத்திருக்கவேண்டுகிறேன்

   நீக்கு
 12. அவரின் அழுகையை எப்போது நிறுத்துவீர்கள் ? என காத்திருக்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! அவரது அழுகை எப்படி நின்றது என்பது அடுத்த பதிவில்.

   நீக்கு
 13. அடுத்தது என்ன என்பதைப் படிக்க ஆவலுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் எழுதியுள்ளேன்.

   நீக்கு
 14. வருகைக்கும். எனது பதிவுகளில் சில திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்தமைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு